பற்றிக் கொள்ளுங்கள்! விட்டும் செல்லுங்கள்!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… “மனிதன் நினைப்பதுண்டு, வாழ்வு நிலைக்குமென்று! இறைவன் நினைப்பதுண்டு. பாவம் மனிதனென்று!” கவியரசு கண்ணதாசனின் இந்தப் பாடல் மனித மனத்தின் இயல்பைக் கேலி செய்கிறது. சிறைவாசம் இருந்தவனுக்குக் கூட விடுதலையாகும் கடைசி நாளில் மனம் கனக்கும் என்றால் அதுதான் மனதின் விசித்திர இயல்பு. ஒன்றைப் பற்றிக் கொள்வது பெரிதல்ல. விட்டுவிட வேண்டிய நேரத்தில் விட முடியாமல் தவிப்பதுதான் தவறு. பெஞ்சும் பலகையும் பிடித்து போன பள்ளி மாணவன், அடுத்த வகுப்புக்குப் போக ...
நீங்கள் நிஜமல்ல! நிஜமே நீங்கள்!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… மனித வாழ்க்கையை மாயை என்று பார்ப்பது ஒருவகைப் பார்வை. அதுகூட உண்மையைத் தேடுகிற உள்நோக்கம் கொண்டது. வாழ்க்கை மாயையாக இருக்கலாம். ஆனால் நீங்கள் நிஜம். உங்களைப் பொறுத்தவரை உலகம் என்பது உங்களில் தொடங்குகிறது. உங்களில் முடிகிறது. உங்கள் உடம்பின் ஆயுள் நூறாண்டுகள் மட்டும் என்றே இருக்கட்டும். அதனாலென்ன? உங்கள் செயலின் ஆயுள் ஆயிரமாயிரம் ஆண்டுகள். பலரும் தங்களின் சம்பாதிக்கும் திறமையும் சுவாசிக்கும் திறமையும்தான் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ...
அடக்கம் அழகானது! அகந்தை இயல்பானது!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… பாசாங்கான அடக்கம் ஆபாசம். அடங்காத அகந்தை இயல்பு. மனதில் எழுகிற அகந்தையை இயல்பானதென ஏற்கும் போதுதான் உங்களால் அதைத் தாண்டி வரமுடியும். எனக்கு அகந்தை இருக்கிறதே என்று பதட்டம் கொள்வதால் பயன் கிடையாது. அது இயல்பானது. ஆனால் அதைத் தாண்டி வரவேண்டும். இதற்கு முதல்படி, நம்மைவிட பலமடங்கு பெரிதாக சாதித்தவர்களைப் பற்றி அறிந்து கொள்வது. அவர்களுடன் ஒப்பிடும் போது நம் செயல் சாதாரணம் என்பதை நாமே உணரமுடியும். அப்போது அகந்தை ...
கோலங்கள் மாறும்! கோபங்கள் தீரும்!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… மனிதர்கள் மீதான நம் அபிப்பிராயங்களுக்கு சில சம்பவங்களே அடிப்படை. எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் சாதகமான சூழ்நிலை இருப்பதில்லை. சூழ்நிலையின் வெளிப்பாடே சம்பவம். குறிப்பிட்ட காரணத்தால் இன்று நம் மனதில் கசக்கக் கூடிய ஒருவரின் பக்குவம் நாளை கனியலாம். ஆனால் அவர் பற்றி நமக்கு தொடக்கத்தில் எழுந்த அதே அபிப்பிராயத்தை அப்படியே வைத்துக் கொண்டிருந்தால் அவரின் நல்ல அம்சங்களைத் தவற விடுவோம். உறவுகள் பகையாவதும், பகைவர்கள் உறவாவதும் இயல்பானது. பார்த்த முதல் ...
வளர்ந்த குழந்தைகளை வளர்க்காதீர்கள்!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… “நான் வளர்கிறேனே மம்மி” என்று சொல்லும் குழந்தைகளை காம்ப்ளான் விளம்பரத்தில் பார்க்கிறோம். தாங்கள் வளர்த்தால் தான் குழந்தை வளரும் என்பது எத்தனையோ பெற்றோர்களின் மூட நம்பிக்கை. அது கூடப் பரவாயில்லை. தங்கள் குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள் என்னும் பிரக்ஞை கூட இல்லாமல், தங்கள் கைகளில் தான் அவர்களின் வாழ்வே இருக்கிறது என்றெண்ணும் பெற்றோர் இன்னும் அதிகம். நம் பிரியத்துக்குரிய பிள்ளைகள், ஒரு கட்டத்திற்குப் பிறகு பிரபஞ்சத்தைப் பார்த்து வளர்கிறார்கள். பார்த்த ...
வளைந்து கொடுங்கள் வளைப்பதற்காக!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… இறுக்கமாகவே இருப்பவர்கள் எதையும் சாதித்ததாக சரித்திரமில்லை. வளைந்து கொடுப்பதற்கு தோல்வியென்றும் அர்த்தமில்லை. எல்லா விதிகளுக்கும் விலக்குகள் உண்டு. வாழ்க்கையை மிகவும் வறட்சியாக வைத்துக் கொள்ளாதவர்கள் மலர்ச்சியான உறவுகளை சம்பாதிக்கிறார்கள். அதிகாரத்தாலும் அதட்டலாலும் சாதிக்க முடியாததை அன்பும் அங்கீகாரமும் சாதிக்கிறது. நம்மிடமிருந்து காத தூரம் தள்ளி நின்றவர்கள் கூட, நாம் காது கொடுத்துக் கேட்கத் தொடங்கிவிட்டால் நம்மீது இமாலய நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறார்கள். மற்றவர்களுக்காக இறங்கி வருபவர்கள் மழையைப் போன்றவர்கள் என்றார் ...