சிவபெருமானுக்கு மாணிக்கவாசகர் பாடும் திருப்பள்ளியெழுச்சி திருவெம்பாவையின் இணைப்பதிகமாக காணப்படுகிறது. வாழ்வின் மூல முதலே சிவன் எனும் பொருளில் “போற்றியென் வாழ்முதல் ஆகிய பொருளே” என்று தொடங்குகிறார்.உயிரின் சிறப்பே அதற்குள் இருக்கும் இறைத்தன்மை. தனக்குள் இருக்கும்…
சைவத்தின் உயிர்நாடி சிவப்பரம்பொருளின் செங்கழல் இணைகளில் சென்று சேரும் நற்கதி. உயிரின் கடைத்தேற்றத்தை சிவபெருமான் திருவடிகள் எவ்வாறெல்லாம் நிகழ்த்துகின்றன என்பதை நிரல்படச் சொல்கிறார். அனைத்திற்கும் ஆதியாகவும் அந்தமாகவும் அமையும் திருவடிகளே,உயிர்களைத் தோற்றுவிக்கின்றன.உயிர்க்குரிய போகங்களையும் அருள்கின்றன.உயிர்களின்…
தன் தந்தை மாமனாராகும் தருணம் குறித்த கேலிச்சொல் அக்காலத்துப் பெண்கள் மத்தியில் இருந்திருக்குமோ என்னும் யூகத்தை இப்பாடல் கிளப்பி விடுகிறது. இப்படி வைத்துக் கொள்வோம்.ஒரு தந்தைக்கு இரண்டு பெண்கள். முதல் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்தார்.…
மூட இருள் மூடிய உயிர் பேதங்கள் வகுக்கிறது. பூமியை விண்ணை பெண்ணை ஆணை அலியை வெவ்வேறாய் பார்க்கிறது.ஆனால் இறையருள் என்னும் ஒளி பரவும் போது படைப்பென்னும் அற்புதத்தில் அனைத்துமே அங்கங்கள் என்னும் தெளிவு பிறக்கிறது.…
ஒளியின் ஸ்வரங்கள் ஒலிக்கிற நேரம் வெளிச்சத் தந்தியில் விரல்தொடுவாயா? களியின் மயக்கம் கவிதரும் நேரம் குயிலே குயிலே குரல்தருவாயா வெளிச்சம் இசையாய் வருகிற நேரம் வந்துன் அழகால் நிறம் தருவாயா கிளிகள் கொத்தும் கனியின்…
இந்தப் பாடலில் ஒரு குட்டு வெளிப்படுகிறது.ஆங்கிலத்தில் the cat is out என்பார்கள்.தோழிகள்,அதுவும் தினமும் பழகுபவர்கள்,மறுநாள் காலை வருவதாக முன்னறிவிப்பு தந்தவர்கள்,தெருவில் சிவநாமத்தைப் பாடி வருகையில் படுக்கையில் துடித்துப் புரள்வதும் மூர்ச்சையாவதும் சமாதி நிலைக்குப்…
முகிலை முகிலே என அழைக்காமல்,மழையே என்றழைத்துப் பேசுகிறார் மாணிக்கவாசகர். ஆண்டாளும் ஆழி மழைக்கண்ணா என்று திருப்பாவையில் பாடுவதை நினைவுபடுத்திக் கொள்ளலாம். முகில் கண்ணன் திருவுருவை ஒத்திருப்பதாக ஆண்டாள் பாடுவதும், முகில் அம்பிகை திருவுருவை ஒத்திருப்பதாக…