அவளுக்கு வடிவம் கிடையாது அழகுகள் எல்லாம் அவள் வடிவே அவளுக்குப் பெயரொன்று கிடையாது ஆயிரம் பெயர்களும் அவள்பெயரே அவளுக்கு நிகரிங்கு கிடையாது அவளுக்கு அவள்தான் ஒருநிகரே கவலைகள் எனக்கினி கிடையாது காளிவந்தாள் என் கண்ணெதிரே…
மனக்கேடு கொண்டெழுப்பும் கோட்டை-அது மணல்வீடாய் சரிந்துவிழும் ஓட்டை குணக்கேடு தீரேன்நீ பராசக்தி பாரேன்என் ஏட்டை-என்ன -சேட்டை குச்சியிலே கோடிழுத்தா கோலம்?-எனை குற்றம்சொல்லி துப்புதடி காலம் உச்சகட்டம் என்நடிப்பு உள்ளகதை உன்நினைப்பு தூலம்-அலங்-கோலம் கோயிலுக்குள் நின்றுகொண்ட…
அர்ச்சனை நேரத்தில் இட்டமலர் அரைநாள் சென்றால் சருகாகும் உச்சி முகர்பவர் சொல்லொருநாள் உதறித் தள்ளும் பழியாகும் பிச்சியின் கூத்துகள் இவையெல்லாம் பாடம் நமக்கு நடத்துகிறாள் இச்சைத் தணலை அவித்துவிட்டு இலையைப் போடவும் சொல்லுகிறாள் மண்ணில்…
கொட்டோடு முழக்கோடு கொலுவிலேறினாள் -அன்னை கொள்ளையெழில் பொங்கப் பொங்க மனதிலேறினாள் பொட்டோடு பூவோடு மாதர்வாழவே -அன்னை பூரணமாய் கருணைதந்து பரிவுகாட்டினாள் தீபத்தின் ஒளியினிலே தகதகக்கிறாள்-அன்னை திருவிளக்கின் சுடராகத் தானிருக்கிறாள் நாபிதனில் ஒலியாக நிறைந்திருக்கிறாள்-அன்னை நாதத்துள்…
சங்கல்பம் கொண்டு சமர்செய்ய வந்திங்கு மங்கலை கொண்டாள் மகாவெற்றி-எங்கெங்கும் நல்லவையே வென்றுவர நாயகி நாமங்கள் சொல்லிப் பணிந்தால் சுகம். புத்தி வலிவும் பொருள்பலமும் பாங்கான உத்தி பலமுமே உத்தமிதான் -சத்தியவள் போடும் கணக்கின் பதிலீட்ட…
அலைகள் புரண்டெழும் ஓசையிலே-ஓர் அழகியின் சிரிப்பொலி கேட்கிறது விலைகள் இல்லாப் புதையல்களில்-அவள் வண்ணத் திருமுகம் தெரிகிறது நிலைபெறும் பாற்கடல் பாம்பணையில்-அந்த நாயகி சரசம் நிகழ்கிறது வலைவிழும் மீன்களின் துள்ளலைப்போல்-அவள் விழிபடும் இடமெலாம் கொழிக்கிறது அறிதுயில்…
பச்சைப் பட்டின் முந்தானை -அந்தப் பரமனின் நெற்றியை ஒற்றும் பச்சை வண்ணத் திருமேனி-எங்கள் பரமனின் பாதியைப் பற்றும் பச்சைப் புயலாம் மயிலினிலே-ஒரு பிள்ளை பூமியை சுற்றும் பச்சை மாமலை திருமாலோ-அவள் பிறந்த வகையின் சுற்றம்…
கட்டிவைத்தும் மனக்களிறு கட்டுப்படாது-அதுகாமங்கொண்டு பிளிறுவதை விட்டுவிடாதுதட்டிவைக்க அவள்வராமல் தலையடங்காது-எங்கள்தேவதேவி குரல்தராமல் நிலையடங்காதுஅங்குசத்தைக் கொண்டுநின்றாள் ஆலயத்திலே-நம்அகந்தையெல்லாம் தளரவைக்கும் ரௌத்திரத்திலேஅங்கயற்கண் பார்வைபட்ட ஆனந்தத்திலே-அடஆனையெல்லாம் பூனையாகும் சிவலயத்திலே!பாணமைந்தும் கரும்புவில்லும் பூங்கரத்திலே-ஒருபார்வையிலே மனமடங்கும் அவள்பதத்திலேகோணங்களோ ஒன்பதுஸ்ரீ சக்கரத்திலே-நவகோள்களெல்லாம் வணங்கிநிற்கும் ஸ்ரீபுரத்திலே சிந்துரத்தில்…
ஏந்திய வீணையில் எழுகிற ஸ்வரங்கள் எண்திசை ஆண்டிருக்கும் மாந்திய அமுதம் பொய்யென தெய்வங்கள் மதுரத்தில் தோய்ந்திருக்கும் பூந்தளிர் இதழ்களில் பிறக்கிற புன்னகை புதுப்புது கலைவளர்க்கும் சாந்தமும் ஞானமும் சரஸ்வதி தேவியின் சந்நிதி தனில்கிடைக்கும் படைப்புக்…
காத்துக் கிடந்தது குகன்படகு கள்ளத் தோணிகள் திடீர் வரவு…….. மோதிய அலைகளில் ஆடியபடியே பாதங்கள் படுமென ஏங்கியபடியே நாயகன் திருமுகம் தேடியபடியே தோழமை எனும்சொல் சூடியபடியே காத்துக் கிடந்தது குகன்படகு கள்ளத் தோணிகள் திடீர்…