கீற்று நிலாவினில் பாலினை ஊற்றிக் கிறுக்கன் தலைசுமந்தான் ஊற்றி விடுமென்ற அக்கறை இன்றி ஊர்த்துவம் ஆடுகிறான் ஈற்றினை அறியா வான்வெளியெங்கும் ஈசன் ஆடுகிறான் போற்றி யிசைக்கிற விண்மீன் திரள்களின் பாட்டினுக் காடுகிறான் நாதம் இவனது…
பைரவி வந்தாள் பைரவி வந்தாள் பத்துத் திசையதிர ஷங்கரி வந்தாள் ஷாமளை வந்தாள் எங்கள் உளம் குளிர கண்ணொரு மூன்றிலும் மின்னும் நெருப்புடன் அன்னை உருவெடுத்தாள் எண்ணிய காரியம் யாவும் நடத்திட இங்கு குடிபுகுந்தாள்…
நீவந்த நாளின்றுதானோ-இதை நீசொல்லி நான்நம்புவேனோ வான்வந்த நாள்தானே நீவந்தநாள்-மலரில் தேன்வந்த நாள்தானே உன் பிறந்தநாள் ஆதார சுருதிக்கு ஆண்டேது நாளேது அய்யாநீ அதுபோன்ற சங்கீதமே பேதங்கள் ஏதொன்றும் பாராத திருவேநீ பிரபஞ்சங்கள் முழுமைக்கும் பூபாளமே…
முன்பொரு பிறவியில் முகம்பார்த்தேன் -உன் மோன நெருப்பிலென் வினை தீர்த்தேன் பின்னரும் பிறவிப் பிணிசேர்த்தேன் -உன் பொன்னிழல் சேர்ந்திடும் வழிகேட்டேன் கருவூர் குடிபுகும் உயிருக்கெல்லாம்- நல்ல கதிதர உனக்குத் திருவுளமோ நெரூரில் அமர்ந்த நல்லொளியே-…
சொல்லால் கனத்தமனம் சூனியத்தால் இன்பமுறும் நில்லா நினைவுகள் நின்றுவிடும்-பொல்லாக் குரங்கு மனமிதுவுங் குன்றேறி நிற்கும் விரல்பறிக்கும் ஞானக் கனி. சச்சரவுக் கிச்சையாய் சாடுகிற சாட்டையும் உச்சரிக்கும் சொல்லென் றுணர்வோமே-நச்சரிக்கும் வார்த்தைகளைச் சாடி வரிசையிலே வாவென்று…
1.குமரித் தெய்வம் சின்னஞ் சிறுமியிவள்- நம் செல்வக் குமரியிவள் என்னில் நிறைந்திருக்கும்-ஓர் இன்பக் கவிதையிவள் தன்னந் தனிமையிவள்-உயர் தாய்மைக் கனிவு இவள் பொன்னில் எழுதிவைத்த -ஒரு புன்னகை ஜோதியிவள் வாலைக்குமரியிவள்- நம் வாழ்வின் பெருமையிவள்…
15.10.2009 திருக்கடையூர் அதே முகம்……அதேசுகம்…..அன்று தொலைந்ததே அதே இதம் நெஞ்சில் நிறைந்ததே அவள் பதம் பிறவி பலவாகப் பார்த்த முகம் -என்கனவில் பலநேரம் பூத்த முகம்மறந்து கிடந்தாலும் தேடும் முகம்-ஒருமறுமை இல்லாமல் சாடும் முகம்…
2009 அக்டோபர் 15. திருக்கடையூரை நெருங்க நெருங்க அதிகாலை வேளையில் செந்நிலவாய் எழுந்தது சூரியன்.அங்கேயே நிகழ்ந்தது அபிராமி தரிசனம் புதிரின் விடைபோலப் புலரும் இளங்காலை…. கதிரை நிலவாக்கினாள் அதிரும் மனம் ஓய அருளும் அபிராமி…
நீரலையின் சாட்டைகொண்டு ஆடுகிறாள் அன்னை நேரவரும் யாவரையும் சாடுகிறாள் அன்னை பேரொலியின் தாளமிட்டுப் பாடுகிறாள் அன்னை பாய்ந்துவந்து எனையணைக்கத் தேடுகிறாள் அன்னை ஆடுகிறாள் அன்னை-அவள் -தேடுகிறாள் என்னை வான்கருணை அருவியாக வந்து இறங்கும்-அதில் ஊன்நனைந்து…
காசிநகரில் கங்கை வீசும் நதியலைகள் பேசும் மொழிநமசி வாயம் கீசுகீசெனவே பூசலிடுங்கிளிகள் பாஷை அதுநமசி வாயம் ஆசைவிடும்தருணம் ஆகிவரும் மரணம் வாசல் வரும்நமசி வாயம் பாசம் விடும்மனதும் பாரம் சுடும்நொடியில் ஈசன் குரல்நமசி வாயம்…