Blog

/Blog

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

பொழுது போக்குக்கென்று எத்தனையோ வழிகளை மனிதன் கண்டு பிடித்திருக்கிறான். ஆனால் வாழ்வின் ஒவ்வொரு விநாடியுமே கொண்டாட்டமும் ஆனந்தமும் கொப்பளிக்கும் ஜீவஊற்றாகத் திகழுமென்றால் பொழுதுபோக்கு எதற்காக? உண்மையில், எந்தப் பொழுதுமே போக்குவதற்கல்ல. ஆக்குவதற்கான். பணி நிமித்தம், சில இயந்திரத்தனமான கடமைகளில் தொடர்ந்து சில மணிநேரங்கள் இயங்கி விட்டு மாறுதலுக்காக சில நிமிடங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுவதால் எந்தப் பயனும் கிடையாது என்கிற பொருளில்தான் ஓஷோ இவ்வாறு சொல்கிறார். We had to find a substitute for celebration and ...

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

-அவன் காமனைப் போன்ற வடிவமும் – இளம் காளையர் நட்பும் பழக்கமும் – கெட்ட பூமியைக் காக்-கும் தொழிலிலே – எந்தப் போதும் செலுத்திடும் சிந்தையும் ஆடலும் பாடலும் கண்டு நான் – முன்னர் ஆற்றங்கரைதனில் கண்டதோர் – முனி வேடம் தரித்த கிழவரைக் – கொல்ல வேண்டும் என்று உள்ளத்தில் எண்ணினேன்!” ஓர் அபிப்பிராயத்தை ஏற்படுத்திக் கொண்டால், தன்னோடு தானே மனம் எப்படியெல்லாம் முரண்படும் என்பதை மகாகவி பாரதி இந்தப்பாடலில் வெகு அழகாகச் சித்தரிக்கிறான். ஓர் ...

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

உண்மையான குருமார்களைக் கோட்டைவிட்டு, வேடதாரிகளிடம் வீழ்ந்து போகிறோம். இதுகுறித்து, பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே திருமூலரும் எச்சரித்திருக்கிறார். “குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார், குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர், குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக் குருடும் குருடும் குழி விழுமாறே” என்கிறார் அவர். பாரதி, கண்ணன் என்கிற குருவைப் பார்த்த மாத்திரத்தில் மனித மனதுக்குள் ஏற்படக் கூடிய எதிர்ப்புணர்ச்சியை அழகானதொரு கவிதைச் சித்திரம் ஆக்குகிறான். சாத்திரங்களையெல்லாம் தேடிபார்த்து, சலித்துப்போய், ஒரு குருவைக் கண்டுபிடிக்கும் ஆசையில் நாடெங்கும் சுற்றி ...

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

யார் குரு? ‘ரிஷிமூலம்’ என்று தேடிப்போகும் போது பெரும்பாலானவை அதிர்ச்சித் தகவல்களாகவே அமைந்துவிடுகின்றன. பண்டைய நாட்களில், ஞானம் முதிர்ந்த நிலையில் இறைத் தேடலின் உந்தலில் துறவு மேற்கொண்டவர்கள்தான் முனிவர்களாகவும், ரிஷிகளாகவும் வணங்கத்தக்க இடங்களில் இருந்தனர். பிற்காலத்தில், வாழ்க்கையில் ஏற்படும் விரக்திகள் – தோல்விகள் – போன்றவை துறவி நோக்கித் துரத்தின. அத்தகைய மனிதர்கள் தங்களுக்குள் அமைதியை உணராமல், துறவின் கோலத்தை பிழைப்புக்கான வழியாக வழியாக ஆக்கிக்கொண்டனர். இவர்களைப் பார்த்து ஆதிசங்கரர் “உதர நிமித்தம் பஹூக்ருத வேஷ” என்று ...

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

ஊடகமே செய்தி என்ற மேக்லூஹனின் சிந்தனையை ஓஷோ கண்ணனுடன் பொருத்திக் காட்டியதை நினைவுபடுத்திக் கொண்டே பாரதியிடம் வருகிறோம். ஒருவனுக்கு நல்ல சேவகன் அமைய அமையாமல் தவிக்கும் போது கண்ணன் சேவகனாகவும் வருகிறான். வந்தவன் வெறுமனே கூலிக்குப் பணி செய்து விட்டுப் போகிறவனாய் இல்லை. என்ன பெயர்? என்று கேட்டால் “ஒன்றுமில்லை” என்று பதில் வருகிறது. பெயர்களுக்குள் அடங்காத பிரம்மாண்டம், சேவகனாக எளிவந்த தன்மையில் நிற்கிறது. சேவகனாக வருகிற கண்ணனின் பெருமைகளைப் பறைசாற்றுவதாக இந்தப்பாடல் இருக்கிறது. குறிப்பாக மூன்று ...

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

இனி, இப்படியரு குருவாகவே தன்னை உருவகப்படுத்திக் கொள்கிறான் பாரதி. அவனிடம் சீடனாக வந்து சேர்கிறான் கண்ணன். கண்ணன், இந்த குருவைக் காண வரும்போது, அவனைவிட அறிவில் குறைந்தது போலவும், குருவின் தொடர்பால் தன்னை உயர்த்திக் கொள்ள விரும்புகிறவன் போலத்தான் வந்து சேர்கிறான். “என்னிலும் அறிவினிற் குறைந்தவன் போலவும் என் நடை பழகலால், என் மொழி கேட்டலால் மேம்பாடு எய்த வேண்டினோன் போலவும், யான் சொலும் கவிதை, என் மதி அளவை இவற்றினைப் பெருமை இலங்கின என்று கருதுவான் ...
More...More...More...More...