Blog

/Blog

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-31

நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பரமனுக்கு இப்படி ஒரு துன்பம் நிகழ்ந்துவிட்டதே. என் உயிரினும் இனிய இறைவனுக்கு என்ன ஊறு நேர்ந்ததோ என்றெல்லாம் அவர் பதறுகிறார். “பாவியேன் கண்ட வண்ணம் பரமானார்க்கு அடுத்ததென்னோ ஆவியேன் இனிய எங்கள் அத்தனார்க்கு அடுத்ததென்னோ” என்று திண்ணனார் மனம் பதறுகிறார். பச்சிலைகளைக் கொண்டு வந்து பிழிந்தார். இறைவனுடைய திருக்கண்களில் இருந்து பாய்ந்த ஊதிரம் நின்ற பாடில்லை. வெவ்வேறு வழிகளையெல்லாம் யோசித்துவிட்டு தன்னுடைய ஒரு கண்ணை எடுத்து இறைவனுக்கு அப்ப நினைத்தார். ‘ஊனுக்கு ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-30

பொத்தப்பி என்கிற நாட்டில் வேடுவர் குலத்திற்கு தலைவராக நாகன் என்றொரு வேடுவ மன்னன் இருந்தான். அவனுடைய மனைவியின் பெயர் தத்தை. குழந்தைப் பேறு இல்லாமல் முருகப் பெருமானிடம் வேண்டினார்கள். ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தையை கையில் ஏந்தியபோது கனமாக திண் என்று இருந்ததால் திண்ணன் என்று பெயர் வைத்தனராம். இங்கே ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். எழுத்தறிவில்லாத வேடர்கள்கூட தங்கள் குழந்தைகளுக்கு பெயரிடும் போது ஏதோ ஒரு காரணம் பற்றிப் பெயரிடுகிறார்கள். இன்று நவீன யுகத்தில் ...

காளிநின் உளம்கண்டு கொண்டேன்

மொத்தப் பிரபஞ்சங்கள் எத்தனையோ அத்தனைக்கும் மூச்சாகி நின்றவளே வாழ்க பித்தனின் நடனத்தைப் பக்கத் திருந்தபடி பார்க்கின்ற பேரழகி வாழ்க வித்தைகள் அனைத்துக்கும் வித்தாகி நிற்கின்ற வித்தக சக்தியே வாழ்க யுத்தங்கள் நிகழ்த்திடும் இடதுகால் சிறுவிரல் எய்திடும் வெற்றிகள் வாழ்க   திருவிழி ஓரத்தில் தென்படும் பேற்றுக்காய் திருக்கோவில் தினம்தேடி வந்தேன் வருவினை எரிக்கின்ற வகையேதுந் தெரியாமல் வலிநூறு தினங்கொண்டு நொந்தேன் ஒருமுறை உன்நாமம் உரைத்ததும் பராசக்தி உறுகின்ற சுமைநீங்கக் கண்டேன் கருவெனும் வலைவீழும் காரியம் இனியில்லை காளிநின் ...

நவராத்திரி-9 யார்தான் பராசக்தி?

  உருவா அருவா அருவுருவா உண்மையில் யார்தான் பராசக்தி? அருளா சினமா ஆதரவா அண்மையில் நிற்பாள் பராசக்தி; ஒருவாய் உணவின் ஊட்டமுடன் ஒவ்வாமையும்தான் பராசக்தி; இருளா ஒளியா இடைநிழலா எல்லாம் எல்லாம் பராசக்தி! வேம்பின் கொழுந்தாய் முளைவிடுவாள் வீசும் காற்றாய் வருடிடுவாள் தேம்பும் மகவாய் தெரிந்திடுவாள் தேசுடைக் கதிராய் எழுந்திடுவாள் பாம்பின் படத்தினில் பீடமிடும் பராபரை வடிவுகள் கொஞ்சமல்ல; சாம்ப சதாசிவன் இறைஞ்சுகிற சாம்பவி எங்கள் பராசக்தி! திரிபுரை கரத்தினில் திரிசூலம் திருமுகம் தன்னில் திரிநேத்ரம் பரிபுரை படைத்தாள் முக்காலம் பரிந்தருள் செய்தால் பொற்காலம் எரிதழல் அவளது வடிவாகும் எண்திசை அவளின் உருவாகும் சரிவுகள் நீங்கி நிமிர வைப்பாள் சக்தியின் திருப்பதம் வாழியவே! ...

நவராத்திரி-8 லக்ஷ்மி தேவி!

செவ்வண்ணக் கமலமென சிவந்திருக்கும் வதனம் ஸ்ரீமாயன் கழல்வருடி சிவந்த கரக் கமலம் எவ்வண்ணம் விழுந்தாலும் ஏற்றிவிடும் அபயம் எம்மன்னை மஹாலக்ஷ்மி எழில்பதங்கள் சரணம்! கருணைக்கே ஊற்றுக்கண் கமலைமலர்க் கண்கள் கவலையெலாம் துடைக்கிற களிநகையோ மின்னல் தரும்கைகள் கனகத்தை தடையின்றிப் பொழியும் தஞ்சமென வந்தவரைத் தாங்கும் அன்னை சரணம்! ஆழியிலே வந்தவளாம் அன்னைமஹா லக்ஷ்மி ஆதிசேடப் பள்ளியிலே ஆளும் வரலக்ஷ்மி பாழ்நிலத்தைத் தழைக்கவைக்கும் பாவைதான்ய லக்ஷ்மி பார்த்துப் பார்த்து தரும் வடிவம் பூணும் அஷ்ட லக்ஷ்மி! சங்கரர்க்குக் கனிகொடுத்த ...

நவராத்திரி-7 ஏடு தரித்திடும் ஏந்திழையாள்!

தோன்றும் கலைகளின் தொடக்கமவள் – அவை துலங்கித் தொடரும் விளக்கமிவள்; சான்றவர் இதயச் சந்நிதியில் – நின்று சகல கலைகளும் ஆளுபவள்! வெண்ணிறக் கமலத்தில் வீற்றிருப்பாள் – அவள் விதம்விதமாய்க் கவி சாற்றிநிற்பாள்; பண்ணிறை வீணையும் மீட்டிநிற்பாள் – அவள் பல்கலை வித்தகம் காட்டிநிற்பாள்! ஏடு தரித்திடும் ஏந்திழையாள் – அவள் எழில்தரும் வெண்ணிறப் பட்டுடையாள்; காடு வனங்களின் பசுமையெல்லாம் – எந்தக் காலமும் வளர்த்திடும் காரிகையாள்! தொன்மை இலக்கியம் இலக்கணங்கள் – அவள் திருவடி நிழலினில் ...
More...More...More...More...