எனது கவிதைகள்!
எனது கவிதைகள்! கரைகளைக் கடந்து, கனிவின் பரப்பில் நடையிடத் துடிக்கும் நதியின் புலம்பலாய் குமுறும் அன்பை, கமண்டலத்துக்குள் அடக்க நேர்கிற அகத்திய அவஸ்தையாய், அலைகள் தினமும் அறைந்து போனதில் கரைந்து கிடக்கிற கடற்கரை மணலாய் கல்லடிபட்ட குளத்திடமிருந்து கிளம்பிவருகிற கண்ணீர் வளையமாய்… ...
எனது கவிதைகள்
எனது கவிதைகள் நெற்றியில் துளிர்க்கும் வியர்வைத் துளிகளை ஒற்றியெடுக்கிற கைக்குட்டைகளாய் வேற்றுமுகமின்றி… எதிர்ப்படும் எவரையும் பற்றிக் கொள்கிற பிஞ்சுவிரல்களாய் உயிரில் உறைந்த உண்மைகளெல்லாம் உருகி வழிந்ததில் பெருகும் வெள்ளமாய் பரிவு வறண்ட பாலைவனத்திடைப் பயணம் மேற்கொள்ளும் பிள்ளையின் தாகமாய்… ...
தரிசனம்
இதற்கு முன்னால் நான் இறைவனாயிருந்தேன். படைத்துக் குவிப்பதும், பராமரிப்பதும் துடைத்து முடிப்பதும் தொழில்களாயிருந்தன. நதிகள், கடல்கள், நிறையத் துப்பினேன். மண், கல் பிசைந்து மலைகள் படைத்தேன், புலர்வதும் மறைவதும் பொழுதுகளென்பதும், மலர்வதும் உதிர்வதும் மலர்களென்பதும் வாய்ப்பாடுகள் போல் வழக்கில் வந்தன. மோதல்கள், காதல்கள், மகிழ்ச்சி, வருத்தம் யாவையும் சுழற்சியின் ஒழுங்கில் இயங்கின. நியதிகளுக்குள்ளே நின்ற உலகத்தில் மெதுமெதுவாய் என்னை மறக்கலாயினர். கோவிலில் என்னைக் கொண்டு போய் வைத்தனர். மீட்க வந்தவரைத் தீயி லெரித்தனர். சடங்குகள் நிறைந்த ...
பின்வழிப் பயணம்
எத்தனை இரவுகள் விடிந்தாலென்ன? எனது கனவுகள் கலைவதாயில்லை. இடைவெளியின்றி இந்த நீளத்தில் எவருக்கும் கனவுகள் வந்திருக்காது. பூமியில் முதன்முதல் புலர்ந்த விடியலைக் கண்கொண்டு பார்த்ததாய்த் தொடங்கிய கனவு யுகங்கள் கடந்த பின்வழிப் பயணமாய் இன்னும் இன்னும் தொடருகின்றது. புத்தர் காலத்தில் தாவரமாக ஏசு காலத்தில் பசுங்கிளியாக எண்ணரும் பிறவிகள் இங்கே இருந்ததாய் மனத்திரைக்குள்ளே சத்திய சாட்சிகள். இரக்கமில்லாத மரணங்கள் முடிந்தும் இறக்க மறுக்கும் என்னுயிருக்கு கைப்பிள்ளைக்குக் காட்டும் பொம்மைபோல் கனவுத் தொடரைக் காட்டி வருகிறேன். இப்போதெழும்பும் ...
மழைக்கணக்கு
புலரிபோல் வெளிச்சம் பொய்யாத் தோன்றிய பின்னிராப் போழ்தினில் பெய்தது பேய் மழை. கரிய முகிலின் கனவுகள் கலைந்து தரையில் விழுந்தன தண்ணீர்த் தாரைகள். உறக்கத்திலிருந்து உசுப்பப்பட்ட தாவரங்கள் தலைக்குக் குளித்தன. பறவைக் கூட்டில் பரவச முனகல். தெப்போற்சவத்தில் தெருநாய்க் கூட்டம் & குளிர்ந்த புல்வெளியைக் கற்பனை செய்த கறவைகளுடைய கண்களில் வெளிச்சம் & விரிந்து கிடக்கின்ற மணற்பரப்பிற்கோ விழுகிற மழைத்துளி வாசனைத் திரவியம். பூமி சிலிர்த்த பண்டிகைப் பொழுதில் போர்வைக் கல்லைறையில் புதைந்த மனிதர்கள். மழைக்கணக்கெழுதிய ...
அவதாரம்
போர்க் களத்திற்குப் போகும்போது கத்தியைப் போலவே கவசமும் முக்கியம். ஒருதுளி கூட இரக்கமில்லாமல் உயிர்கள் குடிக்கும் கத்தியை விடவும், காயம் செய்யும் கொள்கையில்லாமல் குத்துகள் தடுக்கும் கவசமாயிருக்கலாம். மொத்த விலைக்கு உயிர்களை வாங்கும் யுத்தம் எவனின் புத்தியில் வந்தது? போர்க்களம் நடுவில் போதித் தாவது மூர்க்கக் கனலை மூட்டிட வேண்டுமா? கூரிய கத்தியாய் இருப்பதைக் காட்டிலும் இறுகிய கவசமாய் இருக்குமென் கவிதை. கொண்டுவந்திருக்கும் வெள்ளைக் கொடியைக் காற்றில் அசைத்துக் காட்டி நிற்கலாம் குருதித் துளிகள் பட்டுப்பட்டு… ...