ஒளிமஞ்சள் பூச்சிலே ஓங்காரப் பேச்சிலே ஒய்யாரி நிற்கின்ற கோலம் களிதுள்ளும் கண்ணிலே கதைபேசும் போதிலே கலியெல்லாம் தீர்கின்ற ஜாலம் கிளிசொல்லும் சொல்லிலே கமலத்தின் கள்ளிலே கொஞ்சிவரும் பைரவியாள் நாமம் எளிவந்த அன்பிலே ஏங்கிடும் நெஞ்சிலே…
பீஷ்மருடனான முந்தைய சந்திப்பில் எவ்வளவு ஆற்றாமையும் சினமும் அம்பைக்கு இருந்ததோ இப்போது அதே அளவு அம்பையின் மனதில் பீஷ்மர் மீதான பிரியம் எழுந்து படகில் வழிந்து நதியை நிரப்பியது என்றே தோன்றுகிறது. அவளுக்குள் தூண்டப்பட்ட…
இராமன் தோன்றுவதற்கு முன்னரே வான்மீகி இராமாயணத்தை எழுதிவிட்டார் என்று சொல்லப்படுவது பற்றி ஓஷோவிடம் அவருடைய சீடர்கள் கேட்டார்கள்.”முன்னரே எழுதப்பட்டது என்று பொருளல்ல. முன்னரே எழுதிவிடக்கூடிய அளவு கணிக்கக்கூடிய வாழ்க்கைமுறைதான் இராமனுடைய வாழ்க்கை.அவர் ஒரு சூழலில்…
பெருங்கொண்ட வனந்தனில் பசிகொண்ட வேங்கையின் பார்வைக்குக் கனல்தந்தவள் கருக்கொண்ட சிசுவுக்கு பசிதாகம் போக்கவே கொடியொன்று தருவித்தவள் உருக்கொண்டு வந்தாலும் அருவமாய் நின்றாலும் உயிருக்குத் துணையானவள் சரக்கொன்றை சூடுவோன் சரிபாதி மேனியில் சரசமாய் அரசாள்பவள் சுடர்வீசும்…
21 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் நெருங்கிய உறவில் ஒரு திருமணம்.என் ஒன்றுவிட்ட சகோதரர்தான் மணமகன். திருமணம் முடிந்து மறுநாள் மாலை வேறோர் ஊரில் வரவேற்பு.மணமகளுக்கு அப்பா மட்டும்தான்.அம்மா இல்லை. அவர் மணமகன் வீட்டிற்கு வரவில்லை.மறுநாள்…
குங்குமத்தில் குளித்தெழுந்த கோலமடி கோலம் பங்கயமாய் பூத்தமுகம் பார்த்திருந்தால் போதும் அங்குமிங்கும் அலைபாய்ந்து அழுதநிலை மாறும் தங்குதடை இல்லாமல் தேடியவை சேரும் கைகளொரு பத்தினிலும் காத்தணைக்க வருவாள் நெய்விளக்கின் நடுவினிலே நித்திலமாய் சுடர்வாள் வெய்யில்மழை…
கடலின் அக அடுக்குகளிடையே உப்புச்சுவையின் திண்மையிலும் பாசிகளிலும் பவளங்களிலும் ஊடுருவி வெளிவரும் மீனின் அனுபவம்,ஒரு நீச்சல் வீரனுக்கு ஒருபோதும் வாய்க்காது. வாழ்வின் அத்தனை அம்சங்களுக்கும் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்துவிட்ட ஒருவன் கணங்களின் சமுத்திரத்தில்…
வைத்திருக்கும் கொலுநடுவே வைத்திடாத பொம்மையொன்று மைத்தடங்கண் விழிதிறந்து பார்க்கும் கைத்ததிந்த வாழ்க்கையென்று கண்கலங்கி நிற்பவர்பால் கைக்கரும்பு கொண்டுவந்து சேர்க்கும் மெய்த்தவங்கள் செய்பவர்கள் பொம்மையல்லஉண்மையென்று மேதினிக்குக் கண்டறிந்து சொல்வார் பொய்த்ததெங்கள் பாழும்விதி பேரழகி பாதம்கதி பற்றியவர்…
ஆளுமைகள் மீது நாம் கட்டமைக்கும் பிம்பங்கள் அளவில்லாதவை. அவர்களின் எல்லா பக்கங்களையும் கணக்கிலெடுத்துக் கொள்வதென்பது, அவர்களின் படுக்கையறையில் எட்டிப் பார்ப்பதல்ல. அவர்களை நிறைகுறைகளுடன் புரிந்து கொள்வது. மகத்துவம் பொருந்தியவர்களாய் மட்டுமே சித்தரிக்கப்படுபவர்கள் ,மறுவாசிப்பில் பகிரங்கமாகிற…
சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது.நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் விஜயதசமி பூஜை.அவர் வைதீக மரபில் வந்தவர். அவருடைய குடும்பத்தினரும் அவருடைய சகோதரர் குடும்பத்தினருமாக வந்து பூஜை ஏற்பாடுகளை ஒழுங்கு செய்து கொண்டிருந்தனர். இரண்டு…