2018 நவராத்திரி – 9
குறுநகையில் ஒளிகொளுத்தும் கடவூர்க்காரி குறுகுறுத்த பார்வையிலே கவிதை கோடி நறும்புகையில் குங்கிலியக் கலயன் போற்றும் நாதனவன் நாசியிலே மணமாய் நிற்பாள் குறும்புக்குக் குறையில்லை; ஆன போதும் குறித்தபடி குறித்ததெல்லாம் செய்வாள்- இங்கே மறுபடியும் வராவண்ணம் மறலி பாதை மறிக்கின்ற மஹாமாயே அருள்வாய் நீயே வெஞ்சமரே வாழ்க்கையென ஆகும் போதும் வடிவழகி திருமுன்னே நின்றால் போதும் விஞ்சிவரும்புகழ்நலனும் பெருமை யாவும் விருப்பங்கள் கண்முன்னே வந்து மேவும் நெஞ்சிலொரு ...
2018 நவராத்திரி – 8
சந்தனக் காப்பினில் குங்கும வார்ப்பென சக்தி திகழுகின்றாள் – எங்கள் சக்தி திகழுகின்றாள் வந்தனை செய்பவர் வாழ்வினில் பைரவி வெற்றி அருளுகின்றாள் – புது வெற்றி அருளுகின்றாள் அன்புக் கனலினைக் கண்ணில் சுமந்தவள் ஆற்றல் பெருக்குகின்றாள் – எங்கள் ஆற்றல் பெருக்குகின்றாள் துன்பச் சுவடுகள் தீர்த்து முடிப்பவள் தொட்டு மலர்த்துகிறாள் – உயிர் தொட்டு மலர்த்துகிறாள் பல்வகைப் பூக்களின் புன்னகைக் கோலத்தில் பைரவி மின்னுகிறாள் – லிங்க பைரவி மின்னுகிறாள் வெல்லும் வழிவகை சொல்லும் மவுனத்தில் வித்தகம் ...
2018 நவராத்திரி -7
வாழ்வினில் ஆசை வைப்பவர்க்கெல்லாம் வரமாய் வருபவள் நீ தாழ்வுகள் மாற்றி தவிசினில் ஏற்றி தாங்கும் கருணையும் நீ ஊழ்வினை எழுத்தை உடனே மாற்றும் உன்னத சக்தியும் நீ சூழ்ந்திடும் செல்வம் சுடர்விடும் வாழ்வை அருளுக திருமகளே பாற்கடல் நிலவே பகலெனும் ஒளியே பாதங்கள் தொழுகின்றோம் மாற்றங்கள் தருக மேன்மைகள் தருக மலரடி வணங்குகிறோம் ஆற்றல்கள் பெருக்கு ஆயுளைப் புதுக்கு அருளை நாடுகிறோம் நேற்றையும் இன்றையும் நாளையும் ...
2018 நவராத்திரி – 6
கண்கள் நிலவின் தாய்மடியாம் கரங்களில் சுரங்கள் கனிந்திடுமாம் பண்கள் பெருகும் யாழ்மீட்டி பாரதி சந்நிதி துலங்கிடுமாம் எண்கள் எழுத்தின் வர்க்கங்கள் எல்லாம் எல்லாம் அவளேயாம் புண்ணியள் எங்கள் கலைமகளின் பூம்பதம் போற்றிப் பாடிடுவோம்! ஏடுகள் எழுதுகோலுடனே இயங்கும் கைகளில் ருத்ராக்ஷம் ஆடல் பாடல் சிற்பமெனும் ஆய கலைகள் அவள்ரூபம் தேடித் தொழுவார் நாவினிலே தேனாய் கவிகள் தருபவளைப் பாடிப்பாடி வினைதீர்வோம் பங்கய ஆசனி வாழியவே! கூர்த்த மதியில் அவளிருப்பாள் கோலங்கள் வரைகையில் அவளிருப்பாள் பார்த்த அழகுகள் அனைத்தையுமே ...
2018 நவராத்திரி 5
மயில்சாயல் கொண்டவளா மங்கை – அந்த மயிலுக்கு சாயல்தந்த அன்னை கயலுக்கு சாயல்தரும் கண்ணால் -இந்த ககனத்தைத் தான்படைத்தாள் முன்னை புயல்சாயல் கொண்டதவள் வேகம்-அந்தப் பொன்வண்ணன் விழிபடரும் மோகம் முயல்கின்ற தவத்தோடே ஒளிர்வாள் – அவள் முன்புவர மாட்டாமல் ஒளிவாள் பிறையொன்று சிரங்கொண்ட பிச்சி -கதிர் பொன்திலக மாகவொளிர் உச்சி முறையெல்லாம் அவள்தானே படைத்தாள்-அதை முந்திவரும் பக்தருக்காய் உடைத்தாள் கறைக்கண்டன் செய்தவத்தின் வரமாய்-அந்தக் காங்கேயன் கைவேலின் உரமாய் தந்திமுகன் தாய்தானே திகழ்வாள் – இங்கு தினந்தோறும் விடியலென ...
2018 நவராத்திரி 4
குளிரக் குளிர குங்குமம் கொட்டி மலர மலர மாலைகள் கட்டி ஒளிர ஒளிர தீபம் ஏற்றினோம்- தளரத் தளர பொங்கலும் வைத்து தழையத் தழையப் பட்டையும் கட்டி தகிட தகிட தாளம் தட்டினோம் குழையக்குழைய சந்தனம் இட்டு கனியக் கனிய கனிகளும் வைத்து உருக உருக கைகள் கூப்பினோம் வருக வருக வாலை நீயே தருக தருக ஞானம் தாயே சுடர சுடர சூடம் ஏற்றினோம் கருகும் கருகும் வினைகள் எல்லாம் பெருகும் பெருகும் நலன்கள் எல்லாம் ...