Blog

/Blog

கூச்சத்தைக் கொன்றுவிடு!

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… கேட்க வேண்டியதைக் கேட்காமல் போகிறபோதல்லாம் உங்களுக்கு என்ன நிகழ்கிறது தெரியுமா? நீங்கள் பெறவேண்டியதைப் பெறாமலேயே போகிறீர்கள். வீதியில், போகும்போது வழி கேட்க சிலருக்கு கூச்சம். விளைவு? போக வேண்டிய இடத்திற்கு அருகிலேயே இலக்கில்லாமல் சுற்றிக் கொண்டிருப்பார்கள். பயில்கிற பாடத்தில் சந்தேகம் கேட்பதில் சிலருக்கு கூச்சம். விளைவு-? அரைகுறை அறிவுடன் ஒரு பாடத்தை அவர்கள் கடப்பார்கள். இவ்வளவு ஏன்-? காசு கொடுத்து சாப்பிடுகிறபோதுகூட இரண்டாவது முறை கூட்டுப் பொரியல் கேட்கக் கூச்சம். ...

நீங்கள் புத்தியா? புத்தகமா?

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… குடத்தில் இருக்கிற தண்ணீர்… புத்தகம். அதைக் குடிக்கப் பயன்படும் குவளை-… புத்தி. நீங்கள் புத்தியா? புத்தகமா? வெட்டி எடுத்த தங்கம்-… புத்தகம். அதை தட்டிச் செய்த அணிகலன்… புத்தி. நீங்கள் புத்தியா? புத்தகமா? கட்டிடத்திற்கான அடித்தளம்… புத்தகம். கட்டி முடித்த கட்டிடம்… புத்தி… நீங்கள் புத்தியா? புத்தகமா? படிப்பவர்கள் எல்லாமே ஜெயிப்பவர்கள். உண்மைதான். இதற்குப் பொருளே, படித்த விஷயங்களைத் தகவல்களாக மட்டும் வைத்துக் கொள்ளாமல், செயல்முறைக்குக் கொண்டு வருவதே வெற்றி ...

எது அறிமுகம்? எது நட்பு-?

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… அன்றாட வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மனிதர்களைத் தாண்டி வருகிற சூழலில் நாம் எல்லோரும் இருக்கிறோம். இவர்களில் நமக்கு அறிமுகமாகிற எல்லோருமே நம் நட்புக்கு அவர்களோ, அவர்கள் நட்புக்கு நாமோ உகந்தவர்கள் அல்ல. இந்த உண்மையைப் பலரும் உணர்வதே இல்லை. அதன் காரணமாகவே உறவுகளின் அடிப்படையில் விரிசல் விழுகிறது. உங்களுக்கு அறிமுகம் ஆகிறவரை நண்பராக -ஆக்கிக் கொள்வது அவசியம்தானா என்று முதலில் தீர்மானியுங்கள். உங்கள் வாழ்க்கைமுறை போக்குகள், இவற்றை வைத்தே முடிவெடுக்க வேண்டும். ...

உலகம் முழுவதும் ஒரே பயம்

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… “தன்னுடைய இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளுதல்” உலகம் முழுவதும் உள்ள ஒரே பயம் இதுதான். பள்ளிக்கூடங்களிலிருந்து பாராளுமன்றம் வரை, வீடுகளிலிருந்து வைட்ஹவுஸ் வரை இந்த பயமே பரவிக் கிடக்கிற-து. ஆனால், இது அழிக்க வேண்டிய பயமல்ல. ஆக்கபூர்வமான பயம். நம்மைத் தொடர்ந்து இயக்கும் சக்தி இது. எட்டிய உயரத்தை எப்படியெல்லாம் தக்க வைத்துக் கொள்ளலாம் என்கிற தவிப்பில்தான் அவரவரும் புதிதாய் முயன்று கொண்டிருக்கிறார்கள். “அஞ்சுவது அஞ்சாமை பேதைமை” என்று திருவள்ளுவர் ...

உங்கள் குறட்டையே உங்களை எழுப்பட்டும்.

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… குறட்டைவிடும் பழக்கம் உள்ளவர்களில் அவர், திடீரென்று திடுக்கிட்டு வழிப்பார்கள். வேறொன்றுமில்லை. அவர்களின் குறட்டையே அவர்களை எழுப்பியிருக்கும். அதன்பின் மறுபடி அயர்ந்து தூங்குவார்கள், மறுபடியும் குறட்டை எழுப்பும். ஒரு கட்டத்திற்குப் பிறகு உட்கார்ந்து யோசிப்பார்கள். எப்போதுமே, நமக்கு, நம்முடைய தவறுகள், அடுத்தவர்களைத் தொந்தரவு செய்யும்போது தெரிவதில்லை. நமக்கே தொந்தரவாய் இருக்கும்போதுதான் தீர்வு குறித்து யோசிப்போம். குறட்டை மட்டுமல்ல, அசட்டையாய் இருந்து வாழ்வில் பல நல்ல தருணங்களைக் கோட்டை விடுவது கூட அப்படித்தான். ...

மிரள்பவர்களே மிரட்டப்படுவார்கள்

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… “துரத்திய -குரங்குகளை எதிர்த்து நின்றேன். அவை தொலைதூரம் ஓடின” என்றார் விவேகானந்தர். குரங்குகள் மட்டுமல்ல. குரங்குக் குணங்களும் கூட மிரள்பவர்களைத்தான் மிரட்டுகின்றன. தடை, சவால், எதிர்ப்பு போன்ற எல்லா சூழல்களும் மிரள்பவர்களை மிதிக்கவே செய்கிறது. எவ்வளவுதான் சவாலான சூழல் அமைந்தாலும் அதனை திடமாக எதிர்கொள்ளும் தீர்மானமே அந்த சூழலிலிருந்து மீட்டெடுக்கிறது. நீங்கள் உங்கள் வாழ்க்கையை ஒரு நதியுடன் ஒப்பிடுங்கள். நதியில் வரும் சூழல் போன்றது வாழ்வில் வருகிறசூழல். அந்த சூழலிலிருந்து ...
More...More...More...More...