Blog

/Blog

நிழலின் முதுகில் வெய்யில்

வழிநடைப் பயணத்தின் நிழற்குடைகள் வாழ்க்கை முழுவதும் வருவதில்லை வழியில் பார்க்க நேர்ந்ததென்று விட்டுச் செல்லவும் முடிவதில்லை! தனித்து நிற்கும் குடைகளுக்கும் துணையின் தேவை இருக்கிறது! தயக்கம் தடுக்கும் காரணத்தால் தனிமையில் வாழ்க்கை கழிகிறது! பாதையும் பயணமும் முக்கியமா? பாதியில் பார்த்தவை சரிவருமா? ஏதும் புரியாக் குழப்பத்திலே ஏனோ உள்மனம் அலைகிறது! முடிந்த வரைக்கும் இருந்துவிட்டு மெதுவாய் நகர நினைக்கிறது: கடந்துபோகும் நேரத்திலே கண்கள் குடையை அளக்கிறது! குடையின் தலைமேல் வெய்யில்விழும் கடக்கும் பறவையின் எச்சம் விழும் ‘அடடா’ ...

கண்களில் ஆகாசம்

அத்தனை மென்மையும் சேர்த்து வைத்தாய் – ஓர் அழகி உன்போல் பிறந்ததில்லை! மொட்டுக்கள் திறந்த மலர்களெல்லாம் இத்தனை புதிதாய் இருந்ததில்லை! கொடுப்பதும் எடுப்பதும் யாரென்று கூடல் பொழுதில் தெரியாது இழப்பதும் பெறுவதும் ஏதென்று இரண்டு பேருக்கும் புரியாது! வெளிச்சம் மறைத்த திரைச்சீலை வெட்கத்தில் நடுங்கி அலைபாய அனிச்சப்பூ என் தோள்மீது ஆனந்த அவஸ்தையில் தலை சாய ஒரு நொடிக்குள்ளே அண்டமெல்லாம் ஒடுங்கிப் போனது நமக்குள்ளே ‘சரசர’வென்று ஒரு வேகம் சீறியெழுந்தது எனக்குள்ளே உரசிய உதடுகள் தீப்பிடிக்க உள்ளே ...

இனிமேல் தாங்காது

மூடியிருக்கும் மொட்டைப் போல மௌனம் கூடாது; ஊறியிருக்கும் ஆசை மதுவும் ஆறக் கூடாது; வாடியிருக்கும் மனசைப் பார்த்தும் விலகக் கூடாது – என் வாழ்வின் மழையே இறங்கி வா வா இனிமேல் தாங்காது! மூடமறுக்கும் இமைகள் இரண்டும் துளியும் தூங்காது; மோக போதை ஏறிய நெஞ்சில் தாகம் தீராது; பாடிய கவிதை வரிகளிலே என் பாரம் இறங்காது; பௌர்ணமிப் பெண்ணே                      வெற்றிக்கோப்பைகள் நீயில்லாமல்                                                        வாங்கும் போது ...

எப்படியோ?

பொன்னில் வடித்த சிலைக்குள்ளே – சில பூக்கள் மலர்ந்தது எப்படியோ? என்னை நனைத்த தேனலையே – கரை ஏறிப் போவதும் எப்படியோ? அபிநயக் கண்களின் ஆழத்திலே – நான் அசுர வேகத்தில் மூழ்கிவிட்டேன் சலங்கை ஒலி தந்த தாளத்திலே – என் இதயத் துடிப்பினை மீட்டு வந்தேன்! மின்னல்கள் ஓடிய புன்னகையில் – என் மனதைக் குருடாய்ப் போக்கிவிட்டேன் உன்னைத் தீண்டிய மறுகணமே – சில உலகக் கவிதைகள் ஆக்கிவிட்டேன்! உயிரில் சுரந்த அமுதமெல்லாம் – உன் ...

திருப்தியா உனக்கு?

பெருகும் தவிப்பைப் பரிசாய் எனக்குத் தந்து போனதில் திருப்தியா உனக்கு? அருகில் இருந்த வரையில் அடங்கி, நீ இறங்கிப் போனதும் எழுந்தது மிருகம்; நாகரீகம் போர்த்த வார்த்தைகள் மோக வெள்ளத்தில் மூழ்குது சகியே; வரும் புயலுக்கு வேலிகள் தெரியுமா; மனதின் பாஷைக்கு மரபுகள் புரியுமா; நெருங்கியிருந்தும் தூர இருப்பதில் நெருஞ்சிப் புதர்கள் நெருடும் தெரியுமா; உள்ளங்கை வழி இறங்கிய வெப்பம் கன்னம் படர்ந்து கழுத்தில் இறங்கி தேகம் முழுதும் தீயாய் அலைகையில் வேகமெடுத்து வெறிகொளும் நரம்பும்; விரக ...

என்ன செய்ய?

வீரம் ததும்பும் வேட்டை நாயாய்க் குரைப்பது எனக்குச் சுலபம் ஆனபோதும் என்ன செய்ய? ரொட்டித் துண்டில் சபலம்! எனக்கே எனக்கென எழுதும் கவிதைகள் எல்லோருக்கும் பிடித்திருக்கின்றன எல்லோருக்குமாய் எழுதும் கவிதைகள் எனக்கு மட்டுமே பிடித்திருக்கின்றன சொல்ல நினைத்தேன் – சொல்லவில்லை! செய்ய நினைத்தேன் – செய்யவில்லை! வெல்ல நினைத்தேன் – வெல்லவில்லை! வீழ்த்த நினைத்தேன் – வீழ்த்தவில்லை! கொல்ல நினைத்தேன் – கொல்லவில்லை! கொடுக்க நினைத்தேன் – கொடுக்கவில்லை! நிறைய நினைத்தேன் – நிறையவில்லை! ஒன்று நினைத்தேன்… ...
More...More...More...More...