தென்காசியில் ரசிகமணி டி.கே.சி.விழா.அவருடைய இல்லமாகிய பஞ்சவடியில் அவர்தம் பெயரர்கள் திரு.தீப.நடராஜன்,திரு.தீப. குற்றாலலிங்கம் ஆகிய பெருமக்களின் அன்பு விருந்தோம்பலில் திளைத்துக் கொண்டிருந்தோம்.ராஜாஜி,ஜஸ்டிஸ் மஹராஜன், தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் வித்வான்.ல.சண்முகசுந்தரம் போன்ற பெரியவர்கள் அமர்ந்து கலை இலக்கியங்களை அனுபவித்த…

ஒரு மனிதனின் வாழ்வில் எது புண்ணியம் என்ற கேள்விக்கு அபிராமிபட்டர் வழங்கும் பதில் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில்தான்எத்தனை பொருத்தம்! ஒரு மனிதன்,தான் விரும்பியதை வாழ்வில் செய்வதும், அதே மன அதிர்வலையில் இருப்பவர்களுடன் உறவில் இருப்பதும்தான்…

அந்தாதியில் அம்பிகையின் திருமுலைகள் பற்றிய குறிப்புகள் ஏராளமான இடங்களில் தென்படுகின்றன. அவை பிரபஞ்சத் தாய்மையின் பெருஞ்சின்னங்கள். பரஞானம் அபரஞானம் ஆகியவற்றின் அடையாளங்கள். அம்பிகையின் அளப்பரிய கருணைப் பெருக்கத்தின் குறியீடுகள். அதன் பேரருட்தன்மையைத் தாங்கும் திறன்…

கடையும் மத்தும் கடையூர்க்காரியும் —————————————————————– பால்போன்றதுதான் உயிர் .அதில்விழும் வினைத்துளிகளில் உயிர் உறைந்து போகிறபோது வந்து கடைகிறது மரணத்தின் மத்து.மரணம் மட்டுமல்ல.மரணத்துக்கு நிகரான எந்த வேதனையும் உயிரை மத்துப்போல்தான் கடையும். சீதையைப் பிரிந்து இராமன்…

கடலைக் கடைந்ததே வேண்டாத வேலை! திரிபுரங்களை ஆள்பவள் திரிபுரசுந்தரி.மனிதனின் உடல் மனம் உயிர் ஆகிய முப்புரங்களையும் அவளே ஆள்கிறாள். இந்த முப்புரங்களிலும் உள்ளும் புறமுமாய்ப் பொருந்துகிற அபிராமவல்லியின் திருமுலைகள் செப்புக்கலசங்களைப் போன்றவை. தனபாரங்களால் அம்பிகையின்…

ஞானிகளுக்கு கல்வி தேவையில்லை. நாம் வாசிக்கும் அளவு அவர்கள் வாசிக்கிறார்களா என்பது கூட ஐயமே.ஆனால் நாம் நினைத்தும் பாராத பல நுட்பங்கள் அவர்களுக்குப் புரிபடுகின்றன.காணாதன காண்கிறார்கள்.காட்டாதன காட்டுகிறார்கள். ஒரு நூலைப் புரட்டிய மாத்திரத்தில் அதன்…

3.விரலருகாய்….வெகுதொலைவாய்... அம்பிகைமீது அன்புச் சகோதரர் இசைக்கவி ரமணன் எழுதிப்பாடும் பாடல்களில் ஒரு வரி… “விரலருகாய் வெகுதொலைவாய் இருக்கின்றாய்…உன்னை  வென்றோம் என்றவர் நெஞ்சில் அமர்ந்து விழுந்து விழுந்து சிரிக்கின்றாய்”. சென்றடையாச் செல்வம் என்று நாயன்மார்கள் இறைவனைக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு அதே இறைவன் தொடரும் துணையாய் வந்து கொண்டேயிருக்கிறான். முந்தைய அந்தாதிப் பாடல் அம்பிகையை விழுத்துணை என்கிறது.வாழ்வில்…

2. புதிரின் விடைபோலப் புலரும் இளங்காலை 2009 ஆம் ஆண்டு. அக்டோபர் மாதம் 15ஆம் நாள். விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் மயிலாடுதுறையிலிருந்து திருக்கடவூர் சென்று கொண்டிருந்தேன். என் நினைவுகள் இருபத்தோராண்டுகள் பின்னோக்கிப் பறந்தன.தொழிலதிபர் திரு.ஏ.சி.…

( அபிராமி அந்தாதி நூலுக்கு என் விளக்கவுரை, ” அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்” என்னும் தலைப்பில் வெளிவந்தது. அந்நூலின் சில பகுதிகளைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்)      1. பேசி முடியாப்…

எவ்வளவுதான் கடுமையான பணிச்சுமையாய் இருக்கட்டும். சுகா சிலகடமைகளிலிருந்து தவறுவதேயில்லை. திரைப்படப் பணிகள் ஒருபக்கம்,இளையராஜா 1000 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ஒரு பக்கம் என கடும் வேலைகளுக்கு நடுவிலும் நண்பர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக வந்து…