Blog

/Blog

வெப்பம்

  குளிர்சாதன அறை கொடுக்காத சுகத்தில் உறைந்து போனவனாய் உள்ளே இருந்தேன் விறைக்கும் அளவு ஆனபின்னால்தான் வெப்பம் தேடி வெளியே நடந்தேன். குளிர்காய்வதற்கெனக் கூட்டிய நெருப்பில் அலட்சியத் தணலே அதிகமிருந்தது. நிராகரிப்பின் சூட்டைப் பொறுக்க வழிதெரியாமல் வீதிக்கு வந்தேன். தெரிந்த மனிதர்கள், புதிய உறவுகள் வரிசையாய் எதிரே வந்து கொண்டிருந்தனர். பழைய பகைவர்கள் சிலருமிருந்தனர். ஒவ்வொருவராய் வந்து கைகள் குலுக்கினர். எங்கெங்கோ நான் தேடிய வெப்பம்… இங்கே, இவர்கள் உள்ளங் கைகளில்!     ...

விளையாட்டு

  பகடைக் காயாய்ப் புதிர்கள் உருள்கையில் திருப்பிப் போடத் தெரியவில்லை. வினாத்தாள் இருந்தும் விடைகளில்லாமல் தேர்வுகள் எழுதும் விபரமில்லை. கூட்டல் பெருக்கல் கணக்கைத் தவிர வகுத்தல் கழித்தல் விளங்கவேயில்லை. பரிசோதனைகள் பொய்யாய்ப் போயும் மூல சூத்திரம் மறக்கவேயில்லை. சதுரங்கத்தில் காய்கள் நகர்த்தும் சாமர்த்தியமே போதவில்லை. முட்செடிகளுக்கு முகமூடிகளாகப் பூக்கள் இருப்பது புலப்படவில்லை. ஒவ்வொரு தடவையும் விளையாட்டுகளில் ஒப்புக்காக சேர்க்கப்பட்டும் ஒருமுறைகூட வேண்டா வெறுப்பாய் விளையாடியதாக ஞாபகமில்லை. இத்தனை இருந்தும் இந்த வாழ்க்கை பிடித்திருப்பதுதான் புரியவேயில்லை. (இதற்கு முன்னால் ...

இருந்தபோதிலும்

சுடச்சுடச் செய்திகள் சுவைத்த காலம்போய் குளிர்ந்த சொல்லுக்குக் காத்துக் கிடக்கிறேன். மனிதர்களை விட்டு விலகிய நாட்கள் போய் தோழமையோடு தழுவிக் கொள்கிறேன். இறுக்கமான என் இயல்புகள் விட்டு நெருக்கமான நட்பில் திளைத்திருக்கிறேன். கணக்குகள் நிறைந்த வணிக உலகிலும் வருத்தமில்லாமல் விட்டுக் கொடுக்கிறேன். பகையோ பொறாமையோ தலையெடுக்காத போட்டிகளில் மட்டும் பங்கு பெறுகிறேன். நிகழ்ச்சி நிரலில் ஒவ்வொரு நாளும் நெகிழ்ச்சிக்கு நிறைய நேரம் தருகிறேன். இருந்தபோதிலும் எப்படி யாவது எதிரிகள் ஒருசிலர் ஏற்படுகிறார்கள்… பழகி வருபவர் பட்டியிலிருந்தே… (இதற்கு ...

தேசியத் தமிழர் சின்ன அண்ணாமலை

முன்பொரு காலத்தில் தமிழ்மொழி மீதான ஈடுபாட்டை வளர்ப்பதில் அரசியல் இயக்கங்களுக்கு பெரிய பங்கிருந்தது. 50 களிலும் 60 களிலும் தேசிய இயக்கங்களுக்கும் திராவிட இயக்கங்களுக்கும் இதில் ஒரு போட்டியே நிலவிற்று. அந்த நாட்களில் தேசிய இயக்கங்களில் இருந்து மிகச்சிலரே இலக்கியவாதிகளாகவும், மக்கள் ரசனையை ஈர்க்கக் கூடிய பேச்சாளர்களும் உருவாயினர். இன்றும் தேசிய இயக்கங்களின் நிலை இதுதான். காங்கிரஸ் இயக்கத்தின் குறிப்பிடத்தக்க பேச்சாளராகவும் கட்டுரையாளராகவும் அந்நாட்களில் விளங்கியவர் திரு.சின்ன அண்ணாமலை,ராஜாஜிக்கு நெருக்கமனவர் என்றாலும் காமராஜரின் அன்பைப் பெற்றவர்.சிவாஜி கணேசனின் ...

நாளையின் அனுபவம்

  நாளைக்கொரு நந்தவனம் போயிருந்தேன் வந்து சேராத நேற்றுகளுக்காக அங்கேதான் நான் காத்திருந்தேன். நாளையின் நந்தவனம் மிக அழகானது நிறம் நிறமாய்க் கற்பனைகள் கண்பறிக்கும் இடமது. நேற்றுகள் கொண்ட மரண தாக்கத்தைத் தணிக்கிற ஊற்று அங்குதான் உள்ளது. “கணகண”வென்ற கனவின் சூட்டுடன் நாளையின் உணவு மேஜையின் விருந்துகள் ஆறிப்போகாத உணவுகளின் வரிசை வந்து சேராத நேற்றுகளுக்காக. நாளையின் நந்தவனம் மர்மங்கள் நிறைந்தது. இன்றென் முகத்தில் துப்பிய காலம் என்னை முத்தமிடப் போவதும் அங்குதான். அடடா! சொல்ல மறந்து ...

சகவாகம்

  பழைய காலத்துப் போர்வாள் ஒன்றை மலர்க் கூடைக்குள் மறைந்திருந்தார்கள். வீரன் ஒருவன் வெறி கொண்டு சுழற்ற குருதிப்புனலில் குளித்து வந்திருக்கும். தேக்கு தேகங்கள் கிழித்த வாளுக்குப் பூக்களின் ஸ்பரிசம் புதிதாயிருக்கும். வாள்முனையிருந்து வருகிற நெடியோ தேனீக்களுக்குத் திகைப்பைக் கொடுக்கும். கூரிய முனையில் வண்டுகள் அமர்ந்தால் கழுவேற்றங்கள் கண்முன் நடக்கும். மலர்க்கூடைக்குள் போர்வாள் போன மர்மமெனக்கு விளங்கவேயில்லை. பூக்களுக்குப் பாதுகாப்பாகவா? களைத்த போர்வாள் கண்ணுறங்கவா? கொடிகளிடம் போய்க் கேட்டுப் பார்த்தேன் வருபவர், செல்பவர், விரலால் தீண்ட… வதங்குகின்றவாம் ...
More...More...More...More...