எட்டயபுரமும் ஓஷோபுரமும்
கண்ணன் பாட்டு இன்னும் சில குறிப்புகள் பாரதியின் கண்ணன் பாட்டு, அர்ச்சுனனின் மனநிலையிலிருந்து எழுதப்பட்டது. முதல் பாட்டின் போது மட்டும் இந்த அணுகுமுறையை பாரதி கைக்கொள்ளவில்லை. கண்ணன் மேல் அர்ச்சுனனுக்கு நட்பு நிலையில் அரும்பியிருந்த அன்பு, காதலாய், பக்தியாய், பரிவாய், உறவு கொண்டாடும் நேசமாய் முற்றி முதிர்ந்த பல்வேறு நிலைகளின் பதிவுகளே கண்ணன் பாட்டு என்பதை காண முடிகிறது. ‘கண்ணம்மா என் காதலி’ என்று பாரதி பாடுகிற இடமொன்றிலும் இந்தச் சிந்தனை உறுதி பெறுகிறது. ‘இந்த உறவு ...
எட்டயபுரமும் ஓஷோபுரமும்
மாய்மாலக் கண்ணன் கண்ணனின் குணங்களாக அறியப்பட்டவற்றில் முக்கியமானது, அவன் கைக்கொண்ட வழிமுறைகள். பாரத யுத்தத்தில் ஆயுதமெடுக்க மாட்டேனென்று சத்தியம் செய்தவன், ஒரு காலகட்டத்தில் சக்கரத்தை ஏந்துகிறான். நேரிய வழியில் கண்ணன் பகைவர்களை வென்றிருக்கலாமே என்கிற கேள்வியும் ஓஷோவிடம் கேட்கப்படுகிறது. ஆன்மீகத் தெளிவின் உச்சமாகிய கண்ணன், அரசியல் சூழ்ச்சிகளுக்குத் துணைபோனது குறித்து சீடர் எழுப்புகிற சந்தேகத்துக்கு ஓஷோ விடையளிக்கிறார். “ஆன்மீகம் வாழ்வின் அத்தனை அம்சங்களிலும் பிரதிபலிக்கக் கூடிய தன்மை. மதம் அப்படியல்ல. அரசியல், பொருளாதாரம் போல் அதுவும் ஒரு ...
எட்டயபுரமும் ஓஷோபுரமும்
பொதுவாக காதலன் காதலியரிடை சம்பிரதாயமாக சொல்லப்படும் காதல் மொழிகள் இந்த இருவருக்கும் தேவையில்லை என்பதையும் பாரதி தெளிவுபடுத்துகிறான். பாட்டும் சுதியும் ஒன்றாய்க் கலந்தால் ஒன்றையன்று பாராட்டுமா! நிலவு, விண்ணை தனியாகப் பார்த்துப் புகழ் மொழி சொல்லுமா? விறகில் நெருப்பு பற்றும் போது உபசார வார்த்தைகளை உச்சரிக்குமா? என்று கேள்விகளை அடுக்குகிறான் பாரதி. நாட்டினில் பெண்களுக்கு நாயகர் சொல்லும் – சுவை பாட்டும் சுதியும் ஒன்று கலந்திடுங்கால் – தம்முள் பன்னி உபசரணை பேசுவதுண்டோ? நீட்டும் கதிர்களடு நிலவி ...
எட்டயபுரமும் ஓஷோபுரமும்
மகாவீரரோடும் புத்தரோடும் ஓஷோ கண்ணனை ஒப்பிடுகிறார். மகாவீரரின் மார்க்கத்தில் முப்பதாயிரம் பெண் துறவிகள் இருந்தனர். இருந்தும் பிரம்மச்சர்யத்தை போதித்தார் மகாவீரர். புத்தர் ஒரு காலகட்டம் வரையில் பெண்களைத் தன் இடத்திற்குள் அனுமதிக்கவில்லை. “புத்த தன்மையை ஏன் பெண்கள் பெறக்கூடாது? பெண்ணாய்ப் பிறப்பதே பாவமா?” என்றெல்லாம் கிருஷ்ண கௌதமி போராடிய பிறகு தன் முதல் பெண் சீடராக கிருஷ்ண கௌதமிக்கு தீட்சை கொடுத்தார் புத்தர். ஆனால் கண்ணன், பெண்களை எந்த மனத் தடையுமில்லாமல் தனக்கு அணுக்கமாக ஏற்றுக்கொண்டான். கண்ணனின் ...
எட்டயபுரமும் ஓஷோபுரமும்
இதற்குள், இன்னொரு காதல் பெண்ணின் மனநிலையை பாரதி காட்டுகிறான். சதா சர்வ காலமும் ஒன்றின் நினைப்பிலேயே மூழ்கியிருக்கும் போது, அந்த நினைவின் உணர்வு வெள்ளத்தில், உருவங்கள்கூட மனதிலிருந்து ஆசைவிடலாம். தன் ஆருயிர்க் கண்ணனின் மாபாதகம் என்று தவிக்கிறாள். “ஆசை முகம் மறந்து போச்சே – இதை ஆரிடம் சொல்வேனடி தோழி-? நேசம் மறக்கவில்லை நெஞ்சம் – எனில் நினைவு முகம் மறக்கலாமே! என்று தவிக்கிறாள். “பெண்களினத்தில் இது போலே – ஒரு பேதையை முன்பு கண்டதுண்டோ!” என்று ...
எட்டயபுரமும் ஓஷோபுரமும்
காதலுக்கென்றொரு கடவுள் கண்ணன், காதலின் தெய்வம். கோபியர் கொஞ்சும் கோகுலக் கண்ணனின் வாழ்க்கைப் பாதையெங்கும் வளையோசைகள் கேட்டுக் கொண்டேயிருக்கும். கண்ணனின் பாடல்களைப் பார்த்தால், பெரும்பாலும் கண்ணனுக்காகக் காதலிகள் ஏங்கியதுதான் அதிகம். அதிலும், கண்ணன் மீதும் தனக்கு அளப்பரிய காதலிருக்க, கண்ணன் தன்னைக் காதலிக்கிறானா இல்லையா என்று தவிக்கிற பெண்ணின் மனப்பதிவை பாரதி எழுதியிருக்கிறான். கண்ணன் தன்னை நிராகரித்தால் கவலையில்லை என்கிற வீராப்பு ஒரு கணமும், தன்னை அவன் நிராகரித்துவிடக் கூடாது என்கிற தவிப்பு மறுகணமுமாக மாறி மாறித் ...