காமராஜர் மீது கண்ணதாசன் கொண்டிருந்த பக்தி அபாரமானது. காமராஜர் மீதிருந்த ஈர்ப்பும், திராவிட இயக்கம் மீதிருந்த வெறுப்பும் சேர்ந்து கொண்டது. கவிஞரின் பாட்டுடைத் தலைவனாய் விளங்கினார் காமராஜர். “முழந்துண்டு சட்டைக்கும் முதலில்லாத் தொழிலாளி பழனிமலை…
“அடிக்கடி கட்சி மாறுகிறீர்களே” என்று கவிஞர் கண்ணதாசன் அவர்களிடம் கேட்டபோது, “நான் மாறவில்லை! என் தலைவர்கள் மாறுகிறார்கள்!” என்று சொன்னார். அவருடைய மற்ற அரசியல் அறிவிப்புகளைப்போலவே தமிழகம் இதையும் வேடிக்கையாக எடுத்துக் கொண்டதுதான் வருத்தமான விஷயம். தாங்கள் வகுத்த கொள்கைகளிலிருந்து தலைவர்களே முரண்படுகையில் அந்தத்…
ஒரு மனிதன் தன்னையே ஆய்வு செய்கிறபோது கிடைக்கிற தெளிவு ஆயிரமாயிரம் அறநூல்களை வாசிப்பதால் வருகிற தெளிவைக்காட்டிலும் தெளிந்தது. உடல்நலனை ஆய்வு செய்ய மனிதனின் இரத்தமும் கருவிகளும் பயன்படுகின்றன. இந்த எச்சங்களாலும் ஒருவனைத் தக்கான், தகவிலன்…
கவிஞர் கண்ணதாசனின் கவிதைகள் சுயவிமரிசனத்திலே தொடங்கி சுயதரிசனத்திலே சென்று முடிகின்றன. அவருடைய கவிதைகளில் பெரும்பாலானவை,தன்னுணர்ச்சிப்பாடல்களே என்று பல விமர்சகர்கள் எழுதியுள்ளனர். உண்மைதான். ஆனால் அந்தத் தன்னுணர்ச்சி, வெறும் வாக்குமூலங்களாக நின்றுவிடுவதில்லை.சுய விமரிசனமாய் வளர்ந்து, சுய…
கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலுள்ள ஈஷா யோக மையத்துடன் எனக்கு நெருங்கிய தொடர்புண்டு. அங்கே அமைந்திருக்கும தியானலிங்கம், பிராணப் பிரதிஷ்டையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.யோக மரபில் , மனித உடலில் ஏழு சக்கரங்கள் இருப்பதாகச் சொல்வார்கள். அந்த …
தூளி அசைத்திடும் காளி வளைக்கரம் தூங்க விடாதொரு நேரம்-அவள் ஆளும் இரவினில் ஆடும் சதங்கைகள் ஆயிரம்- செவிகளின் ஓரம் நாளில் படர்ந்திடும் மூல இருளெங்கள் நாயகி அவளது கோலம்-மலர்த் தாள்கள் அசைவினில் தாவி யெழுந்திடும் தந்திமி…
நிறம் மாறாத பூக்கள் படம். பாடலுக்கான சூழலை, கவிஞர் கண்ணதாசனிடம் விளக்கினார் இயக்குநர் பாரதிராஜா. “யார் ஹீரோ?” வினவினார் கவிஞர். ‘புதுப்பையன்தாண்ணே! ஒண்ணு ரெண்டு படங்களிலே நடிச்சிருக்கான். “என்றார் பாரதிராஜா. “ஹீரோயின்?” அதுவும் புதுசுதாண்ணே! நம்ம ராதா…
“சரஸ்வதியின் கையிலுள்ள வீணைபோல் இருக்கிறீர்களே! உங்களை கவனிக்க யாருமில்லையா?” என்று கவிஞர் கண்ணதாசனிடம் கேட்டவள், அவரிடம் கொஞ்ச நேர உறவுக்காக வந்த பெண்ணொருத்தி. அந்தச் சொல்லே, வசந்தமாளிகை திரைப்படத்தில் “கலைமகள் கைப்பொருளே!உன்னை கவனிக்க ஆளில்லையோ!விலையில்லா…
திருமண வரவேற்பு மேடையில் மாலையும் கழுத்துமாய் நின்ற அந்த இளம்பெண்ணுக்குக் கண்கள் அடிக்கடி கலங்கின. அடிக்கடி வாசலைப் பார்த்துக் கொண்டாள். காதல் கணவன் கைகளை மெல்ல அழுத்தும் போதெல்லாம் பளிச் புன்னகை ஒட்டிக் கொள்ளும். பெற்றோரின் சம்மதமில்லாமல் செய்து கொண்ட திருமணம். பெற்றோர் காலையில்…
அழுத்தமாக ஒட்டிக் கொள்ளும் தரமான கோந்து தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, தன் பொதுப்பங்குகளை அறிவிக்க முற்பட்ட போது தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பை மட்டுமின்றி பங்குகள் அறிவிப்பதையும் குறிக்கும் வி தமாக விளம்பரம் வெளியிட விரும்பியது. நவீன ஓவியர் ஒருவரை அர்த்தநாரீசுவரர் ஓவியத்தை வரையச் சொல்லி அதன்கீழ் ஒரு வாசகம்…