Blog

/Blog

மௌன யுத்தங்கள்

நீ…விட்டுச் சென்ற கவிதை நோட்டின் வெள்ளைப் பக்கங்கள் – என் வாழ்க்கைக்குள்ளே அடிக்கடி நேரும் மௌன யுத்தங்கள் நீ…தொட்டுத் தந்த காகிதத்தில் என்னென்ன வாசங்கள் – அன்று தோன்றும் போதே கனவாய் புகையாய்த் தொலைந்த நேசங்கள் சிப்பிக்குள்ளரு முத்தைப் போல சிநேகம் கொண்டோமே – காலம் தப்பிய பின்னால் திறந்து பார்த்துத் தள்ளிச் சென்றோமே! ஒப்புக்காக விடைபெற்றோமே உள்ளம் கேட்கிறதா – அடி! சிற்பம் போன்ற நினைவுகளை மனம் காவல் காக்கிறதா! எழுதப்படாத பக்கங்கள் இதிலே ஏகம் ...

கடந்து போன காற்று

அத்தனை காலம் வளர்ந்த நம் காதல் ‘சட்’டெனக் கலைந்த அதிர்ச்சியில் போனவன் வருடங்கள் கடந்துன் வீடு வந்திருந்தேன்! வீட்டு வாசலில் இருந்த திண்ணை என்னைப் போலவே இடிந்து போயிருந்தது; முகப்பிலிருந்த ஓடுகள், நமது கனவுகள் போலக் கருகிக் கிடந்தன; முற்றத்தின் மேல் இரும்புக் கம்பிகள், என் உற்சாகம் போல் துருப்பிடித்திருந்தன பின் வாசலின் பீர்க்கங் கொடி மட்டும் உன் நினைவுகள் போல் பசுமையாயிருந்தன அடிக்கடி மனதில் வந்து போகிறது ‘சரசர’வென்று நீ வரைகிற கோலம்; நினைவில் அடிக்கடி ...

பறந்தா போனாய்

கேட்ட நொடியில் கவிதை தரும் கற்பக விருட்சமாய் உன் நினைவு; மீட்டும் யாழின் வடிவினிலே – என் மடியில் கிடப்பதாய் ஒரு கனவு; பௌர்ணமிப் பாடல்கள் பெய்தவளே – எனைப் பாவலனாகச் செய்தவளே! கைநழுவிச் சென்ற காவியமாய் – எனைக் கண்கலங்கச் செய்யும் பொன்மகளே! பாதச் சுவடும் காணவில்லை – நீ பறந்தா போனாய் அஞ்சுகமே? கீதக் கவிதைகள் புனைகையிலே – எங்கோ கானல் நீராய் உன்முகமே! கண்கள் களைக்கத் தேடுகிறேன் – உன்னைக் காணவில்லை உள்ளம் ...

மூங்கில்

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… வண்டு துளைத்த மூங்கிலாக வாழ்க்கை வேண்டிப் பிரார்த்தனை வந்து புகுந்து போகும் காற்று வானில் கலக்கும் கீர்த்தனை காற்றின் உதடு தீண்டும் போது கீதம் பிறக்கும் தத்துவம் ஊற்றெடுக்கும் இசையின் மடியில் உலகம் உறங்கும் அற்புதம் மனித வாழ்க்கை தந்ததென்ன? மனது முழுக்க ரணங்களே! புனிதமான மூங்கிலாகப் பிறந்து வந்தால் சுகங்களே! மூங்கில் இரண்டு உரசும் போது மூளும் கனலும் ராகமே! ஏங்கிப் புலம்பும் ஏழை நெஞ்சே மூங்கில் வாழ்க்கை போதுமே! ...

எத்தனை முத்தங்கள்

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… நிலவினை வருடி ஒளிமுத்தம் பெறுவேன் முகிலினை வருடி மழைமுத்தம் பெறுவேன் தளிர்களை வருடிப் பனிமுத்தம் பெறுவேன் மலர்களை வருடி மதுமுத்தம் பெறுவேன் சலங்கைகள் வருடி ஜதிமுத்தம் பெறுவேன் ஸ்வரங்களை வருடி இசைமுத்தம் பெறுவேன் கனவுகள் வருடிக் கவிமுத்தம் பெறுவேன் உளிகளை வருடிச் சிலைமுத்தம் பெறுவேன் அருவிகள் வருடிக் குளிர் முத்தம் பெறுவேன் நதிகளை வருடி அலை முத்தம் பெறுவேன் பறவைகள் வருடிப் புது முத்தம் பெறுவேன் மழலைகள் வருடி மலர் முத்தம் ...

கவிதை மனம்

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… நிலவில் தெறிக்கும் கிரணங்களை – அது நதியில் எழுப்பும் சலனங்களை மலரில் துளிர்க்கும் அமுதங்களை – அதன் மகரந்தத்துக் கடிதங்களை சிறகு சிலிர்க்கிற பறவைகளை – அதன் சின்னக் கண்களின் கனவுகளை கதவு வைக்காத மனதுக்குள்ளே – தினம் கொட்டிக் குவிப்பது கவிதைமனம் வெள்ளிப் பனித்துளி மகுடமுடன் – புல் வெய்யில் வரும் வரை அரசமைக்கும் மெல்லிய தென்றல் இதைப் பார்த்து மலர்களின் செவிகளில் முணுமுணுக்கும் துல்லிய குரலில் குயில்களெல்லாம் – ஒரு ...
More...More...More...More...