எட்டயபுரமும் ஓஷோபுரமும்
சந்தோஷத்தில் இருக்கும் போது அந்த சந்தோஷத்தை ஆழமாக உணர வேண்டி மனம், இனந்தெரியாத அச்சமொன்றை ஏற்படுத்திக் கொள்கிறது. இந்த மனநிலையை, கண்ணன் பாட்டு வரிசையில் ஒரு பாடல் மிக அழகாக வெளிப்படுத்துகிறது. காட்டுக்குள் பெண்ணொருத்தி கண்ணனுக்காகக் காத்திருக்கிறாள். “திக்குத் தெரியாத காட்டில் – உன்னைத் தேடித்தேடி இளைத்தேனே” என்று சொல்கிறாளே தவிர, அந்தப் பாடல் முழுவதும் காடு சார்ந்த அவளின் பிரியங்களே வெளிப்படுகின்றன. உண்மையில் கானகத்தை ரசிக்கிறாள். தன்னுடன் கண்ணன் இல்லையே என்கிற கவலைதான் அவளுக்கு. மக்கள், ...
எட்டயபுரமும் ஓஷோபுரமும்
அச்சம் வந்ததா அர்ச்சுனனுக்கு? கண்ணனின் விசுவரூப தரிசனத்தைக் கண்டதும் அர்ச்சுனனுக்கு அச்சம் ஏற்பட்டதாக இதிகாசம் சொல்கிறதே அந்தக் காட்சி. அவ்வளவு அச்சமூட்டுவதாக இருக்குமா என்று ஒரு சீடர் கேட்கிறார். இதற்கு ஓஷோ இரண்டு கோணங்களில் விரிவான விளக்கமளிக்கிறார். முதலாவது, எல்லையின்மையின் தெய்வீகக் காட்சிக்குத் தயாராக இல்லாதபோது திடீரென்று எதிர்கொள்ள நேர்கையில் அதிர்ச்சி ஏற்படுவது இயற்கை என்பது அவர் கருத்து. ஒரு பெரிய ஆனந்தம், எதிர்பாராமல் ஏற்படும்போது, தயார் நிலையில் இல்லாதவர்கள் அதைத் தாங்க-முடியாது. இது முதல் கோணம். ...
எட்டயபுரமும் ஓஷோபுரமும்
வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்லாமல், வாழ்க்கையைக் கொண்டாடி, வாழ்க்கைச் சமுத்திரத்தில் மூழ்கி ஞானத்தின் முத்தெடுக்கும் குருமார்களை ஓஷோவும் பாரதியும் போட்டி போட்டுக் கொண்டு நமக்கு அறிமுகம் செய்கிறார்கள். இனி அர்ச்சுனனுக்குக் கண்ணன் வழங்கிய ஞானப்பார்வை சில விநாடிகளுக்கு மட்டுமே விளங்கியதாக சொல்லப்படுவது ஏன் என்பது பற்றி ஓஷோ தரும் விளக்கமும் முக்கியமானது. “நள்ளிரவு நேரத்தில், வனப்பகுதியில் நடந்து போகிற போது சுற்றிலும் என்ன இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. ஆனால், கண நேரத்தில் வெட்டுகிற மின்னல் கீற்று, இருளில் ...
எட்டயபுரமும் ஓஷோபுரமும்
“குரு எனப்படுபவர் ஒரு கிரியா ஊக்கிதான். அவர்களுடைய இருப்பில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அந்த அனுபவமே உள்நிலை வளர்ச்சியை ஏற்படுத்தும். எனவே ஞானக் கண்ணை கண்ணன் கொடுத்தான் என்று அர்ச்சுனன் கருதுவது இயற்கை. ஒரு குருவின் முன்னிலையில் உங்கள் விழிப்பு நிலை உச்சத்தை அடைகிறபோது விசுவரூப தரிசனம் சித்திக்கிறது (279) என்கிறார் ஓஷோ. There are no masters in the world. They are all ctalysts. In the presence of someone, your ...
எட்டயபுரமும் ஓஷோபுரமும்
ஒரு பொருளையோ, ஒரு மனிதரையோ, ஒரு குருவையோ நாம் முழுமையாக ஏற்று, நம்மையே அர்ப்பணிக்கும்போது, ஓர் உள்வெளிப் பயணத்தைத் தொடங்குகிறோம். நம்மிடம் புதைந்து கிடக்கும் அன்பின் முழுமையை வெளிக்கொணர அந்தக் கருவி துணையாகிறது. கண்ணன் என்கிற கருவியை அர்ச்சுனனும் யசோதையும் கைக்கொண்டார்கள். அந்தக் கருவியும் கடவுட் தன்மையின் உச்சமாக விளங்கியதால் அவர்களுக்கு அந்த தரிசனம் கிடைத்தது. அர்ச்சனுக்கும் யசோதைக்கும் மட்டுமல்ல! கண்ணனுக்கு எதிரணியிலேயே காலமெல்லாம் நின்ற கர்ணனுக்கும் விசுவரூப தரிசனம் கிடைத்ததே, இது எப்படி என்று சிந்திக்க ...
எட்டயபுரமும் ஓஷோபுரமும்
கண்ணனை குருவாக அடைகிறவர்களுக்கு நிலையாமை பற்றிய உபதேசம் அல்லவா கிடைக்கும். வானத்திலிருக்கிற வெண்ணிலவைக் காட்டி, இது பொய்யல்ல! இது நிரந்தரமானது! இப்படித்தான் வாழ்க்கையும். இதைப் பொய்யென்று சொல்கிற சாத்திரங்கள்தான் பொய் என்று உபதேசிக்கிறான் கண்ணன். சந்திரன் சோதி உடையதாம் – அது சத்திய நித்திய வஸ்துவாம் – அதைச் சிந்திக்கும் போதினில் வந்துதான் – நின்னைச் சேர்ந்து தழுவி அருள் செய்யும் – அதன் மந்திரத்தால் இவ்வுலகெல்லாம் – வந்த மாயக் களிப்பெரும் கூத்துதான் – இதைச் ...