Blog

/Blog

2. கனவு சிப்பியைத் திறந்துபார்!

கனவுகள் பிறக்காத இதயம் என்பது கண்கள் திறக்காத சிலையைப் போன்றது. உறக்கத்தில் சில கனவுகள் பிறக்கும். அவை விழிக்கும்முன்னரே விடை பெற்றுக்கொள்ளும். விழிப்பு நிலையில் வருகிற கனவுகள், செயல்வடிவம் பெற்று வெற்றியை எட்டும். கனவுகள், உற்சாகத்தின் ஊற்றுக்கண்கள். களைப்பும் சலிப்பும் அண்டவிடாமல், மனதைக் காக்கும் மந்திரத் திரைகள். “நடக்க முடியுமா?” என்று தவிக்கும் மனிதனுக்கு, “பறக்க முடியும் பார்” என்று சிறகுகளைப் பரிசளிப்பபை கனவுகள். குடிசையில் வாழும் கதாநாயகன், மாளிகையை ஆளும் இளவரசியைக் காதலிப்பான். காதல் கீதம் ...

1. தோள்கள் தொட்டு பேசவா?

எட்டிப்பிடிக்கும் தூரத்தில்தான் எல்லா வசதிகளும். ஆனால், தொட்டுப் பேசும் உரிமையில் பலருக்கும் தோழமை வாய்ப்பதில்லை. தோள் தொட்டுப் பேசுவது உறவுக்கும் உரிமைக்கும் அடையாளம். பரிவுக்கும், நட்புக்கும் அடையாளம். தோழனே! உனது தோள்களைத் தொட்டு நான், வாழைத்தண்டுபோல் வழவழப்பான வார்த்தைகள் சொல்ல வந்திருக்கிறேன். வாழைத்தண்டு வயிற்றுக்கு நல்லது. இந்த வார்த்தைகளோ உன் வாழ்க்கைக்கு நல்லது. நாம் ஒவ்வொருமே, வாழ்க்கையென்னும் கடலுக்குள்ளே சுழல்கின்ற சூறாவளிகள்தான். நம்மில் சில சூறாவளிகள் கரை கடக்கும் முன்பே வலுவிழக்கின்றன. தடைகளை உடைக்கும் உற்சாகத்தோடு புறப்படும் ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-35

திருவாரூர் அம்மானை ஒன்றில் இப்படி ஒரு பாடல் உண்டு. “ஈசன் பசுவாகி ஏமன் ஒரு கன்றாகி வீசுபுகழ் ஆருரின் வீதி வந்தார் அம்மானை” என்றொருத்தி பாடுகிறாள். பசுவும் கன்றுமாக வந்தார்கள் என்றால் அந்தப் பசுமாடு. கொஞ்சம்கூட பால் கறக்காதோ என்று இன்னொருத்தி கேள்வி எழுப்புகிறாள். “வீசுபுகழ் ஆரூரின் வீதி வந்தார் ஆமாயின் காசளவு பாலும் கறவாதோ அம்மானை” என்று கேட்கிறாள். உடனே முன்னவள் இந்தப் பசு எப்படிப்பட்ட பசு தெரியுமா-? தன் கன்றுக் குட்டியை காலால் எட்டிஎட்டி ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-34

சமயங்கள், மனித உயிரை உய்விப்பதற்கான ஏற்பாடுகள். ஆனால் காலப்போக்கில் தனிப்பட்ட வாழ்வில் நிகழ்த்துகிற அற்புதங்களை அடிப்படையாகக் கொண்டு மதங்களையும் மகான்களையும் மதிப்பிடக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. யோகப் பயிற்சியை ஒருவர் கையாள்கிறபோது அந்தக் கலையில் ஏற்படுகின்ற சில சித்திகள் காரணமாய் சில அபூர்வமான சக்திகள் பிறப்பதுண்டு. பக்தி நிலையிலேயும் அது சாத்தியம். அவை ஒரு மனிதனின் ஆன்மீக முயற்சியில் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள். அதேபோல் சத்திமிக்க அதிர்வுகள் நிரம்பிய ஆலயங்களில் சில பிரார்த்தனைகள் பலிக்கின்றன. ஆனால் பிரார்த்தனைகளுடைய நோக்கம் ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-33

அறிவுக்கான அளவுகோல்கள் கால மாற்றத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். முறை சார்ந்த கல்வி முறை சாறாக் கல்வி என்றெல்லாம் பலவகையாக இன்றைய சமூகம் பேசுகின்றது. ஒரு மனிதனின் மிகப் பெரிய பலம் அவனுக்கு இருக்கிற இயல்பான நுண்ணறிவு. ஒருவன் எவ்வளவு புத்தகங்களைப் படித்தாலும் அவனுடைய இயல்பான அறிவுதான் மேம்பட்டு வெளிப்படும் என்கிறார் திருவள்ளுவர். “நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுமதன் உண்மை அறிவே மிகும்”என்பது திருக்குறள். பட்டம் என்பதுதான் இன்று கல்விக்கான அடையாளமாய் ஆகி இருக்கிறது. ஒரு பல்கலைக்கழகம் தருகிற ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-32

அறிவு என்கிற சொல்லை திருவள்ளுவர் எங்கெல்லாம் கையாள்கிறார் என்று பார்த்து அந்த குறட்பாக்களைக் கொண்டு வந்து கண்ணப்ப நாயனார் வரலாற்றோடு பொருத்திப் பார்த்தால் அத்தனையும் ஆங்கே ஆழகாகப் பொருந்துகின்றன. எடுத்துக்காட்டாக சிலவற்றை நாம் பார்க்கலாம். கண்ணப்பர் தோன்றியது கல்வியறிவு இல்லாத வேட்டுவர் குலம். பிறந்த சூழல் பேதமை நிறைந்ததாக இருந்தாலும் இறைவனை அவர் கண்டுணர்கிறார். இங்கே ஒரு திருக்குறள் பொருத்தமாக அமைகிறது. “பிறப்பென்னும் பேதமை நீங்க சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு” கண்ணப்பர் சென்றதோ பன்றிவேட்டை. கண்டு ...
More...More...More...More...