Blog

/Blog

இணையதளம்

நான் முழுதாய் பங்கேற்கும் முதல் படம் இளம் வயதிலேயே புகழ்ப்பாதையில் வளர்ந்து வரும் இளைஞர் அரோல் கரோலி, படத்திற்கு இசையமைக்கிறார் என்பதை இயக்குநர் சங்கர் சொல்லியிருந்தார். பிசாசு படம் வண்ணத்திரையுலகில் அவர் மேல் வெளிச்சம் பாய்ச்சியிருந்தது. அருள்முருகன் என்ற பெயர் அரோல் கரோலி ஆகியிருந்தது. மிகச்சிறந்த வயலின் கலைஞர் என்றும் அவரைப்பற்றி கேள்விப்பட்டிருந்தேன். மலேசியாவில் வெளியான என் 60 வது நூலாகிய “இணைவெளி” கவிதைத் தொகுப்புக்கு சிஸ்மான்டெக் திரு.வெங்டேஷ், வெற்றித் தமிழர் பேரவையின் சென்னை மாவட்டச் செயலாளர் ...

இணையதளம்

(நான் முழுதாய் பங்கேற்கும் முதல் படம்) இணையதளம் திரைப்படத்தில், காதல் உண்டு, நகைச்சுவை உண்டு, அதிரடி சண்டைக் காட்சிகள் உண்டு. குற்றங்கள் நடைபெறுவதும், குற்றவாளிகளைக் கண்டறிவதுமான உத்திகள் உண்டு. ஆனால், உள்ளடக்கத்திலும், உருவாக்கத்திலும் இது முற்றிலும் புதுமையான படம். இந்தப் படத்திற்கு யார் கதாநாயகன்? யார் கதாநாயகி? என்று நண்பர்கள் கேட்டபோது சொன்னேன். “இந்தப் படத்தில் முதன்மைப் பாத்திரங்கள் உண்டு. கதைதான் கதாநாயகன். கதைதான் கதாநாயகி”. தொடக்கவிழா பூஜையையட்டி சில காட்சிகள் எடுக்கப்பட்ட பின்னர், ஒரு மாத ...

இணையதளம்

நான் முழுமையாய் பங்கேற்கும் முதல்படம்!! கனவுத் தொழிற்சாலையின் கரையோரம் நின்று பார்த்த அனுபவம் நிறைய உண்டு. கஸ்தூரிமான் திரைப்படத்தில் நடித்து, “காமரா முன்னால் கூட நடிக்கத் தெரியாத அளவு நல்ல மனிதர்” என்று பெயர் வாங்கிய பெருமையும் உண்டு. வேறு சூழல்களுக்கு எழுதிய பாடல்கள், “இன்னிசைக் காவலன்” திரைப்படத்திலும், பிறகு “கரிசல் மண்” என்ற படத்திலும் இடம்பெற்ற பிறகு திரை அனுபவம் ஏதும் பெரிதாய் ஏற்படவில்லை. அது ஒரு தனி உலகம். அதற்கென்றே வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் பலர். ...

மனிதன் சமூக விலங்கென்றால்…சமூக ஊடகங்கள் மிருகக் காட்சி சாலைகளா-?

பிறரால் கவனிக்கப்படவேண்டும் என்னும் எண்ணம் எல்லோருக்குமே உண்டு. பிறந்த குழந்தையின் முதல் அழுகை கூட “இங்கே நான் இருக்கிறேன்” என்னும் கவன ஈர்ப்புத் தீர்மானம் தானே! இந்த உந்துதல் எல்லோருக்கும் இருக்கும் என்றாலும் கூட ஃபேஸ்புக் வாட்ஸப் டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் உருவான பிறகு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் விருப்பம் விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து நிற்கிறது. ஃபேஸ்புக் வட்ஸப் டிவிட்டர் போன்றவை சமூக வலைத்தளங்கள் என்று சொல்லப்பட்டாலும் அவை இன்று தனிமனிதர்களின் தகவல் சாதனங்களாகத்தான் உள்ளன. ...

இணைந்த திறமையே சிறந்த திறமை!

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… சிதறிக்கிடக்கும் திறமைகள் ஒன்று சேரும்போதே அற்புதம் நிகழ்கிறது. ஆனால் அன்றாட வாழ்வில் திறமைகள் ஒன்று சேர்ந்தால் அது பெரிய அற்புதமாய் கருதப்படுகிறது. வண்ணத்திரையில் வெற்றி ஒருங்கிணைந்த திறமை. சின்னத் திரையின் வெற்றி ஒருங்கிணைந்த திறமை. இவற்றை திரையரங்கிலும், வீட்டிலும் வாய் பிளந்து பார்த்துவிட்டு அலுவலகம் வந்தால் அடித்துக்கொண்டு சாகிறோம். என்னுடைய திறமையால் ஏற்பட்ட வெற்றியில் இன்னொருவருக்குப் பங்கா என்னும் போட்டி மனப்பான்மையில்தான் பலபேர் வாழ்கிறோம். நம்முடைய திறமை மட்டும் தனித்து ...

சுடுகிற சுடர் கொடு!

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… சில விளக்குகளைக் கண்டால் கண்களுக்கு குளுமையாகவும் இதமாகவும் இருக்கும். ஆனால் சுடரின் குணம் சுடுவது. ஒரு மனிதனின் இலட்சியத்தை நீங்கள் சுடருடன் ஒப்பிடலாம். எனக்கும் இலட்சியம் இருக்கிறது என்று பெயரளவில் சொல்லிக் கொள்பவர்களுக்கு, சுடர் என்பது அழகுப் பொருளாய், அலங்கராப் பொருளாய் கண்களுக்கு இதம் சேர்க்கும் ஒன்றாய் மட்டுமே இருக்கிறது. இலட்சியம் என்பது சுடுகிற சுடர். எட்டும் வரைக்கும் நெட்டித் தள்ளும் நெருப்பு, மனசாட்சியை உலுக்கும் மந்திரம். பூமிக்கு வந்ததன் ...
More...More...More...More...