வடு
இழந்த உறவின் ஏக்கத் தழும்புகள் இதயத்துக்குள் இல்லாமலில்லை. எதிர்பாராத நொடிகளில் திடீரென எழுகிற வலியை எழுதுவதெப்படி? வருடிக் கொடுக்கிற விசிறிக் காற்று வந்து கொண்டே இருக்கிற போதும் வீசிப்போன தென்றலின் நினைவு வரும்போதெல்லாம் வருத்தத்தின் புழுக்கம். நேற்றைய உறவின் ஞாபகச் சுவட்டை அலைகள் எதுவும் அழிக்கவேயில்லை. கடற்கரைப் பரப்பாய் விரிந்த மனசில் கடந்த காலத்தின் கிளிஞ்சல் குவியல்கள். காலியாகக் கிடப்பது தெரிந்தும் கைகளில் எடுத்துத் திறக்கும்போது முகத்தில் அறையப்போகும் வெறுமையைத் தாங்கிக் கொள்ளத் தயாராகின்றேன். ...
புத்த பூர்ணிமா – 2
சத்சங்கத்தின் சரண தியானத்துடன் புத்த பூர்ணிமா பொழுதின் துவக்கம். மூடிய இமைகள் மெதுவாய்த் திறந்ததும் வானக் கவிதையாய் வண்ண வெண்ணிலவு கிழக்கிலிருந்து கிளர்கிற ஞானமாய் தகதகக்கின்ற தங்க அற்புதம்; பூஜ்ய வடிவம், பூரண சூன்யம். நிகழும் அசைவே வெளித்தெரியாமல் நடுவான் நோக்கி நகரும் நளினம். உள்ளளி போல உயர எழும்பும் வெண்ணிலவோடு விழிகளின் பயணம். ஆன்மாவுக்கு சிறகு முளைத்து ஆகாயத்தில் பறப்பதுபோல… நீலவானத்தில் மிதந்து மிதந்து பால்நிலவோடு கலப்பது போல… காலவெளியைக் கடந்து கடந்து மூலக்கனலில் ...
மறுபக்கம்
ஆகாயத்தின் அடுத்த பக்கம் என்ன நிறமாய் இருக்கக் கூடும்? வானம் பார்க்க வாய்க்கும் போதெலாம் பௌர்ணமிக் கடலாய்ப் பொங்குமிக் கேள்வி. சூரிய முதுகு சுட்டுச் சுட்டுக் காய்ந்த பழம்போல் கறுத்துக் கிடக்குமா? வெள்ளை நிலவு பட்டுப்பட்டுப் வெள்ளித் தகடாய்ப் பளபளத்திருக்குமா? ஏவு கணைகள் ஏதும் வராததால் தூய வெண்மையில் துலங்கியிருக்குமா? மேகச் சிராய்ப்புகள் மேலே படாததால் பூவின் தளிர்போல் புதிதாயிருக்குமா? வானவில் இங்கே வந்திராமையால் பாலைவனம் போல் வெறுமையாயிருக்குமா? எண்ணிலாக் கேள்விகள் என்னுள் கொதிக்கையில் பறவை ...
புத்த பூர்ணிமா -1
வெற்று வானத்தில் வண்ணம் குழைக்கும் நெற்றித் திலகமாய் நிலவின் சித்திரம். பௌர்ணமிப் பொழுதில் பார்வையைக் குவித்து நிலவுடன் மனிதன் நின்றிடலாகுமா? வெண்ணிலா என்பது விண்ணையும் சேர்த்துதான். கண்கள் சிமிட்டும் நட்சத்திரங்களைக் கணக்கில் கொள்ளாத கவிதையை என் செய? மரங்களில் பூசிய மர்மக் கறுப்பை விலக்குவதில்தான் நிலவின் ஜாலம். நீல வானத்தில் பாலைச் சிந்திய கிண்ணம் போலக் கவிழ்ந்துள்ள கோலம். கடலலைகளின் கைகளைப் பற்றி கும்மியடிக்கிற கொள்ளை நிலவோ கனத்த மோனத்தில் கனல்கின்ற மலைகள்மேல் கனகாபிஷேகமாய்க் கிரணங்கள் ...
வழிகள் மறந்த வீதிகள்
ஜல்லிக் கலவையின் சட்டியைக் கவிழ்த்த மல்லிகாதான் அதை முதலில் பார்த்தது. “ரோடு ரோலர்” ஏறி நகர்ந்ததும் பாதை தானாய்ப் போகத் தொடங்கிற்று. வீதி மெதுவாய்ப் புரண்டு புரண்டு வேறுதிசையில் விரையலாயிற்று. மேஸ்திரி நாக்கு மேலண்ணத்தோடு. சாஸ்திரி வீதி மட்டுமில் லாமல் அத்தனை தெருக்களும் அசைந்து நடந்தன. தத்தம் போகில் சிதறிக் கலைந்தன. பஞ்சாயத்து போர்டுக்குக் கிளம்பினோர் பைத்தியக்கார மருத்துவமனைக்குள். கொடியுடன் கிளம்பிய பேரணி ஒன்று சுடுகாட்டுக்குள் சென்று சேர்ந்தது. சூழ்ச்சியா? மாயமா? சூழலை ஆய்ந்திட ...
கோடு படுத்தும்பாடு
ஒரு நேர்க்கோடு வரையத்தான் நீண்ட காலமாய் முயல்கிறேன். வேண்டாத இடங்களில் அது வளைந்து கொள்கிறது. நான் சேமித்து வைத்திருக்கும் பதில்களின் பின்னால் நின்று கொண்டு அவற்றைக் கேள்விகளாக்கி விடுகிறது. சாதாரண சம்பவங்களில்கூட ஆச்சரியக் குறியாய் விழுந்து அசிங்கம் செய்கிறது. சத்தியங்களை அடிக்கோடிடும் போதெல்லாம் அடித்தல் கோடாக மாறி அதிர வைக்கிறது. சூனியமே சுகமென்றிருக்கையில் வெற்றிடங்களைக் கோடிட்டு நிரப்பச் சொல்லி நீட்டுகிறது. ஒரு கோட்டில் சிந்திக்க விடாமல் உபத்திரவம் செய்கிறது. கவிதையின் பயணம் தன்போக்கில் நிகழ அனுமதியாமல் ...