அவள் தரும் லஹரியில் அவளது பெயரினை உளறுதல் ஒருசுகமே பவவினை சுமைகளும் அவளது திருவிழி படப்பட சுடரெழுமே சிவமெனும் சுருதியில் லயமென இசைகையில் சிறுமியின் பரவசமே புவனமும் அவளது கருவினில் தினம்தினம் வளர்வது அதிசயமே…
மலைமகள் இரவுகள் நிகழ்ந்திடும் பொழுதுகள் மலேய நாட்டினிலே கலைமகள் அலைமகள் கடைவிழி பதிந்திடும் காவிய வீட்டினிலே நலம்பல வழங்கிடும் நாயகி எங்கெங்கும் நின்று ஜொலிக்கின்றாள்! சிலைகளில் மலர்களில் பனியினில் வெயிலினில் சிரித்து நிறைகின்றாள் …
தேதியிது !சாமுண்டி தேவி திருமலையில் ஆதி குருவின் அருளாலே-யாதுமாய் தன்னை உணருகிற தன்மையிலே சத்குருவும் பொன்னாய் மிளிர்ந்த பொழுது. பாறை மடியினிலே பூப்பூத்த நாளினிலே ஊறும் அமுதத்தின் ஊற்றொன்று-மீறும் புனலாய்ப் பெருகி புனிதத்தின் தூய…
21.09.2013. திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் “மண்வாசனை” கூட்டத்தில் கவியரசு கண்ணதாசன் குறித்து உரை நிகழ்த்தப் போயிருந்தேன்.மண்வாசனையை எழுப்பும் விதமாய் மழை வெளுத்து வாங்கியது.கூட்ட அரங்கில் மேடைக்கு இடதுபுறம்நெடிய்துயர்ந்த மரமொன்றின் நிமிர்வுக்கு வாகாய் இடம்விட்டுக் கட்டியிருந்தார்கள்.…
தாடிகளை நம்புவதே தேசத்துக்கு நல்லது மூடிவைத்துப் பேசவில்லை;மனம்திறந்து சொல்வது பாடினதார் திருக்குறளை? படத்தைநல்லாப் பாருங்க பாரதத்தின் நாட்டுப்பண்ணைப் படைத்தவர்யார் கூறுங்க குறுந்தாடி வளர்த்தவங்க கம்யூனிசம் வளர்த்தாங்க கைத்தடியும் எடுத்தவங்க பகுத்தறிவை வளர்த்தாங்க வெறுந்தாடி வளர்த்தவங்க…
தூரத்து வெளிச்சம் நீதானா-எனைத் துரத்திடும் கருணை நீதானா பாரத்தில் தவிக்கிற நேரத்திலே சுமை தீர்ப்பது பைரவி நீதானா -என் திசைகளைத் திறந்தவள் நீதானா வழித்துணை யானவள் நீதானா விழுத்துணை யானவள் நீதானா பழிகள் நிறைந்தஎன் வழியினிலேஒளி தருபவள் பைரவி நீதானா-உடன்…
மகாகவி பாரதிக்கு முன்பும் சமகாலத்திலும் பாரதி பட்டத்துடன் திகழ்ந்தவர்கள் குறித்து உவமைக்கவிஞர் சுரதா ஒரு பாட்டுப் பட்டியலை வழங்கியிருக்கிறார். 1) திருவதிகைக் கலம்பகம் எழுதிய வேலாயுத பாரதி 2)திருவிளையாடல் நாடகம் எழுதிய கிருஷ்ண பாரதி…
கானமெழுப்பிய பேரிகை ஒன்றினைக் கட்டிலில் போட்டது யார்?அட கட்டிலில் போட்டது யார்? யானை உலுக்கிய ஆல மரமொன்றின் வேரை அசைத்தது யார்?அட வேதனை தந்ததும் யார்? ஏறிய நெற்றியை மீறிய மீசையை எங்கோ மறைத்தது…
எதிர்பார்த்து நின்றவர்க்கோ ஏதொன்றும் புரியவில்லை ஏறெடுத்தும் பாராதார் எல்லாமே அறிந்திருந்தார்: புதிர்போட்ட மனிதருக்கே பதில்மறந்து போயிருக்க விதியெல்லாம் கடந்தவர்தான் விடைதாண்டிப் போயிருந்தார் விதைபோட்டு வளர்த்தவரோ வெய்யிலிலே காய்ந்திருக்க பதறாமல் இருந்தவரே பழம்பறித்துப் புசித்திருந்தார் முதல்போட்ட…
உற்சவக் கோலத்தில் உலாப்போகும் நேரத்தில் உற்சாக அலங்காரமோ கற்பகத் தாருவாம் கடவூராள் எழில்பார்க்க கண்கோடி இனிவேண்டுமோ பொற்பதம் மலர்க்கரம் பூமுகம் எங்கெங்கும் பூவாரம் எழில்சிந்துமோ கற்பனைக்கெட்டாத காருண்ய நாயகி கடைக்கண்கள் எமைத்தீண்டுமோ மின்னாயிரம் சேர்ந்த…