மாநாய்கன் பெற்றமகள் மலர்ந்தாள் மாசாத்து வான்மகனை மணந்தாள் மானாய் மருண்டாள் மதுரைநடந்தாள் கோனவன் பிழைசெய்ய கண்ணகியும் கனலாகி எழுந்தாள் சுதிசேர்த்தாள் மாதவியும் யாழில் சுரம்சேர்த்தாள் பூம்புகாராம் ஊரில் விதிசேர்த்த காரணம் வல்வினையின் காரியம் பதிநீத்தான்…
தேர்ந்த தமிழறிஞரும்,ரசிகமணி டி.கே.சி. அவர்களின் அணுக்கச் சீடருமான வித்வான் ல.சண்முகசுந்தரம் சென்னையில் மறைந்தார். அவருக்கு வயது 94. தன் குருநாதரைப் போலவே மாபெரும் ரசிகராய் வாழ்வாங்கு வாழ்ந்த அவர் பல நூல்களை எழுதியுள்ளார். சாகித்ய…
காடு திருத்திய மானிடர்கள்-ஒரு காலத்தில் நாடுகள் அமைத்தளித்தார் வீடுகள் வீதிகள் சமைத்தவரோ-பல வாழ்க்கை முறைகளும் வகுத்தளித்தார் தேடும் வசதிகள் பெருகியபின்-நல்ல தேசங்கள் வளர்ந்து பொலிகையிலே ஏடு புகழ்ந்திட சிங்கையினை-புகழ் ஏற்றி வளர்த்தார் லீகுவான் இயூ…
(இசைக்கவி ரமணன் , விசாகப்பட்டினம் அருகிலுள்ள பீமுனிப் பட்டினத்தில் பீடம்கொண்டிருக்கும் தன் குருநாதரை தரிசித்த அனுபவங்களைப் படங்களாய் பகிர்ந்திருந்தார்.அந்தப் படங்கள் பார்த்த உவகையில் இந்த வெண்பாக்கள் எழுதினேன்…..பாம்பறியும் பாம்பின் கால்!!!) நெருப்பின் குளுமை நிழலை,…
இல்லாது போதெலெனும் பொல்லாத போதைதான் ஈஷாவில் இருக்கின்ற மாயம் நில்லாத வினைகளெலாம் செல்லாது போக குரு நாதனவன் நிகழ்த்துகிற ஜாலம் சொல்லாத வலிகளையும் கிள்ளாமல் கிள்ளிவிட சுட்டுவிரல் கட்டைவிரல் சேரும் கல்லாத கல்வியினைஎல்லாரும் அடைந்திடவே…
(ஆங்கில வடிவமான லிமரிக்கின் தமிழ் வடிவம் குறும்பா.அதனாலோ என்னவோ ஆங்கிலச் சொற்களுக்கு அனுமதி உண்டு..) காலையில நடக்குறாரு அப்பன் கேழ்வரகு இட்டிலிதான் டிப்பன் வேலைக்கு இடையே வச்சுதின்ன வடையே மூலையில முடக்கிடுச்சே சுப்பன் பன்றிக்கும்…
கைரேகை படிந்த கல்வழியே அறிமுகமான கவிஞர் யாழி,கவிதையின் ரேகை படிந்த தேநீர்க் கோப்பைகளுடன் வந்திருக்கிறார்.பத்துத் தலை கொண்டவன் இராவணன் என்பார்கள்.இன்று நவீன கவிதைக்கு பலநூறு முகங்கள்.யாழியின் இந்தக் கவிதைகளில் நான் காணும் முகம், மரபின்…
சக்தி ஜோதியின் கவியுலகம் முழுவதுமே பெண்ணின் அகவுலகம் சார்ந்ததுதானா எனில்,இல்லை. சங்க இலக்கிய வாசிப்பின் வழி அவர் புனைந்து கொண்ட அகவுலகம் ஒரு பகுதியெனில், நிகழ்காலத்தின் கனலாக நிற்கும் பெண்ணியம் சார் புறவுலகம் மற்றுமொரு…
ஒரு பறவையின் சிறகு துளிர்விடும் நாளுக்கு மௌன சாட்சியாய் பஞ்ச பூதங்களும் நிற்கின்றன. தன்னிலிருந்து உந்தியெழ ஆசீர்வதிக்கிறது பூமி. தன்னை நோக்கித் தாவ அழைக்கிறது ஆகாயம். சிறகுகளைக் கோதுகிறது காற்று. சிறகு தாழ்த்தித் தேடினால்…
பதட்டமுறுகிற ஆண் தனக்குத் தானே புதிராய் தெரிவான்.அதுவும்,தெளிவான ஒரு பெண்ணுக்கு முன்னால் அவன் சமனப்பட முடியாமல் தடுமாறுவது பரிதாபமானதுதான்.அந்த விநாடியில் பெண்மையை,காதலை,தாய்மையை மீறி பெண்மனதில் இருக்கும் பகடை உருளத் தொடங்கிவிட்டால் அங்கே உறவுகள்…