Blog

/Blog

சாயம் படிந்த வாழ்வு

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… சித்திரக்காரனின் தூரிகை முனையாய்க் குழம்பி நனைந்து கிடக்குதென் இதயம்; ஒப்ப முடியா நிறங்களிலெல்லாம் தப்ப முடியாதென் தலையைத் திணித்துக் கழுத்தை அழுத்தும் சித்திரக்காரனாய்க் காலம் என்னை வேலை வாங்கும்; நேற்றைய சாயம் நீங்கும் முன்னரே மாற்றுச் சாயம் மூச்சை அழுத்தும்; மையம் உலர்ந்தும், முனைகள் நனைந்தும், வறண்ட ஈரத்தில் வாழ்க்கை நடக்கும். கோலப் புள்ளிகள், கோடுகள், விளைவுகள், ஜாலம் காட்டும் சித்திர நேர்த்திகள், தவறி விழுந்த துளிகளைக் கூட சுழித்துக் காட்டும் ...

ரயில் பயணங்களில்…

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… பசித்த பயணிகள் நிரம்பிய ரயிலில் எவர்சில்வர் தட்டு முகத்தை மறைக்க “பூரி கிழங்கு மசால்வடை” என்று கூவியபடியே, கூப்பிடும் முன்னர் நேர்த்திக் கடன் போல் நடந்தார் கிழவர்; அழைக்க நினைத்த பலரும் அவரின் அலட்சியம் உணர்ந்து அமைதி ஆயினர்; கட்டி வந்த பொட்டலங்களை விற்க மறுக்கும் வீம்பும் கோபமும் பூரிகள் சுட்ட மருமகள் மீதா? பொட்டலம் கட்டிய பிள்ளையின் மீதா? தடதடக்கின்ற ரயில் சத்தத்தில் ஒருமணி நேரம் தூங்கிய திருப்தியில் எழுந்து ...

பாத பூஜை

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… ஆலயம் ஒன்றின் குட முழுக்குக்குப் போய் வருகின்ற பாதையில் தனது பூர்வாசிரம வீடு தென்பட காரை நிறுத்தக் கட்டளை பிறந்தது! பீடாதிபதியாய்ப் பட்டம் தாங்கி ஆண்டுகள் இரண்டே ஆகியிருந்த இளம் சந்நியாசி, இல்ல வாசலில் “எழுந்தருளியதும்” ஒரே பரபரப்பு; “சித்தப்பா”! என சிலிர்த்த சிறுவனின் வாய் பொத்திற்று வளைக்கரமொன்று “வரணும் சாமி வரணும்” மெதுவாய் முனகிய கிழவரை “அப்பா” என்று அழைக்க நினைத்து அடங்கிய சாமியால் அபயஹஸ்தம் உயர்த்த முடிந்தது; பாத ...

எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-24

எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… ஃபிலடெல்ஃபியாவிலிருந்து பாஸ்டன் திரும்ப விமானநிலையம் வந்தேன். பாஸ்டனில் இருந்துதான் இந்தியா திரும்புவதாகத் திட்டம். பாஸ்டன்ஃபிலெடல்ஃபியாவுக்கு ஏர்டிரான்ஸ் என்கிற உள்ளூர் விமானம், நம்மூர் ரயில்கள் போல் இரண்டு மணி நேரத் தாமதம். அதைவிட வேடிக்கை, வெவ்வேறு ஊர்களுக்காக அருகருகே நிற்கிற விமானங்களில், நம் கிராமத்துப் பேருந்துகளில் நடப்பது மாதிரி விமானம் மாறி ஏறுகிற கூத்துகளும் நடந்தன. விமானி பலமுறை அறிவித்தபிறகு “ஓ! காட்” என்று இறங்கி அடுத்த விமானத்தில் தொற்றிக் கொண்டவர்களும் ...

எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-23

எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… பிலடெல்ஃபியா, அமெரிக்காவின் இரும்பு மனிதர்கள் கூடி அரசியல் சட்டத்தை வடிவமைத்த இடம். என் பயணத்திட்டத்தின்படி அங்கே ஒருநாள் தான் செலவிட முடிந்தது. ஃபிலடெல்ஃபியாவில் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணிபுரியும் ஃபெரோஸ்பாபு, என்னை அழைத்துச் சென்ற இடம், பெஞ்சமின்ஃபிராங்க்ளின் ஆராய்ச்சி மையம். உள்ளே நுழைந்தவுடன் பிரம்மாண்டமான சிலையாய்ப் பிள்ளையார் போல உட்கார்ந்திருக்கிறார் பெஞ்சமின் ஃபிராங்க்ளின். உள்ளே காட்சிக்கென்று அபூர்வமான அறிவியல் அம்சங்கள், பெஞ்சமின்ஃபிராங்க்ளினின் பல்வேறு கண்டுபிடிப்புகள். அந்தக் கண்காட்சிக் கூடத்தில் மனித இதயத்தின் ...

எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-22

எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… படகு நிரம்பியதும் பயணம் தொடங்கியது. வெள்ளருவியின் மீது வானவில் கோலமொன்று தகதகத்தது. அருவியை நெருங்க நெருங்க குரல்கள் மங்கத் தொடங்கின. அருவியில் நனைகிற சந்தோஷச் சப்தங்களை விழுங்கியது, அருவி எழுப்பிய சந்தோஷச் சப்தம். கண்திறக்க முடியாத அளவு நீர்த் துகள்களை வாரியிறைத்து வரவேற்றது நயாகரா. முகத்தில் அறைந்த மல்லிகைப் பூக்களாய் நீர்த்துளிகள். தொட்டுவிடப் பார்க்கும் தூரத்தில் அழைத்துப்போய் தொடும் முன்னே திரும்பி விடுகிறது படகு. அருவி விழுகிற மலைப்பகுதி குதிரையின் ...
More...More...More...More...