மனிதர்கள் புரிந்தால் வாழ்க்கை புரியும்
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… வாழ்க்கை என்று ஒன்று தனியாக இல்லை. அது சம்பவங்களால் ஆனது. சம்பவங்கள் என்பவையோ மனிதர்களால் வருவது. எனவே இந்த வாழ்க்கை புரிய வேண்டுமென்றால் அதற்கு மனிதர்களைப் புரிந்துகொள்ள வேண்டும். மனிதர்கள் பல விதம் என்பதைப் புரிந்து கொள்வதே முதல் சூத்திரம். உங்கள் எதிர்ப்பார்ப்பு என்ற எல்லைக்குள் வரவே வராதபோதும், அந்த எல்லைக்குள் கட்டுப்படாதபோதும் நீங்கள் ரசிக்காத சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆனால் அந்தந்த மனிதர்களை அவரவர் நிலைகளில் வைத்தே புரிந்து கொள்கிறபோது, ...
உங்களுடையது அபிப்பிராயம்தான்! உச்சநீதி மன்றத் தீர்ப்பல்ல!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… எல்லோருக்கும் தங்கள் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க உரிமையிருக்கிறது. ஆனால் அபிப்பிராயங்களை மற்றவர்கள் மேல் திணிக்கிறபோது பிரச்சனைகள் உருவாகின்றன. நாம் சொல்வது அபிப்பிராயம்தானே தவிர, அதனை அத்தனை பேரும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென எந்தச் சட்டமும் கிடையாது. தங்கள் கருத்துக்கு எதிர்க்கருத்து வந்து விட்டால் தாங்கிக் கொள்ளவே முடியாதவர்களால் ஒருவரது விவாதத்தில் பங்கெடுக்க முடியாது. தாங்கள் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும் விமர்சனத்திற்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட வேதமொழிகள் என்னும் எண்ணம் வேண்டாத பகையை வளர்க்கும். ...
குரலிசையா? விரலிசையா?
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… பாடகர்களுக்கு பின்னணிப் பாடகர் என்றும் இசைக்கு பின்னணி இசை என்றும் சொல்கிறார்கள். அந்தப் பாடகர் புகழ் நிலையில் முன்னணியில் இருந்தால்கூட அவர் பின்னணிப் பாடகர்தான்!! ஒரு காரியம் நடக்கும்போது நாம் முன்னணியில் இருந்து செயல்படுகிறோமோ பின்னணியில் இருந்து செயல்படுகிறோமா என்பது முக்கியமல்ல. செய்கிற வேலையை சரியாய் செய்தால் நீங்கள் திரை மறைவில் செய்யப்பட்டாலும் உங்கள் வேலையே உங்களை முன்னணிக்குக் கொண்டு வரும்; முன்னேற்றம் தரும். எம்.ஜி.ஆர் பாட்டு, சிவாஜி பாட்டு ...
போர்க்களத்தில் பூப்பறிக்கப் போய்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… என்னுடைய பந்தயம் எவரோடும் இல்லை. சமாதானம் வாங்கத்தான் மைதானம் வருகிறேன். மோதுகளங்களில் மலர்ச்செடி நடுகிறேன்….” என்னுடைய கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை. பகையை சம்பாதிக்க எல்லா வாய்ப்புகளும் உள்ள இடத்தில் நட்பை உருவாக்கிக் கொள்வதுதான் தனித்தன்மை. ஒரே துறையில் இயங்குகிற இரண்டு பேர்கள் பகையாளர்களோ போட்டியாளர்களோ அல்ல, சக பயணிகள் என்பதைத் தெரிந்து கொண்டாலே இந்த மனமாற்றம் சாத்தியமாகிவிடும். போர்க்களங்கள் மோதுவதற்கான இடங்கள் மட்டுமல்ல. அவை புதிய ...
உறவும் பகையும் உங்கள் விருப்பம்
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… பகையை உறவாக்குவது பற்றிப் பேசுகிறபோதே உறவைப் பகையாக்கிக் கொள்ள எளிதான வாய்ப்புகள் இருப்பதையும் பார்க்க வேண்டும். வாழ்வின் மிகச் கசப்பான தருணங்கள், நமக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள் மூலமாகத்தான் உருவாயின என்பது, நாம் உணர்ந்து பார்த்த உண்மை. அறிமுகமாகும் எந்தத் தொடர்பையும் உறவாக வளர்ப்பதும் பகையாக நினைப்பதும் நம் விருப்பத்தில் மட்டுமல்ல. விழிப்புணர்விலும் இருக்கிறது. விழிப்புணர்வோடு பேசப்படுகிற வார்த்தைகளும் செய்யப்படுகிற செயல்களும் உறவுகளை சேதாரமில்லாமல் காப்பாற்றி விடுகின்றன. அதே நேரம், ...
உங்களைப் பற்றிய மொட்டைக் கடுதாசி
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… உங்களைப் பற்றிய மொட்டைக் கடுதாசியை முதலில் எழுத வேண்டியவர் யார் தெரியுமா? நீங்கள் தான்!! உங்களை நீங்களே எல்லாக் கோணங்களிலும் விமர்சனம் செய்துகொண்டால், மற்றவர்களின் விமர்சனங்கள் உங்களைப் பாதிக்காது. நம்மிடம் குறையே இல்லை என்று கண்மூடித்தனமாக நம்புகிறவர்களைதான் விமர்சனங்கள் பாதிக்கும். உங்கள் குறைகள் உங்களுக்குத் தெரிந்தால், அதில் இரண்டு நன்மைகள் இருக்கின்றன. முதல் நன்மை, உங்கள் குறைகளைச் சீர்செய்து, அவை வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்வீர்கள். இரண்டாவது நன்மை, வேறு ...