உலகை மறக்காதவர்களை உலகம் மறப்பதில்லை!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… தன்னை மட்டுமே எண்ணிக் கிடப்பவர்கள், தன்னைத் தானே தாண்டி வருவதற்குள் இந்த உலகம் அவர்களைக் கடந்து வெகுதூரம் போய்விடுகிறது. மிகச் சாமானிய மனிதர்கள், தங்கள் எல்லைகளைத் தாண்டி யோசித்ததன் விளைவாக சாதனை மனிதர்களாய் உயர்ந்திருக்கிறார்கள். எல்லை மீறிய பயங்கர வாதம்தான் தவறு. தான், தனது என்னும் எல்லையைத் தாண்டி உங்கள் எண்ணங்களும், சிந்தனைகளும் வளர வளர உலகம் உங்கள் இருப்பை உணர ஆரம்பிக்கிறது. உலகை விடவும் ஒன்று பெரிதாக முடியுமென்றால், ...
பிரியம் இருள்; பரிவே ஒளி!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… நெருக்கமானவர்களிடம் நாம் காட்டுகிற பிரியம் பற்றாக மாறுகிறது. சில நேரங்களில் அந்தப் பற்று எல்லை மீறுகிறது. வாழ்வின் வெற்றிக்கோடு என்றும் பற்றுக்கோடு என்றும் எந்த உறவுகளை எண்ணுகிறோமோ அந்த உறவுகளாலேயே வலிகள், வருத்தங்கள் ஏற்படுவதும் உண்டு. ஒரு சில மனிதர்களால் நேரும் இந்தக் கசப்பை அகற்றும் சக்தி, அத்தனை உயிர்களிடமும் நாம் கட்டுகிற பரிவுக்கு உண்டு. எதிர்பார்ப்பில்லாத பிரியத்திற்குத் தான் பரிவு என்று பெயர். பிரியம் ஏற்படுத்திய இருளை பரிவு ...
விரல் நீட்டாதே! வலக்கை நீட்டு!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஒரு விஷயம் தவறாகப் போனால், இதற்கு யார் பொறுப்பென்று சொல்ல இந்த உலகம் சுட்டுவிரல் நீட்டத் தயாராக உள்ளது. ஆனால் அந்த நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கு வலக்கரம் நீட்ட வருபவர்கள் வெகு சிலர் தான். குற்றம் சொல்வதால் ஆகப் போவது ஏதுமில்லை. நிலைமையை சீர்செய்ய முயல்வதால் மட்டுமே நடந்ததை மாற்ற முடியும். இந்தப் புரிதல் இருந்தும்கூட குற்றப் பத்திரிக்கை வாசிப்பதில் ஒரு குரூர சுகம் இருப்பதை பலரும் தங்களையும் அறியாமல் வெளிப்படுத்தி ...
மந்திரங்களிலேயே மகத்தானது… மௌனம்
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில்கள் அவசியமில்லை. எல்லாச் சொற்களுக்கும் எதிர்ச்சொல் தேவையுமில்லை. சொற்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தாலும்கூட அந்தச் சொற்களை விலகி நின்று வேடிக்கை பார்க்கும் விவேகத்திற்கே மௌனம் என்று பெயர். எத்தனையோ சூழல்கள் பேச்சால் கெட்டிருக்கின்றன. எத்தனையோ சூழல்கள் மௌனத்தால் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. உதிராத மலர், மரத்தின் அழகு. உதிராத சொல் மனதின் அழகு. “திறனறிந்து சொல்லுக சொல்லை” என்றார் திருவள்ளுவர். அம்பை எய்வதன் முன் வில்லை இழுக்கிற அதே விவேகம் சொல்லை ...
தலைவர்கள் தயார் செய்!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… தனக்குத் தொண்டர்கள் வேண்டும் என்று கருதுபவர்கள் தலைகனத்த தலைவர்கள். தன்னைப் போல் தலைவர்கள் வேண்டும் என்று நினைப்பவர்களே தலை முறையின் தலைவர்கள். அலுவலகம் தொடங்கி அரசியல் வரையில் இன்று ஏற்பட்டிருப்பது தலைமைப் பஞ்சம். ஒருகிணைக்கும் ஆற்றல், முடிவெடுக்கும் திறன், முன்னேற்றும் சக்தி என எத்தனையோ அம்சங்களை வளர்த்தால்தான் ஒரு நிறுவனம் வளரும். இத்தகைய தலைவர்களை வளர்ப்பதே சிறந்த தலைமைப்பண்பின் அடையாளம். சொல்வதைச் செய்பவர்கள் மட்டுமே உடனிருந்தால் அதன் பேர் தலையாட்டி ...
மாறும் ரசனைகள் மலர்த்தும் உங்களை!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஒவ்வொரு பருவத்திலும் உங்களுக்கு ஒவ்வொன்று பிடிக்கிறதா? நீங்கள் வளர்வதாக அர்த்தம். குத்துப்பாட்டு கேட்ட உங்களை மெல்லிசை ஈர்க்கிறது என்றால் மென்மை படியத் தொடங்குகிறது என்று பொருள். முன்னைவிட அதிக நேரம் படிப்பில் கவனம் செலுத்த முடிந்தால் பக்குவம் மலர்கிறது என்று பொருள். வாழ்க்கை ரசனை வளர வளர மனம் மலரத் தொடங்கும். உங்கள் ரசனையை உற்றுக் கவனிப்பதன் மூலமே உங்கள் வாழ்வின் போக்கை உங்களால் உணர முடியும். வயது வளர ...