ஓய்வை இழப்பவர்கள் உலகை இழப்பார்கள்!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஓய்வு என்றால் உறங்குவது மட்டுமல்ல புலன்கள் இளைப்பாறி புத்துணர்வு கொள்வது. ஊருக்கு வெளியே இயற்கையின் மடியிலோ பரந்து விரிந்த புல்வெளியிலோ கொஞ்ச நேரம் நல்ல இசை கேட்பதோ கூட ஓய்வுதான். வாழ்க்கை பல நேரங்களில் பரபரப்பான ஓட்டத்தை மேற்கொள்ளச் செய்து உங்களை உந்தித்தள்ளுகிறது. அப்போதே நீங்கள் காட்டுகிற நிதானம் உங்களுக்கு நிறைந்த புத்துணர்வை பரிசாகத் தருகிறது. நீங்கள் சக்தியை சேமிக்கும் விதமாய் எதை விரும்பிச் செய்தாலும் ஓய்வுதான். புத்தகம் படிப்பது ...
தபால்போட்டு வருவதல்ல தூக்கம்
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… உடம்புக்குள் ஓடுகிற கடிகாரத்தின் ஓட்டத்தை சரிபார்க்க, சரியான வழி, தூக்கம். மாத்திரை போட்டு, தபால் போட்டு, தூக்கத்தை வரவழைத்தால் உடம்பு நம் வசம் இல்லை என்று பொருள். சரியான உணவு, சீரான உடற்பயிற்சி ஆகியவற்றுடன் பதட்டமில்லாத, பக்குவமான வாழ்க்கை வேண்டிய அளவு தூக்கத்தை பெற்றுத்தரும். சில நிமிட மதியம் உறக்கம். மகத்தான சுறுசுறுப்பை பெற்றுத் தரும் என்கிறார்கள். உண்மைதான். இரவு குறைந்தது ஏழு மணி நேரத் தூக்கமேனும் இருப்பது ஆரோக்கியத்தின் ...
உடம்பே எஜமானன்! உடம்பே அடிமை!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஒரு வயதில் உடம்பு உங்களுக்கு எஜமானன். இன்னொரு வயதில் அதுவே உங்களுக்கு அடிமை. இளமையின் விளிம்பில் இருக்கும் வரை எஜமானராய் உடம்பு இருந்தால் உங்கள் பிடி நழுவுவதாக அர்த்தம். இளமையிலேயே உடம்பை உங்கள் பிடிக்குக் கொண்டு வந்துவிட்டால் நீங்கள் போடும் ஆணைக்கு உடம்பு கட்டுப்படும். இளமையிலேயே யோகப் பயிற்சி உடற்பயிற்சி தியானப் பயிற்சி உணவுக் கட்டுப்பாடு, வேண்டாத பழக்கங்களிலிருந்து விலகி நிற்பது என்பன போன்றகுணங்கள் உங்களை எப்போதும் எஜமானனாகவே வைத்திருக்கும். ...
எத்தனை பழங்கள் திருடினீர்கள்?
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… இருக்க இருக்க இறுக்கம் கூடுவதுதான் வாழ்க்கை என்பது சிலருடைய விசித்திரமான கணக்கு. தங்கள் குழந்தைப் பருவத்தில் விடலை வயதில் நடந்த விஷயங்களைக் கூட விகல்ப்பமில்லாமல் பகிர்ந்து கொள்ளத் தயங்குவார்கள். பள்ளிக்கு புத்தனாகவே போய் கல்லூரியில் காந்தியாகவே வாழ்ந்தது போல் காட்ட நினைப்பதுண்டு. ஆனால், சின்ன வயதுக்கு குறும்புகளையும் சேட்டைகளையும் இதயத்தில் வைத்திருப்பவர்களே இளமையாய் இருப்பார்கள். அறியாத வயதின் அசகாயக் குறும்புகளுக்கு பெற்ற தண்டனைகள் கூட முன்னே கசக்கும், பின்னே இனிக்கும். ...
நம்மை உண்ணவா உணவு?
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… சுவைக்காக உண்ணுவது ஒரு வயது, சுவைக்காத உணவையும் அதன் தன்மைக்காக உண்ணத் தொடங்க வேண்டியது நடுத்தர வயது. தொடக்கத்தில் சிரமமாய் இருந்தாலும் உண்ண உண்ண அதன் அசல் சுவை பிடிபடும். ஒவ்வொருவர் உடல் நிலைக்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்றவாறு உணவு முறைகளில் மாறுதல் செய்வது அவசியம். பச்சைக் காய்கறிகள், நார்சத்துக்கான உணவு, ஒரு மணிநேர இடைவெளியில் தண்ணீர் என்று சில நல்ல பழக்கங்களைப் பழகிக் கொள்வது மிகவும் அவசியம். உணவு ...
தானடங்காதவர்களின் தன்னடக்கம்… தாங்க முடியலைடா சாமி!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஆணவத்துடன் இருப்பவர்களைக் கூட ஒருவகையில் சகித்துக் கொள்ள முடியும். அடக்கத்துடன் இருப்பதைப்போல பாவனை புரிபவர்களின் போலித்தனம் பொறுக்கவே முடியாது. “பெருக்கத்து வேண்டும் பணிவு” என்றார் திருவள்ளுவர். ஒரு மனிதனிடம் எதுவுமே இல்லையென்றாலும் உண்மையான பணிவு இருந்தால் எல்லாமே வந்துவிடும். அதே நேரம் ஒருவர் பணிவு காட்டுவதில் போலித்தனம் காட்டினால் அவர் எவ்விதத்திலும் நம்பகமானவர் அல்ல. “இவ்வளவு பெரிய மனிதர் பணிவாக இருக்கிறாரே” என்று பெயர் வாங்க சிலர் அடக்கமாய் இருப்பது ...