(ஜூலை-4 சுவாமி விவேகானந்தர் நினைவு நாள்) எல்லாத் திசைகளும் என்வீடு-என இங்கே வாழ்ந்தவர்யார்? நல்லார் அனைவரும் என்னோடு-என நெஞ்சு நிமிர்ந்தவர்யார்? நில்லா நதிபோல் விசையோடு-அட நாளும் நடந்தவர் யார்? கல்லார் நாடெனும் கறையகற்ற-சுடர்க் கணையாய்ப் பாய்ந்தவர்யார்…
(இன்று காலை இசைக்கவி ரமணனை அலைபேசியில் அழைத்தேன். எங்கிருக்கிறீர்கள் என்றார். திருக்கடவூரில் என்றேன். அவரிடமிருந்து பேச்சே இல்லை. பின்னர் சொன்னார், “எங்கே இருக்கிறாய் தேவி! நீ எப்படி இருக்கிறாய்” என்று இப்போதுதான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.…
கூடிக் கலையும் நாடகக் கூடம் போடப்போவது கௌரவ வேடம் மர்ம வலையின் மனிதன் விழுவான் கர்ணன் மனதைக் கண்ணன் அறிவான் என்றோ தின்ற உப்புக்காக இங்கே இன்று நட்புக்காக அரசல் புரசலாய் ஆயிரம் சலனம்…
(22 ஆண்டுகளுக்கு முன் சென்னைத் தொலைக்காட்சியில் வாசித்த கவிதை… பாவேந்தர் நினைவாக இன்று..) சதைக்கவிதை உயிரின்றிப் பிறந்த காலம் சகதியிலே மையெடுத்துப் புனைந்த காலம் எதைக்கவிதை என்போமோ எனுமேக்கத்தில் எந்தமிழர் உயிர்வாடி இளைத்த காலம்…
கவியன்பன்.கே.ஆர்.பாபு இது நடந்து இருபது ஆண்டுகள் இருக்கும்.கோவை நானி கலையரங்கில் ஓர் இலக்கிய நிகழ்ச்சி. பார்வையாளர்கள் வரிசையில் கவியன்பன் பாபுவும் நானும். இருவருக்குமே வெண்பா எழுதுவதில் விருப்பம். ஆளுக்கு இரண்டு வரிகளாய் பாடும் இரட்டைப் புலவர்களின் உத்தியை நாங்களும் கடைப்பிடித்திருந்தோம். மேடையில் பேச்சாளர்கள் தூள் கிளப்பினார்கள். தூள் கிளப்பினார்கள் என்றதுமே பிரமாதமாகப் பேசினார்கள் என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது. மரத்தை ரம்பத்தால் அறுக்கும் போது தூள் கிளம்பும் அல்லவா? அந்த தூள் இது. ஆர்வக் கோளாறில்…
புகைப்படம்: வேற யாரு?அதுவும் அந்தச் சுகாதான்!! இந்தக் கேள்வியை 2005ல் முனைவர்.கு.ஞானசம்பந்தனிடம் கேட்பேன். “இப்போ ஷூட்டிங்தான்.நீங்க?”என்பார் பதிலுக்கு.நானும் ஷூட்டிங்தான் என்பேன். அப்போது நான் கஸ்தூரிமான் படத்தில் நடித்துக் (?) கொண்டிருந்தேன். பேராசிரியரும் படங்களில் நடித்துக்…
(13.04.2013 அன்று நிகழ்ந்த முத்திரைக் கவியரங்கில் வாசித்த கவிதை) வணக்கம்! தலைப்புச் செய்திகள்..தனியாய் இல்லை! துச்சாதனனின் இழுப்பில் வளர்ந்த திரௌபதி புடவைத் தலைப்பைப் போல மலைக்கவும் வைத்து களைக்கவும் வைக்கும் நடப்புகள் நாட்டில் நிறைய…
பவானி பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பில் பேராசிரியர் வெற்றிவேல் பேசினார்.”எங்க ஆண்டுவிழாவுக்கு வர ஒத்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றிங்க. உங்களை பவானிக்கு அழைத்து வர நம்ம மாணவர் ஒருவர் வருவாருங்க”.பல கல்லூரிகள் சிறப்பு விருந்தினரை அழைத்து வர…
வானம் எனக்கென வரைந்து கொடுத்த வரைபடம் ஒன்றுண்டு நானே என்னைத் தேடி அடைந்திட நேர்வழி அதிலுண்டு ஊனெனும் வாகனம் ஓட்டி மகிழ்வது ஒருதுளி உயிராகும் ஏனென்றும் எங்கென்றும் யார்தான் கேட்பது எங்கோ அதுபோகும் காலம் அமைக்கிற…