மொழிபெயர்ப்புக் கவிதைகள்-ஒரு குழந்தையின் முதல் துயரம்
(5 வயதுச் சிறுவன் ஒருவன் மரணமடைந்த தன் மழலைத் தம்பியைத் தேடுகிறான். அவனுக்கு யாரோ ஆறுதல் சொல்லி அவன் தம்பி இறந்த தகவலையும் சொல்கிறார்கள். அந்த அதிர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறார் ஃபெலிசியா.டி.ஹெமன்ஸ் என்கிற பெண் கவிஞர்.) The Child’s First Grief Oh, Call my brother back to me I cannot play alone, The summer comes, with flowers & bee Where is my brother gone? The flowers ...
கவிஞர்கள் திருநாள்
(13.07.2017இல் திருச்சியில் நடந்த கவிப்பேரரசு வைரமுத்து பிறந்த நாளில் செம்மொழிக் கவியரங்கில் தலைமையேற்றுப் பாடிய கவிதை) உச்சிப் பிள்ளையார் வீற்றிருந்து உலகைப் பார்க்கிற மலைக்கோட்டை! வெற்றித் தமிழர் பேரவையின் விழாவால் இன்றிது கலைக்கோட்டை! கபினியின் காவிரி பாய்ந்து வரக் காலம் கனிகிற வேளையிலே கவிதைவெள்ளம் கரை புரண்டு திருச்சியை நனைக்கும் தோழர்களே! நாடு முழுவதும் பீடு நடையிடும் பேரவைக்கிது பண்டிகையாம்! ஈடில்லாமல் திருச்சி மாவட்டப் பேரவை நடத்தும் உற்சவமாம்! உற்சாகத்தின் உற்சவ நாளில் உள்ளம் குலுக்கும் கவியரங்கம்! ...
கலை மன்னன் ராஜராஜன்
(1997இல் தஞ்சையில் நடந்த சதயவிழாக் கவியரங்கில் வாசித்த கவிதை. தலைமை – கவிஞர் சிற்பி) காரிகையாள் காவிரியின் அலைமுத்தங்கள் கன்னத்தில் படிவதனால் சிவந்த பூமி; தாரகைகள் நடுவிலொரு நிலவைப் போல தலைநிமிரும் கலையழகில் சிறந்த பூமி; தூரிகைகள் தீண்டாத வண்ணம் மின்னும் தோகைமயில் மங்கையர்கள் நிறைந்த பூமி; பேரலைகள் சமுத்திரத்தில் உளநாள் மட்டும் பேர்சொல்லும் ராஜராஜன் நடந்த பூமி! தஞ்சமென வருவார்க்கு இடம் கொடுத்துத் தஞ்சையெனப் பெயர் பெற்ற நகரந்தன்னில் விஞ்சுபுகழ் மாமன்னன் ராஜராஜன் விரிந்த புகழ் ...
கம்பன் – என் காதலி
(2002இல் சென்னை கம்பன் விழாக் கவியரங்கில் பாடிய கவிதை -கவியரங்கத் தலைமை – கவிஞர் வாலி) பத்துத் தலைகொண்ட ராவணன் நெஞ்சில் படர்ந்த காதல் ஒருதலைக் காதல் கெட்ட மனம் கொண்ட சூர்ப்பநகைக்குள் கிளர்ந்த காதல் தறுதலைக் காதல் சுத்த வீரன் ராமன் மீது சீதை கொண்டதே சுந்தரக் காதல் இத்தனை காதலும் எழுதிய கம்பன்மேல் எனக்குப் பிறந்தது இலக்கியக் காதல்! பாலகாண்டத்தில் பார்வை கலந்தது அயோத்யா காண்டத்தில் அன்பு மலர்ந்தது ஆரண்ய காண்டத்தில் ஆசை கனிந்தது ...
அரிய ஆயுதங்கள் – மௌனம்
(24.07.2005 ஈரோடு சி.கே.கே. அறக்கட்டளை 27ஆவது ஆண்டுவிழாக் கவியரங்கம் – தலைமை கவியரசர் இளந்தேவன்) கவியரங்கில் என் தலைப்பு வரும் முன்னால் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வருகிறேன் ஓர வஞ்சனை ஒன்று செய்தீர்களே – இது நீதியா என்று நின்று கேட்கிறேன். அன்பு, புன்னகை, கண்ணீர், அழகு, பார்வை என்று பாடுவதற்காக அரங்கில் உள்ளனர் அருமைக் கவிஞர்கள் அவரவர் கைகளில் அவரவர் ஆயுதம்! நான் மட்டும் இங்கே நிராயுதபாணியாய் நிற்கின்றேனே நியாயமா இது! கவிதைத் தாள்களைக் ...
முதுமை
(சித்திரைத் திருநாளில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக் கவியரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் பாடிய கவிதை. உடன்பாடிய கவிஞர்கள் – கபிலன், புகழேந்தி, ஆண்டாள் பிரியதர்ஷினி, கனிமொழி) அன்றொரு நாளெங்கள் வள்ளுவக் கிழவனின் அகந்தனில் புகுந்தவள் யார்? அவன்பின்னர் இளங்கோ வழங்கிய சிலம்பினில் அறங்கள் மொழிந்தது யார்? கந்தல் உடை கொண்ட சங்கப் புலவனின் நெஞ்சினில் எழுந்தவள் யார்? அவன் கவிதைகள் முன்னர் சிவிகையும் மகுடமும் பணிந்திடச் செய்தவள் யார்? முந்துபல் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் முன்னர் பிறந்தவள் ...