(26.09.2010) மதுரையில் ஈஷாவின் மகாசத்சங்கம். அருகே அழைத்த சத்குரு வாஞ்சையுடன் நலம் வினவி மிகுந்த கனிவுடன் தோள்களில் தட்டிய நொடியில் உள்ளே எதுவோ உடைய, அந்தத் தாக்கத்தில் எழுந்த கவிதை இது: தோளில்…
சொல்லாத வார்த்தைரொம்ப சூடு -அதை எல்லோரும் சுமப்பதில்லை பாரு நில்லாத ஆற்றுத்தண்ணீர் போலே-இங்கே நீளுதடி நீளுதடி வாழ்வு ஆசையின்னும் கோபமுன்னும் ஆட்டம்-இது அத்தனையும் வெத்துப்பனி மூட்டம் பேசுறதை ஒருநிமிஷம் எண்ணு-எல்லாம் மீசையோட ஒட்டிக்கிட்ட மண்ணு…
சிப்பிகள் கிடக்கிற கரையோரம் -நான் சிரத்தையில்லாமல் நடக்கின்றேன் உப்புக் கடலலை கூச்சலிட்டும்- நான் ஒன்றும் சொல்லாமல் கடக்கின்றேன் கலங்கரை விளக்குகள் கப்பலெல்லாம்-என் கண்களில் பட்டிடப் போவதில்லை பலமுறை வருடிய ஓடங்களை-நான் பார்த்தினி ஏதும் ஆவதில்லை…
தூரிகைக் கொடியில் துளிர்க்கும் தளிர்களாய் பேரறியாத நிறங்களினுலகில் என்ன நிறமாய் இப்போதிருக்கிறேன்? ஒற்றைப் புள்ளியில் உராய்ந்த சூரியன் மற்றொரு புள்ளியாய் சுருங்கிய பொழுதில் என்னுள் எழுந்த நிலவை என்செய? வாங்கி வைத்திருந்த வானைச் சுருட்டி…
பல வருடங்களுக்கு முன்,நெருங்கிய உறவினர் இல்லத் திருமணத்திற்காக திருச்சியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கினேன்.அறைக்குள் நுழைந்தபோது காதுகளில் வாக்மென் ஒலித்துக் கொண்டிருந்தது.தொலைக்காட்சியை இயக்கியபோது,டயானாவின் இறுதி ஊர்வலம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. வாக்மென்னை அணைப்பதற்கு பதில் தொலைக்காட்சி…
பிரசாதக்கடை வைத்திருக்கும் பெரியவர் தேவசேனாபதி அய்யாவை சமீபத்தில் பார்த்த போதுதான் இன்னொருவிஷயமும் தெரிந்தது.அவருடைய சம்பந்தி,அமரர் கவிஞர் தடாகம் இளமுருகு என்பதுதான் அது.அவரும் தென்சேரிமலை வேலாயுதசாமியையும் அடிவாரத்தில் உள்ள குகைப்பெருமானையும் பாடியிருக்கிறாராம்.முருகன் பக்திப்பாடல்களை விரும்பிக் கேட்கும்…
காரியம் தொடங்கிட கணபதி-இங்கு காலத்தின் அதிபதி கணபதி சூரிய உதயம் கணபதி-திரி சூலியின் மடியில் கணபதி ஓமெனும் வடிவம் கணபதி-நாம் ஓதிடும் மந்திரம் கணபதி பூமியில் எதுவும் கணபதி-நல்ல பூசனைப் பிரியன் கணபதி மூலைக்கு…
கோவை வானொலியில் மார்கழி மாதங்களில் அதிகாலை நேரத்தில் திருப்பாவை-திருவெம்பாவை பாடல்களும்விளக்கவுரைகளும் இடம்பெறும்.அப்படியொரு முறைதிருவெம்பாவைக்கு சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களின்விளக்கவுரைகள்இடம்பெற்றன. அந்தக்கால சுகிசிவம் “ஆதியும் அந்தமுமில்லா அருட்பெருஞ்சோதி”என்ற வரிக்கு,”அவன் அருட்சோதி,சூரிய சந்திரர்களுக்கே ஒளிதருபவன் என்பதால் பெருஞ்சோதி,ஆகவே அருட்பெருஞ்சோதி” என்று…
செஞ்சேரிமலை குகைப்பெருமானுக்கு மற்ற முருகன் கோவில்கள் போலவே ஆடிக்கிருத்திகை மிகவும் விசேஷம்.காலையில் அபிஷேக ஆராதனைகள், இரண்டு மூன்று சொற்பொழிவுகள், மதியம் அன்னதானம் என்று அமர்க்களப்படும். அப்படியொரு ஆடிக்கிருத்திகையின் போது தவத்திரு சிவப்பிரகாச சுவாமிகள், தமிழ்ப்புலவர் ஒருவர்,…
முருகனுக்கு இருக்கக்கூடிய முக்கியத்துவமும்,முருக வழிபாட்டின் இருவேறு எல்லைகளும் மிகவும் சுவாரசியமானவை. ஒருபுறம் பாமரர்கள் வாழ்வில் விளையாடும் நெருக்கத்தில் கண்கண்ட தெய்வமாய், கலியுக வரதனாய் இருக்கிறான். இன்னொரு புறம், வேதங்கள் அவனுடைய பெருமைகளைச் சொல்லமுடியாமல். “சுப்ரமண்யோஹம்”…