இமைகள் நான்கும் கிழக்கானால் – நாம் நாம் இரண்டு விடியல்கள் சுமக்கின்றோம் தமையை உணராதிருப்பதனால் – நாம் துயரம் என்று தவிக்கின்றோம் சிமிழின் உள்ளே சிறைகிடக்க – அட சிங்கங்கள் தாமாய் புகுவதென்ன? சுமைகள்…
பல்லவி ———— ஒரு பார்வை….ஒரு புன்னகை உயிரையும் தருவான் சீடன் குருமேன்மை …அறியாமல் குதர்க்கம் சொல்பவன் மூடன் பலர்வாழ்வில் இருள்நீங்க ஒளியாய் வந்தவன் ஈசன்… நலம்யாவும் நமதாக தனையே தருகிற நேசன் சரணம்-1 ————…
ஆயிரம் எரிமலை எரிக்கிற எதையும் அன்பெனும் மழைத்துளி அணைத்துவிடும் காயங்கள் எத்தனை மனம் கொண்டாலும் கனிவே நம்பிக்கை மலர்த்திவிடும் மாயங்கள்ௐ செய்வது மானிட நேயம் மனதில் இதனைப் பதித்துவிடு சாயம் போனவர் வாழ்வினில் நீயே…
வீணையை உறையிட்டு மூடிவைத்தும் வீணை என்பதை வடிவம் சொல்லும்! பூணும் உறையினுள் வாளிருந்தும் புரிபடும் வாளென்று… பார்த்ததுமே! காலம் வரும்வரை காயாக காலம் கனிந்ததும் கனியாக கோலங்கள் மாற்றும் தாவரங்கள் கூடிச் சுவைத்திடும் பறவையெலாம்!…
உருட்டிய தாயத்தின் எண்ணிக்கை ஒவ்வொரு தடவையும் கலந்துவரும் விரட்டிய பாம்பால் விழுந்தவரும் ஏணியில் ஏறவே பரமபதம்! தோற்பதும் வெல்வதும் தொடருவது தொடக்கத்தில் யாருக்கும் இருப்பதுதான் ஆட்டத்தின் சூட்சுமம் விளங்கிவிட்டல் அதன் பின்னர் வெற்றி தொடர்கதைகள்…
சூரிய வாளியில் வெய்யிலை நிரப்பி சூட்டைத் தெளிக்கும் வானம் காரியம் இதனைப் பார்த்துக் கொண்டே காத்துக் கிடக்கும் மேகம் பேரிகை போல இடியை முழக்கிப் பொழிய வளர்த்து வேளை வருகையில் வீசியடிப்பதே ஞானம்! உன்னில்…
காலத்தால் பண்படுதல் மனித நீதி கருணைதான் நீதிக்குள் குலவும் சோதி கோலங்கள் மாறுகையில் திட்டம் மாறும் கொள்கைகள் வளர்கையிலே சட்டம் மாறும் வேலெடுத்து நாட்டியதும் வீரம் அன்று வெண்கொடியைக் காட்டுவதும் விவேகம் இன்று நூலறிவும்…
படையோடு நடைபோடு படையோடு நடைபோடு வாழத்தானே பூமிக்கு வந்தோம் வெற்றிகள் குவித்திட ஏதுதடை தோழா நாமும் தோற்பதும் இல்லை தொடர்ந்து நடக்கும் நமதுபடை பாதையின் தடைகள் யாவும் கடந்து தோள்கள் தட்டி நடைபோடு வேதனை…
தனித்தனியாய் நாமொரு துளி துளித்துளியாய் நாமொரு கடல் தனித்தனியாய் நாமொரு கனி கனி கனியாய் நாமொரு வனம் தனித்தனியாய் அனுபவங்கள் தொகுத்துவைத்தால் சரித்திரங்கள் தனித்தனியாய் சம்பவங்கள் தொகுத்துச் சொன்னால் சாதனைகள் தனித்தனியாய் தவத்திலிரு வரம்கிடைத்தால்…
காற்று நடக்கிற வான்வெளியில் – உன் கனவுகள் இருக்கும் பத்திரமாய் நேற்று நிகழ்ந்த சம்பவங்கள் – உன் நினைவில் இருக்கும் சித்திரமாய் கீற்று வெளிச்சம் படிந்தபின்னே – இருள் கூடாரங்கள் கலைத்துவிடும் ஆற்றல் அரும்பி…