தனிப்பெரும் பதம்
“சக்தி சக்தி சக்தியென்று சொல்லு & கெட்ட சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு” என்று சக்தி நாமத்தை உபதேசிக்கின்றார் மகாகவி பாரதி. நமக்கு உபதேசிக்கப்பட்ட நாமத்தை உபாசிக்க உபாசிக்க, காலப்போக்கில், அது வெறும் நாமமன்று, அது ஒரு மந்திரம் என்பதைக் கண்டுணர்கிறோம். அந்த மந்திரம் நமக்கு சித்தியாகிறபோது, நம் புலன்களையும் உயிரையும் அது பதப்படுத்துகிறது. முக்தி நிலைக்குக் கூட்டுவிக்கும் காரணத்தால், அதுவே “பதம்” என அழைக்கப்படுகிறது. “அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சமில்லாதபடி உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம் ...
சபரி என்றொரு யோகினி
சில முக்கியக் கோட்பாடுகளுக்கு “அந்தம்” என்றோர் ஈற்றுச் சொல் இணைந்து வரும். வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம் போன்றவை, உதாரணங்கள். வேதத்தின் அந்தம் எது, சித்தத்தின் அந்தம் எது, நாதத்தின் அந்தம் எது என நோக்கின், இறைமையின் நேரடி அனுபவம் என்பதே பதிலாக இருக்கும். எந்தவொரு யோகமும் இறை அனுபவத்தில் சென்று நிறைகிறது. அந்த அடிப்படையில் எல்லா மகத்துவங்களும் நிறைந்த யோகினியாக கம்பனில் காட்டப்படும் பாத்திரம் & சபரி. சபரி பற்றிய செவிவழிச் செய்திகளும், இன்னபிற அனுபவங்களும், அவளை ...
துதிகள் உணர்த்தும் பிரபஞ்ச ஒருமை
கம்பனின் இராம காதையில் பற்பல பாத்திரங்கள் பல்வேறு சூழ்நிலைகளில் இராமனைத் துதிக்கும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவை ஒவ்வொன்றுமே தனிச் சிறப்பு மிக்கவை. பக்தியின் பெருக்காக மட்டுமின்றிப் பற்பல யோக ரகசியங்களை உணர்த்தக் கூடியவை. அத்தகைய சொற்றொடர்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டு ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கம். இராமனின் திருவடித் தொடர்பு பெற்று, அதன் விளைவாக அரக்கவுரு நீங்கி முக்தி பெறும் விராதன், மற்றும் கவந்தன், சரபங்கன் போன்றோர் இராமனைத் துதிக்கின்றனர். கருடன் துதியும் முக்கியமான பகுதி. இந்தத் ...
கம்பனில் சமாதி நிலை பற்றிய குறிப்புகள்
ஒரு பக்தனுக்குள் நால்வகை நெறிகளும் முதிர்ந்து ஆன்மிகப் பயணத்தை ஆனந்தமயமாய் ஆக்கும் என்பதற்கு நிலைபேறுள்ள உதாரணமாய் அனுமன் திகழ்கிறான் என்பதைப் பார்த்தோம். இறைவனுக்கு எவ்விதமான பக்தன் பிரியமானவன் என்று ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் சொல்கிறார். “ஆசையற்றவனும், தூயவனும், திறமைசாலியும், பற்றற்றவனும், பயனற்றவனும், தன்முனைப்புடன் செயல்படுவதை எல்லா விதங்களிலும் விட்டவனுமான எனது பக்தன் எனக்குப் பிரியமானவன்.” “அனபேக்ஷ : சுசி -தக்ஷ & உதாசீனோ- கதவ்யத: ஸர்வாரம்ப பரித்யாகீ யோமத் பக்த: ஸமே ப்ரிய:” இந்த இலக்கணத்திற்கு ...
இறைவனோடு பொருந்துதல் யோகம்
யோக நெறி, பரந்துபட்ட அளவில் நால்வகைப் பகுப்புகளாக உள்ளன. கர்மயோகம், க்ரியா யோகம், ஞானயோகம், பக்தி யோகம், பக்தி யோகம் ஆகியன அவை. இவை தனித்தனியே பகுக்கப்பட்டாலும் இவற்றின் கலவையே மிக உன்னதமான யோகியை உருவாக்குகிறது. யோக மரபில் ஒரு கதை சொல்வார்கள். குறுகலான அறை ஒன்றில் முதலில் ஒருவர் மழைக்கு ஒதுங்கினார். அவர், ஞானயோகி. சற்று நேரத்தில் இன்னொருவர் வந்தார், அவர் பக்தியோகி. அந்த அறை இருவரை மட்டுமே கொள்ளும். இந்நிலையில் மூன்றாவதாக ஒருவர் வந்தார். ...
யோகியர் அருளிய கருவிகள்
இதிகாசங்களில் தலைமைப் பாத்திரங்களும் சரி, எதிர்நிலைப் பாத்திரங்களும் சரி, யோகியரிடமும், இறைவனிடமும், தேவர்களிடமும் சில கருவிகளைப் பெற்றார்கள் என்பதைப் பார்க்கிறோம். ஆயுதம் என்னும் சொல்லை நான் பயன்படுத்தாமைக்குக் காரணம், ஆயுதங்கள் மட்டுமே கருவிகள் அல்ல. மந்திர உபதேசங்களும் கருவிகள்தாம்; வரங்களும் கருவிகள்தாம். யோகத் திருக்கோயிலாகிய தியானலிங்கத்தில் அனைத்து சமயத்தினரும் வருகை தருவதுண்டு. அங்கே திருநீறு வைக்கப்பட்டிருக்கும். பிற நாட்டிலிருந்து அங்கே வரும் மற்ற சமயத்தினருக்கு அது குறித்துக் கேள்விகள் எழுவதில்லை. ஆனால் இந்து சமயத்தினர் சிலர், “எல்லோருக்குமான ...