Blog

/Blog

சோம்பல் நெருப்பில் சாம்பல் குவியல்

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. கடந்த கால எச்சங்களை சாம்பலாக்குவது நெருப்புக்கு முடியும். ஆனால் சோம்பல் என்னும் கொடு நெருப்பைப் பரவவிட்டால் அது எதிர் காலத்தையும் இப்போதே சாம்பல் ஆக்கி விடும் எச்சரிக்கையாயிருங்கள். நிகழ்காலத்தில் நடக்க வேண்டிய ஒன்றை சோம்பல் காரணமாக தள்ளிப் போடுவீர்களென்றால், உங்கள் எதிர் காலத்தை இப்போதே சீர்குலைக்கிறீர்கள். சின்னச் சின்னதாய் வேலைகள் செய்து கொண்டே இருக்கும் போது நீங்கள் ஏதோ ஒரு தளத்தில் இடைவிடாமல் முன்னேறிக் கொண்டே இருப்பீர்கள். சோம்பிப் போய் ...

தென்றலும் அறியாத திசையிலிருந்து

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. “எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது. அது எந்த தேவதையின் குரலோ, எங்கள் தீபங்களில் ஒளி வந்தது, அது எந்தத் கைகள் தந்த ஒளியோ” என்றொரு பாடல் உண்டு. ஒவ்வொரு காற்றுக்கும் கூட திசை உண்டு. கிழக்கிலிருந்து வருவது கொண்டல், வடக்கிலிருந்து வருவது வாடை, தெற்கிலிருந்து வருவது தென்றல், மேற்கிலிருந்து வருவது கோடை என்று, கண்டறியாத காற்றுக்கும் பெயர் உண்டு. ஆனால் தலையைத் தின்னும் சிக்கல் ஒன்றில் தடுமாறித் தவிக்கும்போது எந்தத் ...

மின்னலுக்கு விலை! மழை இலவசம்!

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…….   மின்னலும் இடியும்தான் மழை வருவதன் அடையாளங்கள். வானம் பார்த்து வாழ்கிற மனிதர்கள் மேகங்கள் திரண்டு வந்தாலும் கூட கலைந்து விடுமோ என்ற சந்தேகத்தில்தான் இருப்பார்கள். மின்னல் வந்த பின்தான் மழைக்கான நம்பிக்கையைய் பெறுவார்கள். உங்கள் வாழ்க்கை என்னும் வானத்தில் கூட ஒரு மின்னல் மின்னிய பிறகே மாற்றங்கள் வந்திருக்கும். என்ன செய்வதென்று குழம்பித் தவிக்கையில் யோசனை மின்னல், உள்ளத் சோர்ந்திருக்கும் நேரத்தில் ஊடுருவிப் பாயும் உற்சாக மின்னல், வருத்தத்தைக் ...

நீங்கள் நல்லவரா..? கெட்டவரா..?

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. இது, கண்ணாடியில் பார்க்கிற போதெல்லாம் நம்முடைய பிம்பம் நம்மைக் கேட்கிற கேள்வி. நம்மைப் பற்றி அடுத்தவர்கள் சொல்வதெல்லாம் அவரவர் அபிப்பிராயங்கள். நண்பர்கள் போற்றுவதும் பகைவர்கள் தூற்றுவதும் அவரவர் அபிப்பிராயங்களே தவிர, நாம் யார் என்கிறகேள்விக்கான விடை நமக்கு மட்டுமே தெரியும். தன் பலங்களை மறந்து தன்னைத் தாழ்த்திக் கொண்டவர்கள் ஒருவகை. அவர்கள் அடியவர்களாய் நினைக்கப்படுகிறார்கள். அடக்கத்துக்காகவே மதிக்கப்படுகிறார்கள். தங்கள் பலவீனங்களை உணர மறுப்பவர்கள் இன்னொரு வகை. அவர்கள் அன்றும் இன்றும் ...

பதவிகள் உதறுங்கள்! பொறுப்பில் மலருங்கள்!

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. எதையும் செய்யாமல் இருக்க வைக்கும் பதவிகள் இரண்டே இரண்டுதான். ஒன்று சிவலோக பதவி. இன்னொன்று வைகுந்த பதவி. அதுவரை வகிக்கும் பதவிகள் அனைத்துமே பொறுப்புகள். பொறுப்புகள் என்பவை கடமைகளைக் கட்டமைப்பவை. கடமைகளை நிறைவேற்றுவதற்கான அதிகாரமும் அங்கீகாரமும் இருப்பதை உணர்த்தவே பொறுப்புகள். அரசியல் தலைவர்களாகட்டும் அதிகாரிகளாகட்டும், பொறுப்புணர்ந்து செயல்படுபவர்களையே காலம் கனிவோடு நினைவு கூர்கிறது. சுகங்களுக்காகவும், சுயநலங்களுக்காகவும் பதவிகளைப் பயன்படுத்துபவர்கள் இனம்காணப்படுகிறார்கள் மறக்கப்படுகிறார்கள். எந்தப் பதவிக்கு வந்தாலும் பதவியில் இருக்கிறோம் என்கிற ...

சுவரைத் தட்டுங்கள்! கதவு திறக்கும்!

வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. தலைநிமிர வேண்டுமென்று தாளாத கனவு துரத்தும் பொழுது தப்புத் தப்பாய் முயற்சி செய்தாவது முன்னேறத் துடிப்போம். இருள் சூழ்ந்த இரவில், விளக்குகள் இல்லாத பொழுதில், தட்டுத்தடுமாறி நண்பன் வீட்டுக்கு வந்த ஒருவன், வாசல் எங்கு என்று தெரியாமல் சுவரைத் தட்டினான். அது வாசலில்லை என்று தெரிந்ததும் சுவரைத் தட்டிக்கொண்டே நகர்ந்தான். ஒரு வழியாய் வாசல் வந்தது. தட்டியவுடன் கதவு திறந்தது. அடித்தளத்திலிருந்து முயலும்போது ஆரம்ப காலத் தடுமாற்றங்களை எவரேனும் ஏளனம் ...
More...More...More...More...