சின்னச் சின்ன தோல்விகளை சொல்லித் திரிவேன் நானாக “என்ன? எப்போ?” என்றபடி எதிரிகள் எல்லாம் கதை கேட்பார் இன்னும் கொஞ்சம் சுவைசேர்த்து இட்டுக் கட்டிப் பரப்பிடுவேன் தன்னை மறந்த மகிழ்ச்சியிலே தாமும் கதைசொல்லப் புறப்படுவார்…
புதிதாய் திருமணம் ஆனவர்க்கு பணமோ பொருளோ தருவீர்கள் புதுமனை புகுகுற உறவினர்க்கு பரிசுப் பொருட்கள் தருவீர்கள் புதிதாய் வாடிக்கையாளர் எனில் பரிசும் சலுகையும் தருவீர்கள்.. புதிதாய் ஆண்டு வருகிறதே புதிதாய் என்ன தருவீர்கள். உங்கள்…
குருவெனும் முழுநிலவு வளர்பிறை அதன்பரிவு அருள்நிழல் தரும் பொழுது அகிலமும் அவன்விழுது ஒளியினில் உயிர்நனைய ஒலியினில் இசைநனைய களிதரும் அமுதமென குருவருள் வரும்பொழுது நடுநிசி வரையினிலே நாதனின் குடிலினிலே உடைபடும் வினைமுழுதும் உன்னதன் அடிதொழுது…
“கலகல” வென்று சிரித்தால் என்ன கவலை வரும்போது “சிடுசிடு” வென்று இருப்பதாலே எதுவும் மாறாது ஒருசில நாட்கள் சூரியன் தூங்கும் ஒருசில நாட்கள் தவறாய்ப்போகும் நடக்கும் தவறு நமது லீலை சிரித்து விட்டுத் தொடர்க…
வீசும் புயலை வெளியில் நிறுத்து பேசும் பேச்சில் பேரொளி மலர்த்து ஈசல் போலே இறகுதிராதே வாசல் திறக்கும் வாடி விடாதே தடங்கல்கள் எத்தனை தாண்டியிருக்கிறாய் மயங்கி நிமிர்ந்து மீண்டிருக்கிறாய் நடுங்கும் அவசியம் நமக்கினி இல்லை…
“வானில் ஒருவன் விதைவிதைத்தால் வயலில் அதுவந்து முளைத்திடுமா?” ஏனோ இப்படி ஒரு கேள்வி எழுந்தது ஒருவன் மனதினிலே ஞானி ஒருவர் முன்னிலையை நாடிச் சென்றே அவன் கேட்டான் தேனாய் சிரித்த பெரியவரோ தெளிவாய்ச் சொன்னார்.…
காலம் எழுதும் குறிப்பேட்டில் – உன் கனவுகள் நிலுவையில் உள்ளன! ஆலாய் பறக்கும் மானிடனே – உன் ஆசைகள் எங்கே போயின நீலம் நுரைக்கும் ஆகாயம் – நீ நிமிரும் நாளெதிர் பார்த்திடும் வேலைகள்…
பிரளயம் எழுந்தே அடங்கும் பிரபஞ்சம் புதிதாய்த் தொடங்கும் நரக வலிகளும் முடங்கும் வருகிற காலம் விளங்கும் தீர்ப்பின் நிறங்கள் மாறும் தீர்வை நோக்கிப் போகும் போர்கள் முடிந்து மௌனம் போதனை தேடும் இதயம் மோதலின்…
உடன்வருவோர் வாழ்வினிலே சிலபேர் – நல்ல உயிர்போலத் தொடர்பவர்கள் சிலபேர் கடன்போலக் கழிபவர்கள் சிலபேர் – இதில் காயங்கள் செய்பவர்கள் சிலபேர். கைக்குலுக்கிச் செல்பவர்கள் சிலபேர் – வந்து கலகலப்பாய்ர் பழகுபவர் சிலபேர் கைக்கலப்பில்…
கனிமொழி.ஜி.யின் முந்தைய தொகுதி குறித்தும் நான் எழுதியிருக்கிறேன். “கோடை நகர்ந்த கதை” என்றும் அவரின் இரண்டாம் தொகுதியும் எழுதத் தூண்டுகிறது. “சிவிகை சுமப்பவனுக்கு தன் காய்ப்பேறிய தோள்களைக் கொத்தும் காகம் குறித்து புகார்களேதும் இல்லை”…