Blog

/Blog

நவராத்திரி-6 தெருக்கோவில் தேவி

வீதியெல்லாம் நின்றிருப்பாள் வேப்பிலைக்காரி-பல விளையாட்டு நடத்துகிற வேடிக்கைக்காரி; ஆதிக்கெல்லாம் ஆதியான அம்பிகையாமே- இவள் அன்னாடங் காச்சிகளின் குடித்தனக்காரி! சாலையோரக் கோவிலெல்லாம் சக்திபீடமே – ஏழை சம்சாரி வந்துவிழும் பக்தி பீடமே! காலையிலே எப்போதோ கோயில் திறக்கும் – எங்க காளியம்மா அதுவரையில் காத்துக் கிடக்கும்! பெட்டிக்கடை திறக்கும் போது போணி செய்கிறாள் – அட பள்ளிபோகும் பிள்ளைக்கெல்லாம் காவல் ஆகிறாள்; எட்டுவீட்டில் நடப்பதையும் எட்டிப் பார்க்கிறாள் – இவள் ஏழைகளின் வட்டிலிலே கஞ்சி வார்க்கிறாள்! வெத்திலைப்பை சுருக்குக்குள்ளே ...

நவராத்திரி – 5 லிங்க பைரவி

சூட்சுமக் காட்சிகள் ஏற்படுத்தும் – அந்த சுந்தரி சேட்டைகள் கொஞ்சமில்லை; ஆட்சி புரிகிற அன்னையின் கோவிலில் ஆனந்தப் பாட்டுக்கு பஞ்சமில்லை! கைகள் பத்திலும் காத்துநிற்கும் எங்கள் காருண்ய நாயகி கண்ணுதலாள் பைரவி லிங்கரூபிணி – எங்களின் பாடுகள் தீர்க்கிற பேரெழிலாள்! யோகினி மாதினி ஏந்திடும் சூலினி ஏழ்புவி காக்கிற நாயகியாள்; மோகினி தவசிவ மாலினி பைரவி மோட்சம் அருளிடும் மாதவத்தாள்! பேசிடும் நாயகி பார்த்ததுண்டோ வந்து பாருங்கள் ஈஷா கோவிலிலே; கூசிடும் கண்களில் கூரிய மின்னலாய் கூத்துகள் ...

நவராத்திரி – 4 எத்திசையும் அபிராமி!

சடசடக்கும் நெய்விளக்கில் சிரிப்பொலி காட்டி – அந்த சரவிளக்கின் அசைவினிலே சிலம்பொலி காட்டி படபடக்கும் மனதினுக்கு பக்குவம் தந்தாள் – எங்கள் பராசக்தி அபிராமி தரிசனம் தந்தாள்! நமசிவாயன் மேனியிலே பாதியை வென்றாள் – எங்கள் நாயகியாள் உமைசிவாயம் ஆகியே நின்றாள் குமுறலெல்லாம் தணிக்கவந்த குளிர்மழை ஆவாள் – எங்கள் கடவூரின் அபிராமி காலங்கள் ஆள்வாள்! பேரழகி நின்ற கோலம் பார்க்கத்தானே கண்கள் – அவள் பெரும்புகழை சொல்லெடுத்துப் பாடத்தானே பண்கள் பூரணியை நாரணியை பாடிப்பாடித் தொழுவோம் ...

நவராத்திரி – 3

வரும்பகை கடிவாள் வாராஹி – தினம் வெற்றிகள் தருவாள் கருமாரி; திருவடி தொழுதிட திரள்பவர் மனங்களின் தயக்கங்கள் துடைப்பாள் ஶ்ரீகாளி! ஆயுதம் ஏந்தும் திருக்கரமும் – நல்ல அபயம் அளித்திடும் மலர்க்கரமும் மாயையை விலக்கும் மூன்றாம் விழியும் மிளிர்ந்திடப் பொலிவாள் மாசக்தி! கண்களின் அசைவில் கலிநகரும் – அவள் கைவளை ஓசையில் கடல்புரளும் எண்ணிய காரியம் எட்டும் வீரியம் எமக்கருள் செய்வாள் மாதேவி! கருவினில் உறக்கம் கொடுப்பாளாம் – அதில் கைகால் முளைத்திட வைப்பாளாம் வருகிற பிறவிகள் ...

நவராத்திரி – 2

வித்தில் முளையாகும் வித்தகி இல்லையேல் பத்தில் பதினொன்றாய் போயிருப்பேன் – தத்துவம் ஏதும் அறியாமல் ஏங்குகையில் வாழ்வளிக்க மாதரசி கொண்டாள் மனம். கற்கும் மொழியானாள்; கட்டும் கவியானாள் நிற்கும் சொல் சொல்கின்ற நாவானாள் – கற்பகத்தாள்; எல்லாம் அவளாகி யார்க்குந் தெரியாத பொல்லாத பெண்ணானாள் போ. நட்ட நடுநிசியில் நீலவான் கம்பளத்தில் பட்டுமலர்ப் பாதம் பதிப்பாளே – சிட்டுகளின் கூடுகளில் கண்மலரும் குஞ்சுகளைத் தாலாட்டி பாடுவாள் வைகறைப் பாட்டு. ஒன்பான் இரவுகளில் ஓங்காரி ஆளவந்து தன்பால் உயிர்களைத் ...

நவராத்திரி -1

மழைமுகில் வண்ணம் அவள்வண்ணம் மழைதரும் கருணை அவள்வண்ணம் பிழைகள் பொறுப்பாள் பரிந்திடுவாள் பற்பல அற்புதம் புரிந்திடுவாள் குழையணி காதர் காதலிலே குதூகலம் காணும் மஹேஸ்வரியாள் விழைவுகள் யாவும் அருளிடுவாள் வித்தகி திருப்பதம் பரவிடுவோம்! மின்னலை மென்னகை ஆக்கியவள் மீட்டிடும் இசையினில் மிளிர்கிறவள் என்னிலை நன்னிலை ஆக்குபவள் எங்கும் எதிர்ப்படும் கீர்த்தியினாள் கன்னல் கவியாய் சித்திரமாய் கலைகள் பெருக்கும் காளியவள் தென்றலில் புயலில் திரிகின்ற திரிபுரை திருப்பதம் பணிந்திடுவோம்! காலம் அவளது பந்தாகும் கால்களில் உருட்டும் கைகாரி ஓலம் ...
More...More...More...More...