எங்கள் எஜமானர் ஜாக்கிரதை -ஜிம்மி, -டைகர்
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதன் நோக்கமே, அவற்றின் நிபந்தனையில்லாத நேசத்தை, நல்ல உணர்வுகளை, நம்பிக்கையை நன்றியை, நாம் கற்க வேண்டும் என்பதற்காகத்தான். உயிர்களிடையே பேதம் பார்க்காத பரந்த மனம் வளர்வது, செடிகள் வளர்ப்பதில் தொடங்கி, மீன்கள் வளர்ப்பது, செல்லப் பிராணிகள் வளர்ப்பது என்று படிப்படியாக நீளும். மேலும் பரிவும் கனிவும் நிரம்பிய உள்ளம் உருவாக வழி மற்றஉயிர்களுடன் தொடர்பு படுத்திக் கொள்வதுதான். ஆனால் எவ்வளவு செல்ல பிராணிகள் சுற்றி இருந்தாலும் தங்கள் ...
பையில் உள்ள கைவிலங்கு
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… செல்லிடப்பேசியின் அழைப்பொலி சில நேரங்களில் சங்கீதம். பல நேரங்களில் சங்கடம். இன்று தொழிலில், வணிகத்தில் பலரின் எழுச்சிக்கு மட்டுமல்ல, சரிவுகளுக்கும் செல்லிடப்பேசிகளே காரணம். கையில் இருக்கும் இந்தக் கைவிலங்கு உங்களை பலநேரம் கட்டிப்போடுகிறது. தொழில்முறைசந்திப்புகளில் இருந்து, பொதுக் கூட்டங்களில் அமர்ந்திருப்பது வரை பலரும் இடையே குறுக்கிடும் செல்லிடப்பேசியின் அழைப்பொலியால் எதிரே இருப்பவர்களின் எரிச்சலுக்கு ஆளாகி பல தொழில் வாய்ப்புகளைத் தொலைத்திருக்கிறார்கள். தகவல் பரிமாற்றங்களுக்கான செல்லிடப் பேசிகள், தொடர் அரட்டைகளை குரல் ...
உயிருள்ள அலுவலகமா உங்களுடையது?
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… கால்துகள் பட்டு கல்லை உயிர்ப்பித்தான் ராமன். பார்க்கும் கண்களில் பரிவிருந்தால், உயிரற்றபொருட்களிலும் உயிர்வரும். உங்கள் அலுவலகம் உயிரோட்டமாய் இருக்கிறதா என்று அடிக்கடி அளந்து பாருங்கள். ஆக்கபூர்வமான அதிர்வுகள் நிரம்பிட, மெல்லிய இசையால், நிறைய வெற்றிடங்களால் நறுமணப் புகையால், புதுப்பித்துக் கொண்டே இருங்கள். அலுவலகத்தில் நல்ல அதிர்வுகளை ஏற்படுத்த வழி, சோர்வில்லாமல் இருப்பது, ஒவ்வொருவரும் சோர்வின்றி பணிபுரியும் சூழ்நிலையைக் கொடுப்பது. அலுவலகத்தில் இருக்கும் குப்பைத் தொட்டியைச் சுற்றி குப்பைகள் இருந்தால், உயிரோட்டமும் ...
பூக்கள் சிரிக்கின்றன… வெட்கமாயில்லை?
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… சில மணி நேரங்களே வாழும் பூக்களுக்கு சிரிக்க மட்டுமே தெரியும். சில நொடிகளே வாழும் தீக்குச்சிக்கு எரிக்க மட்டுமே தெரியும். நீங்கள் சிரிப்பவரா? எரிப்பவரா? உள்ளத்தின் விகசிப்பு உன்னத மலர்ச்சியாய் மனதிலும் முகத்திலும் பூத்துக் குலுங்கும் போது, வருகிறவர்களும் போகிறவர்களும் உங்களால் வசீகரிக்கப்படுகிறார்கள். எந்தப் பாதுகாப்பும் இல்லாத பூக்கள் சிரிக்கக் காரணமே இல்லை. ஆனால் அவை சிரிப்பதையன்றி வேறெதும் செய்வதில்லை. சோர்வடைய எந்தக் காரணமும் இல்லாத மனித ஜாதியில், பலருக்கும் ...
குஷியாய் உலவும் குப்பைத் தொட்டிகள்
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… அரட்டை என்னும் ஆபத்தான பழக்கத்தை ஆசை ஆசையாய் பழகிக்கொண்டு அதனை ஆரவாரமாய் நிகழ்த்தியும் காட்டும் வேடிக்கை மனிதர்கள் உலகம் முழுவதிலும் உண்டு. இவர்களுக்கு சுயமாய் சாதிக்க சக்தியில்லை. சாதித்தவர்களை மதிக்கும் புத்தியில்லை. இத்தகைய மனிதர்கள் அனாவசியமான குப்பைகளை வாங்கி வைத்துக் கொள்ளும் குப்பைத் தொட்டிகள். சாலையோரத்தில் உள்ள குப்பைத் தொட்டிகளை சுத்தம் செய்ய முடியும். இந்த கால்முளைத்த குப்பைத் தொட்டிகள் பழைய குப்பைகளையும் அகற்றுவதில்லை. புதிய குப்பைகளை விடுவதுமில்லை. அடுத்தவர் ...
பேச விஷயமில்லையா? பேசாதீர்கள்!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஒருவரைப் பார்த்து நலம் விசாரிப்பதும் வணக்கம் சொல்வதும் அடிப்படைப் பண்பாடு. அவர் நன்கு அறிமுகமானவர் என்றால் கூடுதலாய் சில வினவுதல்கள், பகிர்தல்கள், பரிமாற்றங்களுக்கு வாய்ப்பிருக்கும். ஆனால், அதிகம் அறிமுகம் ஆகாதவரை நட்பு வளையத்துக்குள் கொண்டு வருகிற முயற்சியில் அர்த்தமில்லாத, அவசியமில்லாத, உரையாடல்களில் ஈடுபடுவது பலநேரம் சங்கடங்களையே விளைவிக்கும். அருமையான மனிதர் என்று பேரெடுக்கிறீர்களா, அறுவையான மனிதர் என்று பேரெடுக்கிறீர்களா என்பது உங்கள் உரையாடல்களில் அர்த்தம் இருப்பதைப் பொறுத்தே அமையும். பேச்சு ...