எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-15
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… ஜீலை-4 டல்லாஸ் மாநாட்டின் நிறைவு தினம். அன்றுதான் அமெரிக்காவின் சுதந்திரதினம். மாநாட்டின் நிறைவாக நடைபெற்ற கலந்துரையாடலின் கருப்பொருள், “ஊடகங்களில் தமிழ்” என்று முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன். தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் திரு.தேவ் ஒருங்கிணைத்த இந்தக் கலந்துரையாடலில் இதழியல், காட்சி ஊடகங்கள், இணையதளம் ஆகியவற்றில் தமிழின் நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இளையராஜாவின் “திருவாசகம்” இசைப்பணியை ஒருங்கிணைத்த அருட்திரு ஜெகத் கேஸ்பர், எடுத்த எடுப்பிலேயே “வணிக நோக்கில் செயல்படுவதால் காட்சி ஊடகங்கள் ...
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-14
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… இரவு ஏழு மணி வெய்யிலில் களைத்துப் போய் காரில் ஏறினோம். ஜப்பானிய உணவகம் ஒன்றிற்குப் போகலாம் என்றார் சந்தானம். அங்கே முற்றிலும் புதியதோர் அனுபவம் எங்களுக்கு. உணவு மேசையை ஒட்டியே அடுப்பு அமைந்து இருக்கிறது. பணிப்பெண் ஒருவர் நமக்குத் தேவையான உணவு வகைகளைக் குறிப்பெடுத்துக் கொண்டு போனார். சில நிமிடங்கள் கழித்து “ஹாய்” என்ற கூச்சலுடன் ஒரு சிறுவண்டியைத் தள்ளிக் கொண்டு வந்தார் ஜப்பானியர் ஒருவர். வண்டியில் பச்சை மாமிசம், ...
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-13
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… அமெரிக்காவின் தொன்மையான மாநிலமாகிய டெக்ஸாஸில் உள்ள டல்லாஸ், பழமையின் சின்னங்களைக் காப்பாற்றி வைத்திருக்கும் கலையழகு நகரம். ஒற்றை நட்சத்திர அந்தஸ்து கொண்டது டெக்ஸாஸ் மாநிலம். புதிதாய் ஒரு தேசத்திற்குள் போகிறபோது அதன் புறத்தோற்றத்தின் பிரம்மிப்புகள் கொஞ்ச நேரத்தில் அடங்கும். புத்திக்குள் புலனாய்வு ஆர்வமொன்று தொடங்கும். அமெரிக்காவை அப்படி அறிந்து கொள்வதற்கான ஆரம்பப் புள்ளியாய் டல்லாஸ் அமைந்தது. நாங்கள் தங்கியிருந்த ரெனாய்ஸன்ஸ் நட்சத்திர விடுதியின் வாசலிலேயே ரயில் நிலையமொன்று இருந்தது. உள்ளூர் ...
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-12
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… சினிமா நடிகர்களுக்கு இருக்கும் செல்வாக்கு பற்றியும், அமெரிக்காவில் வாழும் தமிழ் இளைஞர்களுக்கும் தமிழிலக்கியத்திற்கும் உள்ள இடைவெளி பற்றியும் கவலையோடு பேசினார்கள். ஒருநாள் ஓய்வு. மறுநாள் தமிழகத்தின் மரபு சார்ந்த அம்சங்களுடன் அலங்கரிக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான அரங்கில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பாகிய அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, டெக்ஸாஸ் மாநிலம் டல்லாஸ் மாவட்டத்தில் நடத்திய “தமிழர் திருவிழா 2005”, தமிழ்த்தாய் வாழ்த்து பாடி, குத்து விளக்கேற்றி, கண் கவரும் கலை நிகழ்ச்சிகளோடு ...
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-11
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… நகர்ந்து கொண்டிருப்பது நதியின் இயல்பு. பயணம் செய்வது மனித இயல்பு. இந்தியச் சமய மரபில் பயணம் என்பது ஆன்மீக வளர்ச்சியின் அம்சம். கங்கை, காவிரி, கன்யாகுமரி என்று பல இடங்களுக்கும் பயணம் செய்து, எல்லா இடங்களும் இறைவனின் இருப்பிடம் என்பதை உணரச் செய்வதற்காகவே தீர்த்த யாத்திரைகள் சமயத்தின் பெயரால் செய்யப்பட்டன. “கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்? பொங்கு தண் குமரித்துறை ஆடில் என்? ஓங்கு மாக்கடல் ஓதநீர் ...
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே-10
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து… அன்று இரவே பாஸ்போர்ட் விஷயமாக சென்னைக்குப் புறப்பட்டேன். எனக்கு அமெரிக்க விசா அங்கீகரிக்கப்பட்டு, தூதரகத்தில் இருப்பதையும் புதிய பாஸ்போர்ட் கிடைத்தால் மறுபடி எழுதிப் போட்டு வாங்க வேண்டும் என்றும் பாஸ்போர்ட் அலுவலர்களுக்கு விளக்கினேன். அரைமனதோடு புன்னகைத்து விட்டு “மூன்று மாதங்களில் கிடைத்துவிடும்” என்றார்கள். அப்புறம் “தத்கால்” உள்ளிட்ட குட்டிக் காரணங்களையெல்லாம் அடித்துப் பத்து நாட்களில் பாஸ்போர்ட் வந்துவிட்டது. “உறியில் இருக்கு வெண்ணை எடுத்துக் கொடுங்க அண்ணே” என்று காலில்லாதவன் கேட்ட ...