எட்டயபுரமும் ஓஷோபுரமும்
தென்றல் வந்து தீ வீசும். கண்ணன், கால மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் ஜீவநதி. கண்ணனைப் பற்றிய கர்ண பரம்பரைக் கதைகளும், பாகவதமும், மகாபாரதமும் ஏற்படுத்தி ஆழ்வார்களின் அமுத மொழிகள். திருமாலே பரம்பொருள் என்ற தங்களின் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு ஆழ்வார்களின் பாசுரங்கள் தோன்றின. திருமால் வழிபாட்டில் தங்களுக்கு நிகழ்ந்த இறையனுபவத்தின் பிழிவுகள் அந்தப் பனுவல்கள். பரநிலையிலும், வியூக நிலையிலும், திருமாலை உணர்ந்த ஆழ்வார்கள் ஆலயங்களில் எழுந்தருளியிருக்கும் அர்ச்சை நிலைகளையும், அவதார நிலைகளையும் சேர்த்தே சிந்தித்தனர். இவற்றில் பூர்ணாவதாரம் என்று ...
எட்டயபுரமும் ஓஷோபுரமும்
டார்வினின் பரிணாமக் கொள்கையின்படி குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்றால் அது உடலளவிலான பரிணாமத்தை மட்டுமே குறிக்குமென்றும், ஆன்மா என்று பார்க்கிற போது பசுவின் ஆன்மாவே அடுத்த பரிணாமத்தில் மனித ஆன்மாவாக மலர்கிறது என்றும், காரண காரியங்களோடு ஓஷோ இந்தப் புத்தகத்தில் விளக்குகிறார். இராமன் அவதாரம் நிகழும் முன்பே வான்மீகி இராமாயணத்தை எழுதி விட்டதாக ஒரு கருத்து சொல்லப்படுவதுண்டு. இது குறித்தும் மிக வித்தியாசமான கண்ணோட்டத்தில் ஓஷோ விளக்கம் சொல்கிறார். இராமன், மரபார்ந்த நெறிகளுக்குள் உட்பட்டு வாழ்ந்தவன். இந்த ...
எட்டயபுரமும் ஓஷோபுரமும்
ஓஷோ உணர்த்தும் கண்ணன்-இன்னும் சில குறிப்புகள் பாரதியும் ஓஷோவும் ஒத்துப் போகிற இடங்கள் என்கிற சிறிய பகுதி மட்டுமே இந்த நூலில் சிந்திக்கப்பட்டிருக்கிறது. அதைக் கடந்து முற்றிலும் அபூர்வமான கண்ணோட்டத்தில் பல தகவல்கள் கொண்டு திகழ்கிறது. “Krishna-the man and his pholosophy”. அதன் விஸ்தீரணம் பற்றி நாம் விளங்கிக் கொள்ளும் விதமாக சில தகவல்களைப் பார்க்கலாம். ராமன், கண்ணன் எல்லாம் விஷ்ணுவின் அவதாரம் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா என்ற கேள்வி ஓஷோவிடம் கேட்கப்படுகிறது. ஓஷோவின் ...
எட்டயபுரமும் ஓஷோபுரமும்
பொய்மை-பழி-போன்றவற்றினைச் சொல்வதால் ஏற்படும் குற்ற உணர்வோ கூச்சமோ கண்ணனுக்குக் கிடையாது. அது மட்டுமா? “ஆளுக்கு இசைந்தபடி பேசி – தெருவில் அத்தனை பெண்களையும் ஆகாது அடிப்பான்” அத்வைதம்-துவைதம்-வசிஷ்டாத்வைதம் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை வலியுறுத்துவார்கள். அந்த அளவுகோல்களுக்குக் கண்ணன் அகப்படத்தான் செய்கிறான். உடனே “என் கடவுளே கடவுள்” என்று ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஆகாமல் போய்விடுகிறது. முற்றிலும் வேறொரு மனோநிலையிலிருந்து கண்ணனை பாரதி பார்த்திருப்பதைக் கண்ணன் பாட்டு நமக்குச் சொல்கிறது. ஆகவேதான் கண்ணன் பாட்டு முழுக்க “அர்ச்சுன ...
எட்டயபுரமும் ஓஷோபுரமும்
“தேனொத்த பண்டங்கள் கொண்டு – என்ன செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்; மானொத்த பெண்ணடி என்பான் – சற்று மனமகிழும் நேரத்திலே கிள்ளி விடுவான்!” ஒன்று வேண்டும் வேண்டுமென்று மனம் ஏங்குகிறது. ஆனால் அது வேறொருவருக்கும் கிடைக்கிறது. இதை கண்ணனில் லீலையென்று பாரதி பாடுகிறான். அழகுள்ள மலர் கொண்டு வந்தே – என்னை அழ அழச் செய்துபின் “கண்ணை மூடிக் கொள் குழலிலே சூட்டுவேன்” என்பாள் – என்னைக் குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான்” இப்படி நீண்டு ...
எட்டயபுரமும் ஓஷோபுரமும்
“தீராத விளையாட்டுப்பிள்ளை” என்கிற பாடலும் அப்படித்தான். உலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது போன்றவை இறைவனின் அலகிலா விளையாட்டு என்கிறார் கம்பர். “உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும் நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே” என்பது கம்பராமாயணப் பாடல். இந்தச் சிந்தனை பாரதியிடம் வரும் போது, “தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன் தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை” என்று வடிவம் கொள்கிறது. படைத்தல்-காத்தல்-அழித்தல் போன்ற பணிகளை இடையறாமல் செய்யும் ...