Blog

/Blog

அபிராமி அந்தாதி – 12

எங்கே அவளின் திருவடிகள் சின்னஞ்சிறிய சம்பவம் ஆயினும், பொன்னம் பெரிய அற்புதம் ஆயினும், அது யாருக்கு என்ன அனுபவத்தை தருகிறதோ அதன் அடிப்படையில்தான் அது வகைப்படுத்தப்படும். அந்த அனுபவம் வெறும் உணர்ச்சியின் எல்லையில் நின்றால் போதாது. அறிவும் அதனை அங்கீகரிக்க வேண்டும். ஓர் இனிப்பை சாப்பிடுகையில் ஏற்படும் மகிழ்ச்சி, நிலையானதா? இல்லை. நீரிழிவு நோய் வர வாய்ப்புண்டு என்ற எச்சரிக்கையை அறிவு பிறப்பிக்கிறது. ஒன்றை உயர்ந்த அனுபவமென உணர்வும் அறிவும் ஒருங்கே ஒப்புக் கொள்கிறபோதுதான் அதன் நம்பகத்தன்மை ...

அபிராமி அந்தாதி – 11

ஒருவர் செய்து கொண்டிருக்கிற செயலுக்கும், அவர் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் நினைவுக்கும் சம்பந்தமிருக்க வேண்டும் என்றில்லை. பழக்கப்பட்ட பாதையில் வண்டிமாடு பயணம் செய்யும் போது வண்டிக்காரர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார். தான் பயணம் செய்கிறோம் என்றுகூட அவருக்குத் தெரியாது. ஆனால் அவர் வண்டியை ஓட்டிக் கொண்டிருப்பதாகத் தான் எல்லோரும் சொல்வார்கள். அதே போல சதாசர்வ காலமும் அம்பிகையின் திருவுருவை தியானம் செய்யும் ஒரே வேலையைத்தான் செய்கிறார் அபிராமிபட்டர். அவருடைய உடம்பு தான் நிற்கிறது, படுக்கிறது, அமர்கிறது, நடக்கிறது. ...

அபிராமி அந்தாதி – 10

    https://www.youtube.com/watch?v=ys7U27Xn_EA   அந்தாதியில்  அம்பிகையின் திருமுலைகள் பற்றிய குறிப்புகள் ஏராளமான  இடங்களில் தென்படுகின்றன. அவை பிரபஞ்சத்  தாய்மையின் பெருஞ் சின்னங்கள். பரஞானம் அபரஞானம் ஆகியவற்றின் அடையாளங்கள். அம்பிகையின் அளப்பரிய கருணைப் பெருக்கத்தின் குறியீடுகள். அதன் பேரருட்தன்மையைத் தாங்கும் திறன் யாருக்கும் இல்லாததால் அவள் உண்ணாமுலையம்மை என்று குறிக்கப்படுகிறாள்.   அன்னையின் திருமுலைப்பாலை அவளே குழைத்து ஊட்டி ஞானக் குழந்தைகளை உய்விக்கிறாள். அன்னையின் திருமுலைகள் கருத்திருக்கின்றன. சிவபெருமானின் திருவிழிகள் ஒத்திருக்கின்றன. இங்கொரு கேள்வி எழலாம். சிவபெருமானுக்கு ...

அபிராமி அந்தாதி – 9

வாழ்க்கை என்பதே வினைநீக்கும் ஏற்பாடுதான். அது எவ்விதம் நிகழ்கிறது என்பதில்தான் எல்லாம் நிகழ்கிறது. தன்னுடைய உயிரின் வினைகள் நீங்கப்பெற வேண்டும் என்னும் விருப்புணர்வோ இல்லாமலும்கூட எத்தனையோ பிறவிகளாய் பாசமாம் பற்றை வளர்த்து வருகிறோம். செவ்வண்ணப் பேரழகியாம் அபிராமி எவ்வண்ணம் அந்த வினைகளை அகற்றுகிறாள் என்பதை சுவைபடச் சொல்கிறார் அபிராமிபட்டர். அவளைப் பேரழகி என்ற கையோடு “எந்தை துணைவி” என்றும் அழுத்தம் தருகிறார். சிவபெருமான் பேரழகனாகவும் இருக்கிறான். அகோர மூர்த்தியாகவும் இருக்கிறான். அவருக்கேற்ற பேரழகி என்றும் சொல்லலாம். அவரைவிட ...

அபிராமி அந்தாதி – 8

கடையும் மத்தும் கடையூர்க்காரியும் பால் போன்றதுதான் உயிர். அதில் விழும் வினைத்துளிகளில் உயிர் உறைந்து போகிறபோது வந்து கடைகிறது மரணத்தின் மத்து. மரணம் மட்டுமல்ல, மரணத்துக்கு நிகரான எந்த வேதனையும் உயிரை மத்துப்போல்தான் கடையும். சீதையைப் பிரிந்து இராமன் உற்ற துயரை அனுமன் சீதைக்குச் சொல்லும்போது, “மத்துறு தயிரென வந்து சென்றிடைத் தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுற பித்து நின் பிரிவினிற் பிறந்த வேதனை” என்கிறான். குளிர்ந்த தயிரை மத்தால் கடைந்தால் துனி பறக்கும். ஆனால் உயிராகிய ...

அபிராமி அந்தாதி – 7

ஓர் உணர்வு நமக்குள் பிரத்யட்சமாக உருவாகிவிட்டால் அதையே திரும்பத் திரும்பச் சொல்வதுதான் நம் இயல்பு. காய்ச்சல் கண்டவர்கூட, ‘குளிருதே! குளிருதே!’ என்றே ஓயாமல் சொல்லிக் கொண்டிருப்பார். தன்னுடைய சிரசின் மேல் அம்பிகையின் பாதங்கள் பதிந்த அனுபவம் அபிராமிபட்டரின் உச்ச அனுபவம். அதையே மகிழ்ந்து மகிழ்ந்து சொல்கிறார். தன் சிரசின் மீது அம்பிகையின் மலரனைய திருவடிகள் பதிந்திருப்பதையும் அது பொன்போல் ஒளிர்வதையும் சதாசர்வ காலம் மனக்கண்ணால் காணும் பேறு பெற்றவரல்லவா அவர். “சென்னியது உன்பொன் திருவடித்தாமரை” என்கிறார். திருவடி ...
More...More...More...More...