Blog

/Blog

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-5

அதேபோல சிவஞானம் கைவரப்பெற்று திருஞானசம்பந்தர் தேவாரம் பாடத் தொடங்கி இறைநெறியில் ஈடுபட்ட கால கட்டம் அவருடைய மூன்றாவது வயதிலிருந்து துவங்குகிறது. அப்போதே தன் துணைவியார் மதங்கசூளாமணியோடு பங்குபெற்று திருஞானசம்பந்தரின் பதிகங்களை யாழிலிட்டு வாசித்து பாடுகிற தொண்டிலே ஈடுபட்டவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர். அதற்கு துணையாக இருந்தவர் அவர் துணைவியார் மதங்க சூளாமணியார். திருச்சாத்த மங்கை என்கிற திருத்தலத்தில் அந்தணர் குலத்திலே தோன்றி ஒருவராகிய திருநீல நக்கர் இல்லத்திற்கு திருஞானசம்பந்தர் எழுந்தருளினார். அவரோடு திருநீலகண்ட யாழ்ப்பாணரும், மதங்க சூளாமணியும் வந்திருந்தனர். ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-4

இன்றும் இறைநெறியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள் என்று இருப்பவர்களிடையே கருத்து மோதலும் யார் பெரியவர் என்கிற ஆணவப்போக்கும் ஒரு சில இடங்களில் தென்படுவதைக் காண்கிறோம். இறைவனுடைய தொண்டர்கள் என்றால் அவர்கள் ஒருவருக்கொருவர் பணிவும் பக்தியும் நிரம்பியவர்களாக விளங்க வேண்டும் என்பதைப் பெரிய புராணம் வலியுறுத்துகிறது. தொண்டு நெறியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிற யாருக்கும் இந்த பணிவின் அம்சம் பொருந்தும். முற்றிய நெற்கதிர்கள் வளைந்து நிற்பதைக் காட்ட வந்த சேக்கிழார், “தத்தமிழ் கூடினார்கள் தலையினாற் வணங்குமாற் போல்” என்று ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-3

‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்’ தங்கள் அனுபவத்தில் இறைத்தன்மையை உணராதவர்கள்தான் தமக்குள்ளே சண்டையிட்டுக் கொள்வார்கள். உலகம் முழுவதும் தன் அனுபவத்தில் உணர்ந்து அவன் பெருமைகளை ஓத வேண்டும். அத்தகைய அருமைப்பாடு கொண்டவன் சிவபெருமான் என்கிறார் சேக்கிழார். “நிலவுலாவிய நீர்மலி வேணியன்” ஒளியும் தண்ணீரும் எவ்வளவு முக்கியமோ, இறைவனும் அவ்வளவு முக்கியம். வெய்யில் காலங்களில் ஒரு மேசையும் இரண்டு பானையும் போட்டு தண்ணீர்ப்பந்தல் வைப்பவர்கள்கூட, அது யாரால் அமைக்கப்பட்டது என்பதைப் பலகைகள் வைத்துப் பிரபலப் படுத்துகிறார்கள். ஆனால் உலகம், ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-2

திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் உருவாக என்ன காரணம் என்ற கேள்விக்கு சேக்கிழார் சொல்லும் விடை முக்கியமானது. “உலகில், இரண்டு வகையான இருள் உண்டு. ஒன்று, பூமியைப் போர்த்துகின்ற புற இருள். இன்னொன்று மனிதர்கள் மனதைக் கவ்வும் அக இருள். கதிரவன், எப்படி புற இருளை நீக்குகிறதோ அது போல், அக இருளை நீக்குவது திருத்தொண்டர் புராணம்” என்கிறார் சேக்கிழார். “இங்கு இதன் நாமம் கூறின் இவ்வுலகத்து முன்னாள் தங்கு இருள் இரண்டில், மாக்கள் சிந்தையுள் சார்ந்து ...

இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-1

‘உலகெலாம்’ என்று தொடங்குகிறது பெரியபுராணம். தமிழின் பெரும்பாலான பேரிலக்கியங்கள், ‘உலகம்’ என்ற சொல்லிலேயே தொடங்குகின்றன. “உலகம் உவப்ப” என்று தொடங்கும் திருமுருகாற்றுப் படை, தமிழர்களின் சிந்தனை உலகளாவியதாகவே இருந்திருக்கிறது என்பதன் அடையாளம். “யாதும் ஊரே” என்பதும், “உலகம் உவப்ப” என்பதும், “உலகம் யாவையும்” என்பதும், “உலகெலாம்” என்பதும் வெறும் சொற்றொடர்களில்லை. விரிந்த சிந்தனையின் செறிந்த அடையாளங்கள். உலகம் முழுமைக்குமான சிந்தனைப் பாங்கைப் பொறுத்தவாறு சேக்கிழார் வலியுறுத்தும் சைவம் மேலே ஒரு படி போகிறது. “தென்னாடுடைய சிவனே போற்றி” ...

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

கண்ணனையே நினைத்து, கண்ணனில் கலந்த ஆண்டாள் இந்த உணர்வின் உச்சம் தொட்டவர். “உள்ளே யுருகி நைவேனை உளளோ இலளோ என்னாத கொள்ளை கொள்ளிக் குறும்பனை கோவர்த்தனைக் கண்டக் கால் கொள்ளும் பயன் ஒன்றில்லாத கொங்கை தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில் எறிந்தென் அழலைத் தீர்வேனே” என்கிறார் ஆண்டாள். ஆழ்வார்கள் கண்ணனை இப்படி வெவ்வேறு பாவங்களில் அனுபவித்தனர். அந்த அனுபவங்கள், கண்ணனுக்கும் அவர்களுக்குமான ஏகாந்த உறவை உணர்த்தின. இவர்களுடைய பார்வைக்கும் ஓஷோவின் பார்வைக்கும் என்ன வேறுபாடு? ...
More...More...More...More...