Blog

/Blog

காட்டிக் கொடுத்தவரை காப்பாற்றுங்கள்…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… உங்களை வீழ்த்த விரும்புகிறவர்கள் உங்கள் பலவீனம் என்னவென்று பார்க்கிறார்கள். அதைக் கண்டறிந்ததும், உங்களைக் காட்டிக் கொடுக்கவோ, போட்டுக் கொடுக்கவோ தயாராகிறார்கள். உங்களைத் தள்ளிவிட அவர்கள் செய்த அதிரடி வேலைதான் உங்கள் தகுதிக் குறைவை உங்களுக்கே உணர்த்தியிருக்கும். அதைத் திருத்திக் கொள்ளவும் வழி படைக்கும். அவர் உங்களைக் காட்டிக் கொடுக்கவில்லை. சுயநலத்திற்காகவே செய்திருந்தாலும், உங்களுக்குள் இருக்கும் தகுதிக்குறைவை உங்களுக்கே காட்டிக் கொடுத்திருக்கிறார். நீங்கள் இன்னும் புதிய மனிதராய் புதுப்பிக்கப்பட்ட திறமைகளுடன் வடிவெடுக்க ...

தேவதைகளுக்கு தேதி கொடுங்கள்

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… அடுத்தகட்ட வளர்ச்சி என்பது அசாதாரணங்களாலும் அசாத்தியங்களாலுமே சாத்தியமாகிறது. அசாதாரணமான நம்பிக்கை. அசாத்தியமான உழைப்பு. இந்த அம்சங்கள் யாரிடம் இருக்கின்றனவோ அவர்களுக்கு வெற்றி நிகழ்கிறது. விபரம் புரிந்தவர்கள், வெற்றி தேவதையின் அசீர்வாதம் என்பார்கள். விபரம் புரியாதவர்கள் அதிர்ஷ்ட தேவையின் அசீர்வாதம் என்பார்கள். அதனாலென்ன? ஒன்றுக்கு இரண்டு தேவதையாய் இருந்துவிட்டுப் போகட்டுமே! நீங்கள் உழைப்பால் ஜெயித்தீர்கள் என்று சிலர் சொல்லலாம். அதிர்ஷ்டத்தால் ஜெயித்தீர்கள் என்று பலர் சொல்லலாம். இதில் யாருக்கும் நீங்கள் தன்னிலை ...

சிலந்திகளின் கவனத்திற்கு…

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… தனக்கான இரை தன்னைத் தேடி வர வேண்டும் என்று காத்துக் கிடக்கும் சிலந்திக்கு கொசுக்களும், ஈக்களும் தான் கிடைக்கின்றன. வரும் வாய்ப்புகள் போதும் என்று, சிலந்திகள் சமரசம் செய்துகொண்டு ஒரு நிலைலேயே நின்று போகின்றன. தன்னுடைய வலையை பின்னிய பிறகு சிலந்தியால் எங்கும் நகர முடிவதில்லை. தான் பின்னிய வலையில் தானே சிறையாகும் சோகம் சிலந்திக்கு. ஆனால் அது சோகம் என்றுகூட அதற்குத் தெரிவதில்லை. வாய்ப்புகளைத் தேடி வெளியே போகிறவர்களுக்கு ...

துணையாய் வருகிற துரோகங்கள்

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… மனித வாழ்வின் மிகப்பெரிய புதிர் என்ன? மனித வாழ்வின் மிகப்பெரிய தெளிவு என்ன? இந்த இரண்டு கேள்விகளுக்குமான விடைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. “யாரோ ஒருவரை நாம் சார்ந்திருக்கிறோம், அவர் தான் நமக்கு எல்லாம்” என்று எண்ணுவது வாழ்வின் மிகப்பெரிய புதிர். “யாரும் யாரை நம்பியும் இல்லை” என்பது வாழ்வின் மிகப்பெரிய தெளிவு. அந்தப் புதிரைத் தவிர்த்துவிட்டு தெளிவை உணர்பவர்கள்தான் வாழ்க்கையில் உன்னதமான உயரங்களைத் தொடுகிறார்கள். துரோகங்கள் ஏற்படுத்திய வலிகளைத் ...

கலைத்துப் போட்ட சீட்டாய் கனவுகள்

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… சீட்டு விளையாட்டில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நல்ல விஷயம் ஒன்றுண்டு. கலைந்து கிடக்கும் சீட்டுகள் நடுவில்தான் தங்கள் வெற்றிக்கான துருப்புச் சீட்டுகள் ஒளிந்திருக்கின்றன என்பதை ஆட்டக்காரர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். சொல்லப்போனால், சீட்டுகளைக் கலைத்துப் போட்ட பிறகுதான் அவர்களுடைய ஆட்டமே ஆரம்பமாகிறது. ஆனால் மனிதர்கள் பலர் தங்கள் கனவுகள் ஏதேனும் கலைந்துபோனால் கலைந்து போகிறார்கள். எல்லாமே –முடிந்து விட்டதுபோல் எண்ணி இடிந்து போகிறார்கள். கலைந்து போன சீட்டுகளிலிருந்த தங்கள் வெற்றியை ...

தாயக் கட்டைகள் தயாரிக்கும் செலவு

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… சொத்தையும் மனைவியையும் தாயமாடித் தோற்றவர்கள் பாண்டவர்கள் என்று படித்திருக்கிறோம். தயார் நிலையில் இல்லாமல் தாயமாட அழைக்கப்பட்டு தருமன் தடுமாறிவிட்டான். எதில் இறங்குகிறோமோ அதன் நுட்பம் தெரிந்திருந்தால் எந்தச் சூழலிலும் வெற்றிக்கு உத்திரவாதம் இருக்கும். கார் வாங்கியவருக்கு ஓட்டத் தெரிந்தால் மட்டும் போதாது. சின்னச் சின்னப் பழுதுகள் ஏற்பட்டால் சரி செய்யும் திறமையும் வேண்டும். எந்த ஒன்றையும் ஆழமாய் அறிந்து கொள்ளாமல் கால் வைத்துவிட்டு, பின்னர் இழப்பு நேர்ந்ததென்று சலித்துக் கொள்வதில் ...
More...More...More...More...