எதிரிகள் வெல்ல இடம் கொடுங்கள்
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… கருத்து வேறுபாடு கொண்டவர்களெல்லாம் எதிரிகளல்லர். உங்களை வீழ்த்த நினைப்பவர்களே எதிரிகள். உங்கள் தனித்தன்மையோ திறமையோ அவர்களின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வதாய் எண்ணுவதாலேயே உங்களுக்கு அவர்கள் எதிரிகள் ஆனார்கள். அவர்கள் உங்களை வீழ்த்தாமல் அவரவர் திறமையிலேயே வெல்ல முடியும் என்கிற உண்மை தெரியாததால் அவர்கள் உங்கள் எதிரிகள். தங்களை வளர்த்துக்கொள்ளும் சின்னஞ்சிறு வழி அவர்களுக்குத் தெரிந்தாலும் அவர்கள் உங்களை எதிர்ப்பதை விட்டு விட்டு, தங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்துவார்கள். உங்களால் முடிந்தால், ...
ஏமாற்றம் என்பதோர் ஏற்பாடு
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… வாழ்வில் ஏற்படும் பெரும்பாலான சறுக்கல்களுக்குக் காரணம் கவனக் குறைவு. மிகச்சிறிய விஷயம் ஒன்றில் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு பெரிய ஏமாற்றத்தைத் தவிர்த்திருக்கலாம் என்கிற பாடத்தை நம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை ஒவ்வொரு விதமாகக் கற்றுக் கொடுத்திருக்கும். வாழ்வின் மிக முக்கியமான பாடமே இதுதான். ஏமாற்றங்களைத் தவிர்ப்பது எப்படி என்பதை சிந்தித்து மனிதர்கள் தங்களை சீரமைத்துக் கொண்டால் வாழ்க்கை மிகச் சுலபம் என்பதை விளங்கிக் கொள்வார்கள். இந்தக் கவனக்குவிப்பை வா-ழ்வில் கொண்டு வருவதற்கான ...
பாழடைந்த கோவிலின் பகவானுக்கு…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… ஆள்நடமாட்டம் அற்றுப்போய், வவ்வால்கள் மட்டும் வந்து போகும் கோவில்கள் யாரோ ஒருவரின் கண்களில் பட்டதால் புதுப்பொலிவு பெறுகின்றன. புறக்கணிக்கப்பட்ட பகவானுக்கு பொங்கலும் பண்டிகையும் அமர்க்களப்படுகின்றன. விலக்கி வைக்கப்பட்ட தெய்வம் வரப்பிரசாதமென்று வணங்கப்படுகிறது. பகவானுக்கு இந்த நிலை என்றால், மனிதனுக்கு? பின்னடைவுகள் ஏற்பட்டாலும் யார் பொறுமையாய் இருக்கிறார்களோ, அவர்கள் உரிய நேரத்தில் கூடுதல் பலத்துடன் வெளி வருவார்கள். அவ்வப்போது நேர்கிற சின்னச் சின்ன பின்னடைவுகளை சகாப்தமே முடிந்தது போல் எண்ணி சஞ்சலம் ...
சோர்வின் கருவில் சூரியப் பிஞ்சு
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… பகல் என்ற ஒன்றையே பார்த்திராமல் இரவை மட்டுமே எதிர்கொண்ட மனிதன், வானம் இருளால் ஆனதென்று நினைப்பான். அவனைப் பொறுத்த வரை வெளிச்சம் என்ற ஒன்றே இல்லை. ஆனால் புலர் காலப்பொழுதில் சூரியக் கீற்றொளி மெல்லத் தலைகாட்டும் போதே பழைய இருட்டு படீரென விலகுவது பெரும் வியப்பாய் இருக்கும். மனமும் ஆகாயம் போலத்தான். சோர்வின் இருட்டு சூழ்ந்து கொள்ளும் போது விடிவுமில்லை முடிவுமில்லை என்று விசனப்படுகிறமனது சின்னஞ்சிறிய நம்பிக்கை வெளிச்சம் வந்தாலும் ...
சில யுத்தங்கள் சுகமானவை
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… வாழ்க்கை ஒரு போராட்டம் என்று சிலர் வருத்தம் தோய்ந்த அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தின் ருசி தெரிந்தவர்கள், வாழ்வின் சவால்களை விருப்பமுடன் எதிர் கொள்கிறார்கள். சாமார்த்தியம் உள்ள மனிதர்கள் சதுரங்க விளையாட்டில் அமரும்போது பார்ப்பவர்களுக்கும் பரபரப்பு, விளையாடுபவர்களுக்கும் விறுவிறுப்பு. வாழ்க்கைகூட ஒவ்வொரு விடியலிலும் உங்களை விளையாட அழைக்கிறது. அந்த அழைப்பை விளையாட்டாய் எடுத்துக்கொள்ளாமல் விருப்பமுடன் எதிர் கொண்டால் வாழ்வின் சுவாரசியத்தை சுவைத்தவர்கள் ஆவீர்கள். களம் எத்தனை கடிதாய் இருந்தாலும் கையில் இருக்கும் ...
புதையல் காக்க பூதம் உண்டு! நீங்கள் எதற்காக?
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தாமல் அதன்மேல் ஏறி அமர்ந்திருக்கும் யாருமே புதையல் காக்கும் பூதங்கள் தான். தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் இருந்து, செய்ய முடிந்த நல்ல விஷயங்களை செய்வது வரைக்கும், எல்லாமே உங்களை வெளிப்படுத்துவதால் மட்டுமே சாத்தியம். “எனக்கு அதிலே சின்ன வயசிலிருந்தே ஆர்வம். வளர்த்துக்காம விட்டுட்டேன்.” இதை எத்தனையோ பேர் எத்தனையோ விதங்களில் சொல்லி வந்திருப்பார்கள். இவர்கள் தங்கள் புதையலை எடுக்க விடாமல் தங்களைத் தாங்களே தடுக்கிற ...