திருவெம்பாவையின் நான்காம் பாடல் இன்னொரு பெண் வீட்டு வாசலில் தொடங்குகிறது. அவளும் முத்தனைய சிரிப்பழகிதான். ஒளிவீசும் நித்திலமோ ,உறங்குவதால்,ஒளிந்திருக்கும் நித்திலமோ–ஒண் நித்தில நகையாய் இன்னும் உனக்கு விடியவில்லையா என அழைக்கிறார்கள். உடனே அவள் “வண்ணக்…
திருவெம்பாவையின் மூன்றாம் பாடலை முந்தைய இரண்டு பாடல்களின் தொடர்ச்சியாகக் காண முற்படுவோமேயானால்,வழக்கமாகப் பொருள் கொள்ளும் விதத்திலிருந்து சற்றே மாறுபட்ட சிந்தனை ஒன்று தோன்றுகிறது.வீட்டினுள் உறங்குகிற பெண்ணை கடைதிறவாய் என்று வெளியே உறங்கும் பெண்கள் கேட்க,அவர்களை…
ஈஷாவில் சூன்ய தியான தீட்சை பெற்ற புதிது.மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் சென்றிருந்தேன். தரிசனத்துக்குப் பின்னர் ஓர் ஓரமாக தியானத்தில் அமர்ந்தேன். சில நிமிடங்கள் சென்றிருக்கும். யாரோ ஒருவர் என்னை உலுக்கி எழுப்பினார்.நான் உறங்குவதாய் எண்ணி…
மார்கழியின் விடியற்காலைகளை பாவையர் கோலங்களும் பாவை பாடல்களும் புலர்வித்த காலங்கள் உண்டு..பெண்கள் கூடி பெருமான் பெருமை பேசி நீராடப் போவதாய் பாவை பாடல்களின் கட்டமைப்பு. இது சங்க இலக்கியங்களின் “தைந்நீராடல்” மரபின் நீட்சி என்பார்கள்.…
இன்னொரு மனிதன் எழுதிய சீலையில் உன் தூரிகையை ஓட்டலாகாது; மௌனம் பரப்பிய மேடையில் ஏறி யவன சாஸ்திரம் இயம்பலாமா நீ; புராதனசிலைகளின் பக்கவாட்டில் கிறுக்குவதி லேயா கிளர்ச்சி உனக்கு? நீவிழிக் கும் வரை நிதானித்…
மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி தெருவிலிருந்து பிரியும் குறுந்தெருவில் ஆண்டாண்டு காலமாய் ஸ்ரீராம் மெஸ், சைவ உணவுக்கு புகழ் பெற்ற இடமாய் விளங்குகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு உள்ளே நுழையவே ஏகக் கெடுபிடி நடக்கும். இப்போது…
அந்தச் சிறுவன் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் இருந்தான்.நோயின் தீவிரம் அந்தப் பிஞ்சு மனதை சோர்வடையச் செய்யாமல் இருக்க அவனுடைய தாய் ஜன்னலருகே அமர்ந்து கொண்டு வெளியே நடப்பவற்றை நடித்துக் காட்டி விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள்.அன்னையின்…
கார் சாத்தூரை நெருங்கிக் கொண்டிருந்தபோது ஜேசுதாஸ் குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது”தெய்வம் தந்த வீடு” என்ற பாடல்.அந்தப் பல்லவியில் துரத்தும் கேள்வி ஒன்று உண்டு.Haunting Question என்பார்கள்.”வாழ்வின் பொருளென்ன ..நீ வந்த கதையென்ன”என்கிற அந்தக் கேள்வி,வலிமையானது…
ஒதுங்கிய கூரை ஒழுகலாச்சு ஓலைகளின் மேல் தங்கப் பூச்சு பதுங்கிய பூனை வெளிவந்தாச்சு புழுக்களிடத்தில் புலிக்கென்ன பேச்சு தூண்டில் முனையில் தூங்கும் முதலை நீண்ட நதிமிசை நெருப்புச் சுடலை தீண்டிய கிளர்ச்சியில் தவிக்கும் விடலை…
கத்திகள் கேடயங்கள் கதைபேசும் களத்தினிலே புத்தர்கள் நடத்துவதோ புத்தகக் கண்காட்சி * பார்வைக்கு சுகமாக பொய்நிலவு விற்கையிலே சூரியன் கடை போட்டால் சீந்துபவர் யாருமில்லை * செயற்கைப் பூக்களுக்கு சாவில்லை என்பதனால் சுயமறிந்தோர் கொடுப்பாரோ…