Blog

/Blog

நிலாப் பெண்ணே

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… (உள்ளுர் தொலைக்காட்சி ஒன்றில், நேயர்கள் முதலடி எடுத்துக் கொடுக்க கவிஞர்கள் கவிதை பாடும் நிகழ்ச்சி நடந்தது. அப்படி எழுதிய கவிதை இது. அடியெடுத்துக் கொடுத்த அன்பர் திரு.சரவணக்குமார். காந்தி வீதி, அம்பேத்கார் நகர், வேலாண்டிபாளையம், கோவை). நிலாப் பெண்ணே உன் பயணத்தில் நிறுத்தமென்பதில்லையா? நீலவானம் முழுவதும், நீ நடை பழகும் எல்லையா? உலாப் போகும் பேரழகி ஓய்வு தேவையில்லையா? ஓடி ஓடித் தேய்பிறையாய் இளைப்பவள் நீ இல்லையா? இரவு நேரம் தனிமையிலே ...

மரம்

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… நீண்டு கிடக்கும்உன் பாதையிலே நிற்கிற மரமாய் நானிருப்பேன்! வேர்களில் ஊறிய ஈரத்துடன் & குளிர் விசிறிகள் விசிறக் காத்திருப்பேன்! காலங்காலமாய் நிற்கின்றேன் & உன் காலடி ஓசை எதிர்பார்த்து! கோடைப் பொழுதிலும் இலைகளெல்லாம் உதிரவிடாமல் வழிபார்த்து! அடடா… அடடா… வருகின்றாய் அமுதம் எனக்குள் சுரக்கிறதே! “இதுதான் உன் இடம் வா”வென்றே கிளைகள் காற்றில் குதிக்கிறதே! மண்ணைப் பஞ்சணை ஆக்கிவிட்டேன் மெல்லிய சருகுகள் நீக்கிவிட்டேன் வண்ணப் பறவைகள் கூடுகட்டி & உன் விழிமயங்கும் ...

உன் ஞாபகம்

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… மழைசிந்தும் இளங்காலை நேரம் – என் மனதோடு இதமான ஈரம் இழையாக ஒருபாடல் தோன்றும் – அதில் இசையாகும் உன் ஞாபகம்! அலைவீசி வரும் காதல் வெள்ளம் – இது அணையேதும் இல்லாத உள்ளம் விலைபேச முடியாத இன்பம் – ஒரு விதமான சுகம் வாலிபம்! இதழ்பூத்த சிறுபூவின் மௌனம் – அதில் எழுகின்ற மணம்தானே வேதம் எதை இன்னும் அதுபேச வேண்டும் – இங்கு அதுபோல நம் நாடகம்! விடைதேடும் ...

பனி விலகும் நேரம்

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… வெளியெங்கும் உலர்த்திய பனிப்புடவைகளை மெதுவாய் மெதுவாய் மடிக்கிறாள் மார்கழி; மாற்றலாகிப் போகிற பெண்ணின் விடுதி அறைபோல் வெறுமையில் வானம்; மூர்க்கமான பனியின் அணைப்பை பலவந்தமாகப் பிடுங்குது காலம்; முதுகுத் தண்டை உலுக்கும் குளிரின் சிலிர்ப்புக்கினிமேல் நெடுநாள் ஆகும்; வாசலில் மினுங்கும் வெள்ளைக் கோலம் பறங்கிப்பூ இழந்து வைதவ்யம் பூணும். காது மப்ளரைத் தாண்டும் குளிரின் கிளுகிளுப்பினிமேல் கிழங்களுக்கில்லை; தை பிறக்கும் போது வழியும் பிறக்கும் மார்கழி இழக்கும் வலியும் இருக்கும். முப்பது ...

யமுனா நதிக்கரையில்…

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… இத்தனை உயரமா பிரிவின் துயரம்! அன்பின் பரப்புதான் எத்தனை அகலம்! இரண்டு மனங்களில் எழுந்த காதல் இன்னோர் இமயம் எழுப்பி முடித்ததே! காதலிக்காக ஷாஜஹான் வடித்த கண்ணீர் இங்கே கல்லாய்ச் சமைந்ததே! மனசை இழைத்து மாடங்கள் சமைத்தான்! வயசைத் தொலைத்த விந்தை படைத்தான்! கல்லை முதல் உளி முத்தமிட்டதுமே கல்லறைக்குள் அவள் கண்கள் விழித்தாள்; பார்வையில் தாஜ்மஹால் பருகியபடியே ஈர நிலாவுக்குள் இருக்கிறாள் மும்தாஜ்; யமுனா நதியின் மௌனப் பிரவாகம், அனாதை ...

சிகர வெளிகளில்…

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… தலை தடவும் மேகம்; தொடுந்தொலைவில் வானம்; மலைகளெங்கும் மோனம்; மனம் முழுதும் ஞானம்; கண்கள் மெல்ல மயங்கும், கனவுகளின் மடியில்; விண்ணளந்த மனமோ கவிதைகளின் பிடியில்; உலகிலிதுதானே உயரமான உறவு சிகரம் சென்று காணும் துறவு என்ன துறவு? மைகுழைத்த வானம் மௌனமொழி சொல்லும் கையசைத்துக் கொண்டே கதிர் உறங்கச் செல்லும்; பூமலரும் விசையில், பனியிறங்கும் தரையில்; பூமியெங்கும் நிறையும், வான்மறையும் வரையில்; அம்புலி நிலாவில் வரும் அந்த பனிக்காற்று கம்பளியைத் ...
More...More...More...More...