Blog

/Blog

நேற்றின் மிச்சம் நாளைக்கு…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… நீங்கள் ரசித்துச் சாப்பிட்ட உணவை ஒரு நாள் வைத்திருந்தாலும், அது பழைய சோறாகி விடுகிறது. நீங்கள் ரசித்து உருவாக்கிய கனவை நாளைக்காகவே வைத்திருந்தால், அதுவும் பழைய கனவாகி விடுகிறது. உரிய வயதோ கல்வித் தகுதியோ இல்லாத காலத்தில் நோட்டுப்புத்தகத்தில் மயிலிறகு போல கனவுகளையும் நாம் பொத்திப் பொத்தி வைத்துக் கொள்ளலாம். ஆனால், வயதும் தகுதியும் வந்த பிறகு கனவுக்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் நடுவிலான நேரமும் தூரமும் நிச்சயம் குறையவேண்டும். நேற்றைய கனவின் ...

சூடு மாறாத சுவடுகள்

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… நீங்கள் செல்லும் பாதை நீங்களே போட்டதா? பிறர் உருவாக்கியதா? அதாவது முயற்சிகளை உன்னிப்பாய் கவனித்து அவர்கள் பாதையில் போனீர்களா? நீங்களே ஒரு பாதையை உருவாக்கினீர்களா? இரண்டுமே இருவேறு விதங்களில் முக்கியமானவைதான். உங்கள் மேல் யாருடைய தாக்கம் இருக்கிறதோ, யார் உங்கள் ஆதர்சமோ, அவர்களை அவர்களின் காலடிச் சுவடுகள் கலையும் முன்பே பின்பற்றி நீங்களும் வெற்றியை எட்டியிருப்பீர்கள். அதேபோல, நீங்கள் புதிதாக ஒரு பாதை உருவாக்கியிருந்தால், அதுவும் உங்களைப் பின்பற்றிப் வருபவர்களை ...

கும்பிட்ட கைகள் குழிவெட்ட வந்தால்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… எந்த ஒருவரின் வளர்ச்சியோ வெற்றியோ சக மனிதர்களைச் சார்ந்ததில்லை. வாழ்வின் முக்கிய நேரங்களில் துணையிருந்தவர்கள் அல்லது உடனிருந்தவர்கள் உதவியிருந்தாலும் கூட அவர்கள் கருவிதான். ஒரு சம்பவத்தில் விளையும் நன்மை தீமைகளுக்கு நிச்சயமாக நீங்களே பொறுப்பு. நமக்குத் துணை நின்றவர்களிடம் நன்றி காட்டுவது அவசியம். அதற்காக நம் வெற்றிகளையும் நம் வாழ்க்கையையும் அவர்களுக்கு அடகுவைக்க வேண்டிய அவசியமில்லை. ஏதோ ஒரு நேரத்தில் நமக்கு உதவியவர்களோ நம் உதவி பெற்றவர்களோ என்னால்தான் எல்லாம் ...

முதுகில் குத்துபவர்களுக்கு முன்னுரிமை

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஒவ்வொருவர் முதுகும் ஒரு விதத்தில் ஓர் அறிவிப்புப் பலகைதான். உங்கள் முதுகுக்குப் பின்னால் உலகம் எப்படியும் பேசத்தான் போகிறது. அது என்ன பேசும் என்று தீர்மானிக்கும் உரிமை உங்களுக்குத்தான் இருக்கிறது. உங்களை வியந்தும் பேசலாம். விமர்சனமும் செய்யலாம். உங்கள் செயல்கள் உலகில் என்ன விதமான எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன என்று கண்டுணர அற்புதமான அளவுகோல், மற்றவர்கள் உங்கள் முதுகில் குத்தும் முத்திரை. நீங்கள் என்ன விதமான முத்திரையை பெற விரும்புகிறீர்களோ, அதற்குத் ...

ப்ளாஸ்டிக் பூவா நீங்கள்….

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… தொட்டுப்பார்த்தால் மென்மையில்லை. நுகர்ந்து பார்த்தால் வாசமில்லை கலையாத செயற்கை அழகு காலமெல்லாம் இருக்கிறது. இப்படி இருக்கிறபிளாஸ்டிக் பூக்களை பொதுவாக யாரும் பொருட்படுத்துவதில்லை. உண்மையான பூவுக்கு சவால்கள் அதிகம். பனியிலும் மழையிலும் நனைய வேண்டியிருக்கும். வண்டுகளுக்கு வாய்திறக்க வேண்டியிருக்கும். வெய்யிலில் வாட வேண்டியிருக்கும். ஆனாலும் அதன் வசீகரம் இயல்பானது; இயற்கையானது. எந்த சவாலுக்கும் தயாராகாமல் அதீத பாதுகாப்பில் அடைபட்டு வாழ்பவர்கள் சுவாசிக்கிறார்கள் என்பதற்குக்கூட சாட்சி வேண்டியிருக்கும். வாழ்வின் போக்குகளை ஏற்று வாழத் ...

அது வேறு இது வேறு

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… உங்களுக்கு வேண்டாத ஒருவரிடம் ஏதும் திறமை இருக்குமென்றால், அதைப் பாராட்டத் தயங்காதீர்கள். அது வேறு, இது வேறு. உங்களை அவமானப்படுத்திய ஒருவர் ஆபத்தில் இருந்தால், உங்களால் முடிந்த உதவிகளைச் செய்து அவரை மீட்கப் பாருங்கள். அதுவேறு, இதுவேறு. உங்களுக்கு மிகவும் நெருக்கமான ஒருவர், பிறருக்குத் தீங்கு செய்ய முற்பட்டாலோ தவறுகள் ஏதும் செய்தாலோ பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். அது வேறு இது வேறு. உங்களிடம் பல நிறைகள் இருக்கும்போது சில குறைகளுக்காக ...
More...More...More...More...