சாமர்த்தியம் செயலாகாது!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… எழுதிப் போட்டு வாங்குகிற பதிலுக்கும் எதிரே நின்று கேள்வி கேட்டு வாங்குகிற பதிலுக்கும் என்ன வித்தியாசம்? கேட்ட மறுநொடியே கிடைக்கும் பதிலில் உண்மை இருக்கும். முதல் வகை பதிலில் சாமர்த்தியம் இருக்கும். இதுதான் வித்தியாசம். குறிப்பாக சேவைத்துறையில் இருப்பவர்களிடம் புகார் செய்யும் வாடிக்கையாளர்கள், செயலைத்தான் எதிர்பார்க்கிறார்களே தவிர, சாமர்த்தியத்தை அல்ல. சமத்காரமாக வாதம் செய்து சாமர்த்தியமாகப் பூசி மெழுகுபவர்கள் வாதத்தில் வெல்லலாம். வாடிக்கையாளர்கள் நம்பிக்கையை வெல்ல முடியாது. ஒரு சூழலை ...
கையடக்கமாய் சில கனவுகள்
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஒரு மனிதனின் சட்டைப்பைக்குள் கையடக்கமாய் இருக்கும் குறிப்புகள் அவனுடைய அன்றாட வேலைகளின் நினைவூட்டல் பட்டியலாக இருக்கும். அந்தப் பட்டியலுடன் துணையாய் இருக்க வேண்டியது, குறுகிய காலத்தில் எட்ட வேண்டிய கனவுகளின் பட்டியல். நம் வாழ்வின் நோக்கம் பற்றிய வழி காட்டுதல், உள்மனதுக்கு எப்போதும் வேண்டும். அந்த வழிகாட்டுதலுக்கு வழிதான், கையடக்கமாய் சில கனவுகள். முதன் முதலாக நீச்சல் பழகுபவர்கள் அதிகம் ஆழமில்லாத இடத்தில் பயிற்றுவிப்பது மாதிரி, கையடக்கமான கனவுகளை நம்பிக்கையுடன் ...
தெய்வம் நடத்தும் தெருக்கூத்து
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… வெளிப்படையாய் நடக்கிற ஒன்றை சற்றே அலட்சியமாய் பார்த்தாலும் அடி வயிற்றில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கக் கூடியது, தெருக்கூத்து. தான் அதிர்ந்து போனதை வெளிக்காட்டாமல் பலர் அவசரம் அவசரமாய் அங்கிருந்து நகர்வார்கள். சிலர் ரகசியமாய் ரசிப்பார்கள். சிலரோ வெளியில் வந்து வேடிக்கை பார்ப்பார்கள். வாழ்வில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் பல, நாம் எதிர்கொள்ள விரும்பாதவையாய் இருக்கும். ஆனாலும்கூட அவை நிகழ்ந்தே தீரும். வாழ்க்கையில் நம் முன்னே மிக எளிய மனிதர்களாகத் தோற்றமளிக்கிற ...
புன்னகை என்றோர் ஆயுதம்
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… தட்பவெட்பம் உங்களுக்குச் சாதகமாக இல்லாத போது… உங்களின் விருப்பமான காபி சூடாக இல்லாத போது… உங்களின் திட்டமிடல் லேசாக குழம்பும் போது புன்னகைப்பது கடினம்தான்… இதுபோன்ற ஒவ்வாத தருணங்களை புன்னகைகளால் மட்டும் மாற்றமுடியாது. ஆனால் இவை சூழ்நிலையை இன்னும் மோசமாக்குவதில்லை. புன்னகைகள் நம்முடைய உற்றதுணையாகிறது. வறண்ட நம் தருணங்களின் மேல் நீர் பாய்ச்சுகிறது. பிரச்சினைகள் முடிவுக்கு வரும்போது நாம் அழைக்காமலேயே வந்து ஒட்டிக்கொள்கிறது. நாம் அனுமதிப்பதற்குள்ளாகவே அனைவருக்கும் நம் புன்னகையைப் ...
ஆறிப்போனால் ஆபத்து
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… கஞ்சிமட்டுமல்ல. கனவுகள் கூட ஆறிப்போனால் பழயவைதான். பசித்த வயிறு பழங்கஞ்சியை உண்ணவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவிக்கும். அதே போல்தான் ஆறிப் போன கனவுகளை கைப்பற்றவும் முடியாமல் கைவிடவும் இயலாமல் இதயங்கள் பதறும். பழைய கனவுகள், எட்டப்படாத இலட்சியங்கள் நம் சாதனைத் தினவுக்கு சவால் விட்டுக்கொண்டே இருக்கும். அன்றாடக் கடமைகள், அடுப்புக்கு விறகு சேகரிக்கும் அவசரத் தேவைகள் என்று பலவற்றுக்கும் மத்தியில் கனவுகளை ஆறிவிடுபவர்கள் காலம் போனபிறகு கண்ணாடி பார்த்து ...
உயிருடன் இருக்கட்டும் உங்கள் மிருகம்
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… விலங்கின் உந்துதல் (Animal Instinct) என்பது எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கிற அம்சம். இது முழுக்க நல்லதுமல்ல. முழுக்க கெட்டது மல்ல. சிலர் விலங்கின் உந்துதல் குணத்துக்கு முக்கியத்துவம் தந்து தங்கள் நலனை மட்டுமே பாதுகாத்துக்கொள்ள -முயல்வார்கள். சிலரிடம் விலங்கு குணத்தாக்கம் குறையும். அவர்கள் பிறர் நலனுக்காக தங்கள் நலனை விட்டுத்தரும்படி வளர்ந்திருப்பார்கள். இன்னும் சிலர் விலங்கு குணத்தை முற்றாகக் கடந்துவந்து தெளிந்த நிலையை எட்டியிருப்பார்கள். சராசரி வாழ்வில், சாதிக்கும் விருப்பத்தில் ...