ஏன் அப்படி?
எந்த வீட்டுக் குழந்தையென்றாலும் கன்னம் தடவிக் கொஞ்சியிருப்பேன் பளிங்குக் கண்கள் பளிச்சிட வேண்டிக் குரங்குச் சேட்டைகள் காட்டியிருப்பேன். அன்று மாலையும் அப்படியேதான்! புடவைக் கடையில் பொம்மையைப் பார்த்து விழிகள் மலர்த்திய வெள்ளரிப்பிஞ்சை பேனா கொடுத்துப் பழக்கம் செய்ய நேரம் அதிகம் ஆகவில்லை. மிக மிக சீக்கிரம் நண்பர்களானோம். சொற்கள் தொடாத செப்புவாய் திறந்து “கக்கக்கா”வெனக் கவிதைத் தெறிப்புகள் குதலையின் சுகத்தில் காணாமல்போய் மொழியைத் தொலைத்து மண்டியிட்டிருந்தேன். என்னையும் பொம்மையாய் எண்ணிய குழந்தை தன்னிரு கைகளால் தொடவந்தபோது ...
துளித்துளியாய்…
தென்றலில்லாத இன்றைய புழுக்கத்தை மௌனமாய் ஏற்பதன்றி வேறென்ன செய்யுமாம் வெள்ளைப் பூக்கள். சூரியனுக்குத்தான் தெரியும்… நிலாக்கால வெளிச்சத்தையும் நட்சத்திரக் கண் சிமிட்டலையும் பார்க்கக் கிடைக்காத வருத்தம். இன்னும் கொஞ்சநேரம் பாடிக் கொண்டிருக்குமாறு சொல்லியனுப்ப முடியுமா? அந்த அக்காக் குருவியிடம்! மிகுந்த பக்குவம் வேண்டியிருக்கிறது. சோகத்தை எதிர்கொள்வதற்கல்ல ஆறுதல் சொல்வதற்கு. பூக்களின் ராஜ்ஜியத்தில் எப்படி முளைக்கலாம்? பார்த்தீனியங்கள்! பந்தயக் குதிரைக்குத் தீவனம் சுமந்து, வண்டியிழுக்கும் நொண்டிக் குதிரை. (இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து) ...
பத்மாசுரர்கள்
தவத்தின் உச்சியில் தோன்றிய கடவுளின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்தான் தவசி. சும்மா இருந்த கடவுளை இப்படி வம்புக்கிழுத்தா வேடிக்கை பார்ப்பது? கொணர்ந்த வரங்களை என்ன செய்வான் பாவம்! திண்ணையில் வைக்க அனுமதிக்கலாம்தான். கல்லாய் இறுகிக் கிடக்கிற திண்ணை பெண்ணாய் எழுந்தால் பொறுப்பேற்பவர் யார்? வரந்தர வந்த கடவுளுக்கெதற்கு அபலைப் பெண்ணின் சாபங்களெல்லாம்? விழிக்கும் கடவுளின் முதுகுப் பின்னே சிரிப்பை அடக்கத் தவிக்கிறான் தவசி. ‘அக்மார்க்’ முத்திரை அற்ற வரங்களை இக்காலங்களில் யார்தான் வாங்குவார்? ஆயுள் விருத்தி ...
எதிர்பார்ப்பு
கப்பல் வருகிற திசையைப் பார்த்துக் கண் விழித்திருக்கும் கலங்கரை விளக்கம். வெளிச்சக் கூக்குரல் வீசிவீசித் திரைகடல் முழுவதும் தேடிப் பார்க்கும். தொலைந்துபோன பிள்ளையைத் தேடும் தாயின் தவிப்பு அதிலே தெறிக்கும். நிதான கதியில் நகர்ந்து வருகிற கப்பலைப் பார்த்தால் குதியாய் குதிக்கும். “இதோ பார்! இதோ பார்!” என்கிற தவிப்பு கடலலை இரைச்சலில் கேட்டதோ? இல்லையோ-? நிலத்தில் ஊன்றி நிற்கிற போதும் நிலை கொள்ளாமல் நடுங்கிச் சிலிர்க்கும். கண்டு கொள்ளாமல் கப்பல் நகரும். தனது சுமைகளைத் ...
பச்சை விளக்கு
சின்னப் பயணமாயிருந்தால்கூட உன்னிடம் சொன்ன பிறகுதான் கிளம்புவேன். அரைமணி நேரந்தான் ஆகுமென்றாலும் சொல்லியே ஆக வேண்டுமெனக்கு. தெருமுனை வரைக்கும் போவதும், உனக்குத் தெரியாமல் இதுவரை நிகழ்ந்தேயில்லை. இருப்புப் பாதையாய் நீளுமென் வாழ்க்கையில் பச்சை விளக்காய்ப் பரிணமிக்கிறாய் நீ. பாதை முழுவதம், உன் புன்னகை என்னுடன் கூட வருவதைக் கண்டிருக்கிறேன். உன்னிடம் சொன்னபின் தொடரும் பயணத்தில் மலைகளைச் சுமப்பதும் மகிழ்ச்சியாயிருக்கும். சொல்லாமல் என்றேனும் கிளம்ப நேர்ந்தால் இதயம் முழுவதும் கனமாயிருக்கும். தினசரி அலுவல்கள் தொடங்கவும், உனது அனுமதி ...
ஈகை
உன்… தோள்பை நிறையத் தங்கக் காசுகள். ஈதலுக்கானதோர் கர்வமில்லாமல் விரல்களை இழுத்து வலியப் பிரித்து எல்லோர் கையிலும் திணித்துப் போகிறாய். கொடுப்பது உனக்குக் கடமை போலவும் வாங்கிக் கொள்பவர் வள்ளல்கள் போலவும் பணிவும் பரிவும் பொங்கப் பொங்கத் தங்கக் காசுகள் தந்து கொண்டிருக்கிறாய். திகைத்து நிற்பவர் கண்களிலிருந்து தெறிக்கிற மின்னல்கள் ரசித்தபடியே பொன்மழை பொழியும் மேகமாய் நகர்கிறாய். கைகள் வழியக் காசு கொடுக்கையில் ஒன்றோ இரண்டோ தவறி விழுந்தால் பதறி எடுத்துத் தூசு துடைத்து வணங்கிக் ...