அடுத்தடுத்து வந்த கிருத்திகைகளில், என்னையே செஞ்சேரிமலைக்கு செல்லப் பணித்தார் புலவர் ஜானகி அம்மையார். ஒவ்வொரு கிருத்திகைக்கும் ஒவ்வொரு தலைப்பில் பேசத் தொடங்கினேன். கந்தரலங்காரம், கந்தரனுபூதி என்று தொடங்கி பின்னர் பெரிய புராணத்தில் ஒவ்வொரு தலைப்பாக…
இருபதாண்டு கால இடைவெளிக்குப் பின்னர் செஞ்சேரிமலை போயிருந்தேன். காரை நிறுத்தச் சொல்லி விட்டு “தேவசேனாபதி அய்யா பழக்கடை” என்று விசாரித்து நின்ற போது, நடுத்தர வயதுக்காரர் ஒருவர்,”நீங்க…”என்றபடியே கடையிலிருந்து வந்தார்.”முத்தையா” என்று சொன்ன மாத்திரத்தில்…
31.07.2010 அன்று, சேலம் அருகிலுள்ள ஆத்தூரில் நவில்தொறும் குறள்நயம் என்னுந் தலைப்பில் கருத்தரங்கம் நிகழ்ந்தது.அதில்,”பயில்தொறும் புதுமைகள்”என்னுந் தலைப்பில் உரைநிகழ்த்தினேன். சில காலங்களாகவே திருக்குறளில் தோன்றிய புதிய சிந்தனைகள் சிலவற்றை அந்த மேடையில் பகிர்ந்து கொண்டேன்.…
உண்ட மயக்கம் மாலவனின் பாற்கடலில் மிக்க வருமலைகள் ஓலமிட்டால் கண்ணுறங்க ஒண்ணாதே-கோலமிக்க தேவியவள் பூமடியில் தேவதேவன் கண்ணுறங்க மேவிவரும் மௌன மயக்கு. நால்வர் தமிழ்கொடுத்த ஞானக் கிறக்கமோ மாங்கனி தந்த மயக்கமோ-ஆலத்தை உண்ட மயக்கமோ உத்தமியாள்…
நீட்டிய விரலுக்கும் நிலவுக்கும் நடுவே நீண்டது ஆயிரம் தூரம்-என் நினைவில் ஆயிரம் பாரம் ஒளி காட்டிய பரிவும் கூட்டிய குளிரும் காலம் முழுதும் வாழும்-அந்த போதையில் இதயம் ஆழும் எங்கே எப்படி நான்போனாலும் நிலவின்…
கல்லையும் கனிவிக்கும் கடைவிழி பதிந்ததால் கவிபாடிச் சபையேறினேன் கள்ளென்ற போதையும் முள்ளென்ற வாதையும் காணாமல் ஆளாகினேன் நில்லென்று சொல்கையில் நின்றதால் குழிவிழல் நிகழாமல் கடந்தேகினேன் நிகழ்பவை யாதென்று நினைத்திடும் முன்னரே நன்மைகள் நிதங்காண்கிறேன் அல்லென்ற நிறத்தினாள் அம்பிகை கரத்தினால் அள்ளினாள்…
இருபது வருடங்களுக்கு முன்னால் கோவையில் ஓர் இலக்கியக் கூட்டம். உளறுவதே உரைப்பொழிவு என்று திட்டவட்டமாக நம்பிய ஒரு பெண்மணி மேடையில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தார். அவையினருக்கு, அது உளறல் என உரைக்கத் தொடங்குவதற்கு முன்னரே முன்வரிசையிலிருந்து…
எழுதப் படாத என் கவிதையை ரசித்து தூரத்து மரங்கள் தலையசைத்தன. தட்டுப்படாத பிரம்பின் அசைவுக்குக் கட்டுப்படுகிற குழந்தைகள் போல ஒரே சீராகக் கிளைகள அசைந்தன. பசிய மரங்களின் பேச்சுக் குரலாய் சலசலத்தன தளிர்களும்…
கப்பல் வருகிற திசையைப் பார்த்துக் கண் விழித்திருக்கும் கலங்கரை விளக்கம். வெளிச்சக் கூக்குரல் வீசி வீசித் திரை கடல் முழுவதும் தேடிப் பார்க்கும். தொலைந்துபோன பிள்ளையைத் தேடும் தாயின் தவிப்பு அதிலே தெறிக்கும்.…
அருவிகள் நடந்த வழித்தடமிருக்கும் மலையின் மீது தழும்புகள் போல. கரும்பாறைகளில் கசிவின் தடயங்கள் இராணுவ வீரனின் கண்ணீர் போல. மெல்லிய கீற்றாய் பறவையின் பாடல் நேற்றைய கனவின் நிழலைப்போல. மெளனப் பூக்கள் மலர்கிற உச்சியில்…