Blog

/Blog

உத்தியோகம் இருப்பவர்கள் உருப்படலாம்

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… எல்லோருக்குத்தான் உத்தியோகம் இருக்கிறது. ஆனால், உத்தியோகத்தில் கூட “உத்தி”யோகம் இருப்பவர்கள் உருப்படலாம். உள்ளே தோன்றும் உத்திகள் உயர்ந்ததாய் இருக்க, புத்தியில் எப்போதும் புத்துணர்வு வேண்டும். அதுவொன்றும் பிரம்ம சூத்திரம் இல்லை. உள்ளே இருக்கும் உற்சாகத்தில்தான் எல்லாம் இருக்கிறது. ஒரு விஷயம் குறித்து எல்லோரும் குழம்பி நிற்கும்போது அத்தனை பேர் பார்க்கும் கோணங்களில் இருந்து தள்ளி நின்று பார்த்து, தகுந்ததைச் செய்தால், உங்கள் சாமத்தியம் அங்கே வெளிப்படுகிறது. எதையும் புதுமையாய் செய்ய ...

மேசையில் சிந்திய தேநீரால்… மேதைகளுக்கே இழப்பு

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… சில நேரங்களில், மின்னல் சொடுக்கியதுபோல் ஏற்படும் எண்ணம், உள்ளே வளர்ந்து கொண்டிருக்கும் போது, வெளியே எதையாவது செய்வோம். அந்த வெளிச்செயலை யாராவது தடுத்தால், உள்ளே நிகழும் அபார வளர்ச்சியும் அறியப்படாமல் போய்விட சாத்தியம் இருக்கிறது. ஒரு மேதை, தேநீர்ச் சாலை ஒன்றில் அமர்ந்திருந்தார். சிந்திய தேநீரை சும்மா விரலால் தொட்டு கோலம் வரைந்து கொண்டிருந்தார். உள்ளே வேறேதோ சிந்தனைக் கோலம் உருவாகிக் கொண்டிருந்தது. அவருக்குள் உருவாகிக் கொண்டிருந்த ஓர் அற்புதத்தை ...

சொந்தமாய் சில சொர்க்கங்கள்

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… திரிசங்குவுக்கென்று ஒரு சொர்க்கத்தைப் படைக்க விசுவாமித்திரர் விரும்பியதாய் புராணம் சொல்கிறது. யோசித்துப் பார்த்தால், நமக்கென்று சொந்தமாய் சில சொர்க்கங்கள் அமைவது அவசியம். எது சொர்க்கம்? எங்கே நாம் சொந்தமாய், நிம்மதியாய் உணர்கிறோமோ அதுவே சொர்க்கம். அடுத்தவர்கள் பார்த்து வியப்பதற்கல்ல, நம் சொர்க்கம். அனுபவித்து அறியத்தான் சொர்க்கம். நாம் எதைச் செய்தாலும் அதை யாராவது கவனிக்கிறார்களா என்று பார்க்கும் மனோபாவம்தான் திரிசங்குவின் அவஸ்தைக்குக் காரணம். தான் இருக்குமிடம் சொர்க்கம் என்று அவனே ...

விதைத்ததெல்லாம் விளைந்துவிட்டால்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… விதைத்தவை எல்லாமே விளைந்து விட்டால் வயல்களில்கூட இட நெருக்கடி ஏற்படும். நாம் சில முயற்சிகளை விதைக்கும்போது எப்போதோ ஏற்படுகிற தோல்விகள், ‘இது ஏன் நிகழ்ந்தது’ என்கிற கேள்வியை எழுப்பும். காரணங்களை உள்ளம் கண்டறியும். களையெடுக்க வேண்டிய தவறுகளைத் துல்லியமாய் கண்டுபிடிக்கும். விதைத்ததெல்லாம் விளைந்து விட்டால் இந்த விசாரணை இருக்காது. தவறுகளைத் திருத்திக்கொள்கிற தூண்டுதல் பிறக்காது. மாற்று யோசனைகளால் மனித குலம் பல தடைகளைத் தாண்டி வந்தது சின்னச் சின்ன தோல்விகளால் ...

ஞானசூனியம் நல்ல வார்த்தைதான்!

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… யராவது ஞானசூனியம் என்று திட்டினால் வருத்தப்படத் தேவையில்லை. சூனியத்தில் இருந்துதான் இந்தப் பிரபஞ்சமே பிறந்தது என்று ஞானிகள் சொல்கிறார்கள். வெறுமையிலிருந்து வெளிப்படும் எதுவும் முழுமையாய் இருக்கிறது. கட்டியில்லாத கருப்பையில்தானே குட்டிப் பிள்ளை பிறக்கிறது. வீடு காலியாய் இருக்கிறதா என்று விசாரித்து குடியேறுவது போல் திறந்த மனதில்தான் சிறந்த சிந்தனைகள் தேடிவந்து தோன்றுகின்றன. நேற்றின் சுமைகள் இல்லாமல், நாளையின் எதிர்பார்ப்புகள் சூழாமல், நிகழ் காலத்தின், நிகழும் நொடியின் சூனியத்தில் இருப்பதே படைப்பின் ...

கல்லில் செதுக்கிய அலை

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… “இப்போது இவருடைய அலை வீசுகிறது” என்று யாரைப் பற்றியாவது சொல்லக் கேட்கிறோம். கொஞ்ச நாட்களில் அதே துறையில் வேறொருவர் எழுதுகிறார். முன்னவர் விழுகிறார். இப்போது இரண்டாவதாக எழுந்தவரின் “அலை” என்று சொல்கிறார்கள். உள்ளபடியே மனிதர்கள் எழுவதும் விழுவதும் அலைபோல்தான் இருக்கிறது. மிகச்சிலரின் பங்களிப்பு மட்டும் அவர்கள் துறையில் மற்றவர்களால் வெல்லமுடியாத வண்ணம் நிலையானதாக நிற்கிறது. திருவள்ளுவர், புத்தர் போன்றவர்கள் தங்களைப் பற்றிய பிறரின் அபிப்பிராயம் பற்றி அச்சமின்றி எண்ணியதைச் சொல்கிறார்கள். ...
More...More...More...More...