கம்பன் சொன்ன கதை
(விழுப்புரம் கம்பன் விழாக் கவியரங்கில் தலைமையேற்றுப் பாடிய கவிதை) அன்றும் இன்றும் நடப்பதெல்லாம் ஆம். எங்கள் கம்பன் சொன்ன கதை. அங்கும் இங்குமாய் மாறுதல்கள் ஆனால் அடிப்படை மாறவில்லை. பிரியம் மணக்கும் காதல்முன் பெரிய தனுசொரு பொருட்டில்லை அரசகுமாரன் மட்டுமல்ல, ஆண்டியின் மகனும் விலக்கில்லை மந்தரை சூழ்ச்சிகள் செய்வதனால் மகுடங்கள் உருள்வதும் நிற்கவில்லை. தந்திரம் வல்ல தலைவர்களும் & இதைத் தடுக்கிற வழிகள் கற்கவில்லை. அரண்மனைக்குள்ளே மோதல்கள் அடுத்தவன் மனை மேல் காதல்கள் அனுதினம் எங்கள் ஏட்டினிலே ...
நதிகளின் சங்கமம் – கிருஷ்ணா
(2003ல் திருக்கோவலூர் கபிலர் விழாவில் வாசித்த கவிதை. கவியரங்கத் தலைவர் சொ.சொ.மீ. சுந்தரம்) மகாராஷ்டிரத்தின் மகளாய்ப் பிறந்தாய்! கர்நாடகத்தில் கால் வைத்துக் கடந்தாய்! ஆந்திர வெளிகளில் ஆடித் திரிந்தாய்! விரிகுடாக் கடலில் விரும்பிக் கலந்தாய்! நதிகளின் நீயரு ரதியெனச் சிறந்தாய்! தமிழ் மண்ணை மட்டும் ஏனடி மறந்தாய்! துச்சாதனன் அன்று துகிலுரிய முயலுகையில் அச்சோ கிருஷ்ணா என அலறினாள் பாஞ்சாலி! பச்சை வயல் பெண்ணின் பசுமைத் துகில் பிடித்து பஞ்சம் உரிகிறதே! பாய்ந்து வரவில்லையா நீ! ஆந்திர ...
பாரதியின் பன்முகங்கள்- வீரசுதந்திரம்
அரங்கம் (கவியரங்கக் கவிதைகள்) (சென்னை பாரதியார் சங்கம் நடத்திய கவியரங்கில் வாசித்த கவிதை. கவியரங்கத் தலைவர் டாக்டர்.பொன்மணி வைரமுத்து) ஏங்கிக் கிடக்கிற இந்தியருக்கு ஏழ்மையும் பிணியும் என்றும் நிரந்தரம்; தேங்கிக் கிடக்கிற அரசியல் குட்டையில் தீய கிருமிகள் தினமும் பிறந்திடும்; தூங்கி வழிகிற தலைவரை நம்பியே துவண்டு விழுகிற தொண்டர்கள் ஆயிரம்! – நீ வாங்கச் சொன்னது வீர சுதந்திரம்; வாங்கி வந்ததோ வேறு சுதந்திரம்… பாரதி! எரிப்பது குறித்த நெருப்பினுக்கும் வகுப்புகள் எடுத்த வீரியப் புலவனே! ...
சில ரகசியங்கள்
என்னளவில் நான் சுதந்திரமானவன்; துயரம்-மகிழ்ச்சி-தொடமுடியாத உயரமென் உயரம்; உலகை முழுதாய் அள்ளிக் கொள்கிற அகலமென் இதயம்; நட்சத்திரங்களின் இருப்பை, மறைவை, நிலவின் நீண்ட பயண வலியை, இரவு நேரக் காற்றின் இசையை, இருட்டு முதல்முதல் ஏற்படும் திசையை, கணக்கில் வைக்கிற கவிதைகள் எனது; உலக நதிகளை ஒரு துளியாக்கிப் பருகக் கொடுப்பதென் பொழுது போக்கு; வரைபடம் கடந்த வெளிகளில் எனது புதிய உலகம் விதை கொண்டுள்ளது; கால்நடையாய் நான் போகிற திசைகளில் புதிய செடிகள் பூக்களை மலர்த்தும் ...
நீராட வந்த நதி
காமக் கடலலைகள் காதல் முகிலாகி பூமி முழுவதுமே பூத்தூவும் – ஆம் நெஞ்சே! வேகும் தினவெல்லாம் வெந்து தணிந்திருக்கும் போகம் அலுத்துவிட்ட போது. வீட்டுச் சிறைக்குள் வெதும்பும் குருவிக்குக் காட்டுச் சிறகு கொடுத்ததுமே – பாட்டிசைத்து விண்ணில் பறந்தோடி வெண்ணிலவின் மீதேறி மின்னல் இரையெடுக்கு மோ. அழுக்கு மனதின் அணைக்கட்டு தாண்டி வழுக்கி நழுவி வெளியேறி – சழக்கருடன் போராடி, மேனி பழுதாகி, ஆழ்கடலில் நீராட வந்த நதி. நீர்குடித்து & வெய்யில் நலங்குடித்து – மெல்லவே ...
காலம்
காலம் என்கிற சித்திரக்காரனின் கைவசம் உள்ளது தூரிகை – அது காதல் என்கிற சித்திரம் தீட்டிடத் தேவையெல்லாம் ஒரு நாழிகை! அடிமனம் என்கிற திரைச்சீலை மேல் அந்தச் சித்திரம் தோன்றலாம் – ஒரு முடிவில்லாத வடிவத் தொடராய் மோகப் புனைவுகள் நீளலாம்! பருவங்கள் கடந்த பரவசம் காதல் பழைய இலக்கணம் மீறலாம் – அது வருவதும் போவதும் நம்வசம் இல்லை வயதுகள் கடந்தும் பூக்கலாம்! உனக்குள் பூத்த ஒற்றைப் பூவினை ஒளித்து வைக்கவா போகிறாய்-? – அது ...