இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-16
அடிப்படையில் அதற்கு உளவியல் ரீதியாக ஒரு காரணம் உள்ளது. திருவாமூர் என்ற திருத்தலத்தில் அவதரித்தவர் திருநாவுக்கரசர். அப்போது அவருடைய பெயர் மருள்நீக்கியார். தமக்கை திலகவதியாருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை கலிப்பகையார் போரில் இறந்து விடுகிறார். அந்த அதிர்ச்சியில் பெற்றோரும் இறந்து போகின்றனர். தமக்கையாரும் நெருப்பில் இறங்கி உயிர்விட நினைத்தார். தன் தம்பியாகிய மருள்நீக்கியார் அழுவது பொறாமல் அவர் வாழவேண்டும் என்பதற்காக தான் வாழ வேண்டும் என்று முடிவு செய்து திருமணம், இல்லறம் என்ற சிந்தை இல்லாமல் ஒரு துறவி ...
இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-15
வழக்கமாக அப்பூதியடிகள் புராணங்களில் பேசப்படுகின்ற விஷயங்களைக் கடந்து அதில் ஒரு சம்பவத்தை நாம் ஆராய்வோமேயானால் சேக்கிழார் ஒரு மிகப் பெரிய உளவியல் அறிஞராக விளங்குவதை அறியலாம். திங்களூர் என்கிற ஊரில் வசித்து வருகிறார் அப்பூதியடிகள், திருநாவுக்கரசர் எதிர்பாராத விதமாக அந்த ஊருக்குள்ளே வருகிறார். காணும் இடங்களில் எல்லாம் தன்னுடைய பெயரால் அறப்பணிகள் நிகழ்வதைப் பார்த்து வியப்படைகிறார் திருநாவுக்கரசர். “சிந்தை வியப்புற வருவார் திருநாவுக்கரசு எனும் பேர் சந்தமுற வரைந்ததனை எம்மருங்கும் தாம்கண்டார்” என்பது சேக்கிழார் வாக்கு. அங்கிருந்த ...
இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-14
இன்று பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மக்கள் மனதில் பதியச் செய்வதற்காக எத்தனையோ உத்திகளைக் கையாளுகின்றனர். பேருந்து நிறுத்தங்கள், நிழற்குடைகள், பத்திரிகை விளம்பரங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள் என்று பார்க்குமிடமெல்லாம் அந்தப் பெயரை தெரியச் செய்வதில் நிறுவனங்கள் மிகுந்த அக்கறை காண்பிக்கின்றன. போட்டி போட்டுக்கொண்டு இந்தப் பணியைச் செய்கின்றன. ஒரு பெயர் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானால் அது அவர்கள் மனதை விட்டு நீங்காது என்பது தொழில் யுகத்தில் வணிகத்தில் ஓர் உத்தியாகக் கருதப்படுகின்றது. இதில் அரசியல் தொண்டர்கள் ...
இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-13
நாயனாரின் பெயரை வைத்தே அவருடைய இயல்பை நாம் புரிந்து கொள்ளும்விதமாக சேக்கிழார் நம்மைத் தயார் செய்கிறார். ஆங்கிலத்தில் Reformist என்றொரு சொல் உண்டு. அதற்கு நேரான தமிழ்ச்சொல் சீர்திருத்தவாதி என்பதாகும். அதே போல Revolutionist என்ற சொல்லும் உண்டு. அதற்கான தமிழ்ச் சொற்கள் புரட்சியாளன், கலகவாதி என்பன. ஆங்கிலத்தில் இன்னும் தீவிரமான சொல் ஒன்று உண்டு Refel என்று. –Refel என்றால் அவன் கலகம் செய்வதுகூட இல்லை. அவனுடைய இயல்பே சமூகம் தனக்கென்று வகுத்திருக்கின்ற நியதிகளுக்கு முரணாக ...
இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-12
சட்டப்படி தவறில்லை என்றாலும் தார்மீகப்படி ஒன்றைத் தவறு என்று அரசன் முடிவு கட்டுகிறபோது அவனை சமாதானப்படுத்துவதற்கு அமைச்சர்கள், “இதற்காக நீங்கள் கவலைப்படவேண்டாம். ‘இதற்கு சில பரிகாரங்களைச் செய்யலாம்’ என்று நம்முடைய அந்தணர்கள் சில முறைகளை வகுத்துள்ளார்கள்” என்று அடித்துப் பேசுகிறார்கள். “சிந்தை தளர்ந்த அருளுவது மற்றிதற்குத் தீர்வு என்றால் கொந்தவர்தார் மைந்தனை முன் கோவதை செய்தார்க்கு மறை அந்தணர்கள் விதித்த முறை வழிநடத்தல் அறம்” என்றார். பசுவதை என்பது ஒன்றும் புதிதில்லை. பசுவை வதை செய்தவர்களுக்கு என்று ...
இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-11
திருத்தொண்டர் புராணத்தின் தொடக்கத்திலேயே மனுநீதிச் சோழனின் வரலாற்றை சேக்கிழார் எழுதுகிறார். அரசர்கள் உலவக்கூடிய வீதியில் பசுவோ அதன் கன்றோ புகுவதற்கு வாய்ப்பில்லை. சுற்றி நிறைய தேர்கள் சூழ்ந்து வர மனுநீதிச் சோழனின் மகன் தேரிலே வருகிறார். இந்த காலத்தில் அமைச்சர்கள் வருகின்ற வாகனங்கள் ஒலி எழுப்பிக் கொண்டு வருவதுபோல் அன்று இளவரசனின் தேரிலும் இவனைச் சுற்றி வருகின்ற தேர்களிலும் பெரும் ஓசையை எழுப்பக்கூடிய மணிகள் அசைந்து கொண்டே வருகின்றன. அந்த வீதிக்குள் கன்று வந்ததும் எழுப்பப்பட்ட ஒலிகளை ...